Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் | புவியியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் | 10th Social Science : Geography : Chapter 2 : Climate and Natural Vegetation of India

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும். II. பொருத்துக. III. கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்யவும். IV. பொருந்தாத விடையைத் தேர்வு செய்க.- சமூக அறிவியல் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள் - புவியியல் : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

அலகு 2

இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

 

பயிற்சி

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

 

1. மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி ------------.

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) பஞ்சாப்

ஈ) மத்தியப் பிரதேசம்

[விடை: (இ) பஞ்சாப்]

 

2. கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு ------------------- காற்றுகள் உதவுகின்றன.

அ) லூ

ஆ) நார்வெஸ்டர்ஸ்

இ) மாஞ்சாரல்

ஈ) ஜெட் காற்றோட்டம்

[விடை: (இ) மாஞ்சாரல்]

 

3. ஒரே அளவுள்ள மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு -------------- ஆகும்.

அ) சமவெப்ப கோடுகள்

ஆ) சம மழைக்கோடுகள்

இ) சம அழுத்தக் கோடுகள்

ஈ) அட்சக் கோடுகள்

[விடை: (ஆ) சம மழைக்கோடுகள்]

 

4. இந்தியாவின் காலநிலை ------------------- ஆக பெயரிடப்பட்டுள்ளது.

அ) அயன மண்டல ஈரக் காலநிலை

ஆ) நிலநடுக்கோட்டுக் காலநிலை

இ) அயன மண்டல பருவக்காற்றுக் காலநிலை

ஈ) மித அயனமண்டலக் காலநிலை

[விடை: (இ) அயன மண்டல பருவக்காற்றுக் காலநிலை]

 

5. பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

அ) அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்

ஆ) இலையுதிர்க் காடுகள்

இ) மாங்குரோவ் காடுகள்

ஈ) மலைக் காடுகள்

[விடை: (ஆ) இலையுதிர்க் காடுகள்]

 

6. சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் ----------------.

அ) தமிழ்நாடு

ஆ) ஆந்திரப் பிரதேசம்

இ) மத்தியப் பிரதேசம்

ஈ) கர்நாடகா

[விடை: ஆ) ஆந்திரப் பிரதேசம்]

 

7. யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது ----------------.

அ) நீலகிரி

ஆ) அகத்திய மலை

இ) பெரிய நிக்கோபர்

ஈ) கட்ச்

[விடை: (ஈ) கட்ச்]

 

II. பொருத்துக.

 

1. சுந்தரவனம் - பாலை மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்கள்

2. உயிர்பன்மைச் சிறப்பு பகுதிகள் - அக்டோபர், டிசம்பர்

3. வடகிழக்குப் பருவக்காற்று - கடற்கரைக் காடுகள்

4. அயன மண்டல முட்புதர் காடுகள் - மேற்கு வங்காளம்

5. கடலோரக் காடுகள் - இமயமலைகள்

விடை:

1. சுந்தரவனம் - மேற்கு வங்காளம்

2. உயிர்பன்மைச் சிறப்பு பகுதிகள் - இமயமலைகள்

3. வடகிழக்குப் பருவக்காற்று - அக்டோபர், டிசம்பர்

4. அயன மண்டல முட்புதர் காடுகள் - பாலை மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்கள்

5. கடலோரக் காடுகள் - கடற்கரைக் காடுகள்

 

III. கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

 

1. கூற்று : இமயமலையானது ஒரு காலநிலை அரணாகச் செயல்படுகிறது.

காரணம் : இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்காற்றை தடுத்து இந்தியத் துணைக்கண்டத்தை மிதவெப்பமாக வைத்திருக்கிறது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரி.

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு.

இ) கூற்று சரி காரணம் தவறு.

ஈ) கூற்று தவறு காரணம் சரி.

[விடை : (அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரி]

 

IV. பொருந்தாத விடையைத் தேர்வு செய்க.

 

1. ஓதக்காடுகள் இதனைச் சுற்றி காணப்படுகிறது.

அ) பாலைவனம்

ஆ) கங்கை பிரம்மபுத்ரா டெல்டா

இ) கோதாவரி டெல்டா

ஈ) மகாநதி டெல்டா

[விடை: (அ) பாலைவனம்]

 

2. இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்

அ) அட்ச பரவல்

ஆ) உயரம்

இ) கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்

ஈ) மண்

[விடை: (ஈ) மண்]

 

Tags : Climate and Natural Vegetation of India | Geography | Social Science இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் | புவியியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Geography : Chapter 2 : Climate and Natural Vegetation of India : One Mark Questions Answers Climate and Natural Vegetation of India | Geography | Social Science in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் : ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் - இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் | புவியியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்