இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் | புவியியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் | 10th Social Science : Geography : Chapter 6 : India - Population, Transport, Communication & Trade
அலகு 5
இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து,
தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
பயிற்சி
I. சரியான விடையைத் தேர்வு
செய்யவும்.
1. மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல்
பூர்வமான படிப்பு -------------.
அ)
வரைபடவியல்
ஆ) மக்களியல்
இ) மானுடவியல்
ஈ) கல்வெட்டியல்
[விடை: (ஆ)
மக்களியல்]
2. ---------------- போக்குவரத்து நேரடியாக
உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது.
அ) இரயில்வே
ஆ) சாலை
இ) வான்வழி
ஈ) நீர்வழி
[விடை: (ஆ)
சாலை]
3. இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம்
அ) 5846 கி.மீ
ஆ) 5942
கி.மீ
இ) 5630
கி.மீ
ஈ) 5800
கி.மீ
[விடை : (அ) 5846 கி.மீ]
4. தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் -------------.
அ) பெங்களூரு
ஆ) சென்னை
இ) புது டெல்லி
ஈ) ஹைதராபாத்
[விடை: (ஈ)
ஹைதராபாத்]
5. எளிதில் செல்லமுடியாத பகுதிகளுக்கு பயன்படும் போக்குவரத்து
அ) சாலைப் போக்குவரத்து
ஆ) இரயில் போக்குவரத்து
இ) வான்வழிப் போக்குவரத்து
ஈ) நீர்வழிப் போக்குவரத்து
[விடை: (இ)
வான்வழிப் போக்குவரத்து]
6. கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன்
(ஹெலிகாப்டர்) தொடர்புடையது?
அ) ஏர் இந்தியா
ஆ) இந்தியன் ஏர்லைன்ஸ்
இ) வாயுதூத்
ஈ) பவன்ஹான்ஸ்
[விடை: (ஈ)
பவன்ஹான்ஸ்]
7. இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்
அ) சிமெண்ட்
ஆ) ஆபரணங்கள்
இ) தேயிலை
ஈ) பெட்ரோலியம்
[விடை: (ஈ)
பெட்ரோலியம்]
II. பொருத்துக.
1.
எல்லைபுறச் சாலை - செயற்கைகோள் தகவல் தொடர்பு
2. INSAT (இன்சாட்) - நகரமயமாக்கலின் தாக்கம்
3.
மேசகான் கப்பல்கட்டும் தளம் -
1990
4.
புறநகரப் பரவல் - மும்பை
5.
கொங்கண் இரயில்வே - 1960 ஹைதராபாத்
விடை:
1. எல்லைபுறச் சாலை - 1960 ஹைதராபாத்
2. INSAT
(இன்சாட்) - செயற்கைகோள் தகவல் தொடர்பு
3. மேசகான் கப்பல்கட்டும் தளம் - மும்பை
4. புறநகரப் பரவல் - நகரமயமாக்கலின்
தாக்கம்
5. கொங்கண் இரயில்வே - 1990