இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் | புவியியல் | சமூக அறிவியல் - பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும். | 10th Social Science : Geography : Chapter 6 : India - Population, Transport, Communication & Trade
V. பின்வரும் வினாக்களுக்கு
விரிவான விடையளிக்கவும்.
1. நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன்
சிக்கல்கள் யாவை?
நகரமயமாக்கம்:
கிராமப்புற சமுதாயம் நகர்ப்புற சமுதாயமாக மாற்றமடைவதையே நகரமயமாக்கம் என்கிறோம்.
நகரமயமாக்கலின் சிக்கல்கள்:
• நகரமயமாக்கலும், மக்கள் தொகை அடர்த்தியும்
ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை.
• கிராமத்திலிருந்து நகரங்களுக்கு இடப்பெயர்தல் நகர்ப்பகுதிகளில் மக்கள்
தொகை வெடிப்பிற்கு வழிவகுக்கின்றது.
இந்தியாவில் நகரமயமாக்கலால் ஏற்படும் பிரச்சனைகள்:
• நகர விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது.
• நகர்புறங்களில் குடியிருப்புகளின் பற்றாக்குறையை உருவாக்குகிறது. .
• குடிசைப் பகுதிகள் தோன்ற காரணமாக உள்ளது.
• போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்துகிறது.
• குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது.
2. இந்தியாவில் செயற்கைகோள் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை
விளக்குக.
• செயற்கைக்கோளானது தொடர்ச்சியாக மிகப்பெரும் பரப்பிலான பதிமம் மற்றும்
தகவல்களை அளிக்கிறது.
• செயற்கைக்கோள் பதிமங்களைப் பயன்படுத்தி வானிலை ஆய்வு, வானிலை முன் அறிவிப்பு, இயற்கை
பேரழிவு கண்காணிப்பு, எல்லை பகுதி கண்காணிப்பு போன்ற முக்கிய
பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
• இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு இரண்டு பிரிவுகளைக்
கொண்டது. அவை: இந்திய தேசிய செயற்கைக்கோள்
அமைப்பு, இந்திய தொலையுணர்வு செயற்கைக்கோள் அமைப்பு.
• 1983-இல் நிறுவப்பட்ட
இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு தொலை தொடர்பு, வானியல் ஆய்வு மற்றும் பல்வேறு திட்டங்களை
உள்ளடக்கிய ஒரு பல்நோக்கு திட்ட அமைப்பாக உள்ளது.
• இன்சாட் வரிசை செயற்கைக்கோள், கைபேசி
தொலைபேசி, வானொலி மற்றும் தொலைக்காட்சிகளுக்கு சமிக்கைகளை அனுப்ப
பயன்படுகிறது.
• வானிலையை கண்டறியவும், இராணுவ
பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
• இன்சாட் வரிசை, ஜி-சாட் வரிசை கல்பனா 1, ஹேம்சாட், எஜுசாட் போன்றவை தகவல் தொடர்பிற்காக பயன்படுத்தப்படும் முக்கிய செயற்கைக்கோளாகும்.
3. இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக.
இந்திய சாலைகள்
• தேசிய நெடுஞ்சாலைகள்
• மாநில நெடுஞ்சாலைகள்
• மாவட்ட சாலைகள்
• கிராமப்புறச் சாலைகள்
• எல்லையோர சாலைகள் மற்றும்
• பன்னாட்டு நெடுஞ்சாலைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய சாலைகளின்
வகைகள்:
அ) தேசிய
நெடுஞ்சாலைகள்
• தேசிய நெடுஞ்சாலைகள் வடக்கு-தெற்கு,
கிழக்கு-மேற்காக நாட்டின் எல்லைகளையும்,
மாநிலங்களின் தலைநகரங்கள், முக்கியத் துறைமுகங்கள்,
இரயில் நிலையங்கள், முக்கிய சுற்றுலா மையங்கள்,
தொழில் மையங்கள் ஆகியவற்றை இணைக்கின்றன.
• இந்தச் சாலைகள் இந்திய அரசின் தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத் துறை பராமரிக்கிறது.
• இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை NH 7 ஆகும்.
ஆ) மாநில
நெடுஞ்சாலைகள்:
• மாநிலத்திலுள்ள முக்கிய மாநகரங்கள், நகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களை மாநில தலைநகரத்துடனும்
தேசிய நெடுஞ்சாலைகளுடனும் அண்டை மாநில நெடுஞ்சாலைகளுடனும் இணைக்கின்றன.
• இந்தச் சாலைகளை மாநில பொதுப்பணித்துறை பராமரிக்கிறது.
இ) மாவட்டச்
சாலைகள்:
• மாவட்டச் சாலைகளானது மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன்
மாவட்ட மற்றும் வட்டார தலைமை இடங்களை இணைக்கிறது.
• மாவட்ட சாலைகள் மாநிலத்தின் பொதுப் பணித்துறையால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
ஈ) ஊரகப்
பகுதி சாலைகள் (கிராமச் சாலைகள்):
• இச்சாலைகள் கிராமப்புறங்களை இணைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது.
• இது பல்வேறு கிராமங்களை அதன் அருகில் உள்ள நகரங்களுடன் இணைக்கிறது.
• இவைகளை கிராம பஞ்சாயத்துகளால் பராமரிக்கப்படுகின்றன.
உ) எல்லைப்புறச்
சாலைகள்:
• எல்லைப்புறச் சாலைகள் நாட்டின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு
சாலை வகைகளாகும்.
• இவைகள் எல்லைப்புறச் சாலைகள் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு
வருகின்றன.
ஊ) தங்க
நாற்கரச் சாலைகள்:
• இது 5,846 கி.மீ நீளத்தையும் 4 முதல் 6 வழிகளைக்
கொண்டதாகவும் உள்ளது.
• இது வடக்கு தெற்காக இந்தியாவின் நான்கு பெரு நகரங்களான புதுடெல்லி – கொல்கத்தா - சென்னை
- மும்பை - புதுடெல்லி ஆகியவைகளை இணைக்கிறது.
எ) விரைவுச்
சாலைகள்:
நன்கு மேம்படுத்தப்பட்ட தரமான பல்வழிப் பாதைகளைக் கொண்ட அதிவேக போக்குவரத்திற்கான
சாலைகள் ஆகும். எ.கா:
மும்பை - பூனா விரைவுச் சாலை.
ஏ) பன்னாட்டு
நெடுஞ்சாலைகள்:
• இந்தியாவை அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன்
இணைக்கப்பட்டுள்ளது.
• இச்சாலைகள் பாகிஸ்தான், நேபாளம்,
பூடான், வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய அண்டை
நாடுகளை இணைக்கின்றன.