மழைப் பரவல்
இந்தியாவில்
ஆண்டு சராசரி மழையளவு 118 செ.மீ இருப்பினும் நாட்டின்
மழைவீழ்ச்சியின் பரவல் சீரற்று காணப்படுகிறது.
மேற்கு கடற்கரை,
அசாம்,
மேகாலயாவின் தென்பகுதி,
திரிபுரா,
நாகலாந்து,
அருணாச்சலப்பிரதேசம் போன்ற பகுதிகள் 200
செ.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவையும்
பெறுகின்றன. இராஜஸ்தான் மாநிலம் முழுவதும்,
பஞ்சாப்,
ஹரியானா,
உத்திரப்பிரதேச
மாநிலத்தின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள்,
மத்தியப்
பிரதேசத்தின் மேற்கு பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதி
மற்றும் தக்காணப் பீடபூமி பகுதி மற்றும் தமிழக கடற்கரையின் ஒரு குறுகியப்பகுதி
போன்றவை 100 செ.மீட்டருக்கும் குறைவான
மழைப்பொழிவைப் பெறுகின்றன. மற்ற பகுதிகள் 100
முதல்
200 செ.மீ வரையிலான மழைப்பொழிவைப் பெறுகின்றன.