நகரமயமாக்கம்
கிராமப்புற
சமுதாயம் நகர்புற சமுதாயமாக
மாற்றமடைவதையே நகரமயமாக்கம் என்கிறோம்.
நகர்புற
மக்கள் தொகை சதவிகிதத்தின் அடிப்படையிலேயே நகரமயமாக்கம்
அளவிடப்படுகிறது.
இந்தியாவில்
கோவா மாநிலம் மிகுந்த நகரமயமாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இமாச்சல பிரதேசம் குறைந்த
நகரமயமாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. யூனியன் பிரதேசங்களுக்கிடையில் புதுடெல்லி
மற்றும் சண்டிகர் மிகுந்த நகரமயமாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. மாநிலங்களுள் மிகுந்த
நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாவதாக தமிழ்நாடும் அதைத்தொடர்ந்து கேரளா
மற்றும் மகராஷ்டிராவும் உள்ளன.
நகரமயமாக்கலும்
மக்கள் தொகை அடர் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடை கிராமத்திலிருந்து நகரங்களுக்கு
இடப்பெ நகர்பகுதிகளில் மக்கள் தொகை வெடி வழிவகுக்கிறது. மும்பை, கொல்கத்தா, புதுடெல்லி
போன்ற பெருநகரங்கள் தங்கள் கொள்ளளவை விட அதிகமான மக்கள் தொகையுடன்
காணப்படுகின்றன.
இந்தியாவில்
நகரமயமாக்கலால் ஏற்படும் பிரச்சனைகள்:
• நகர விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது.
•
நகர்புறங்களில்
மக்கள் நெருக்க தோற்றுவிக்கிறது.
•
நகர்புறங்களில் குடியிருப்பு
பற்றாக்குறையை உருவாக்குகிறது.
•
குடிசைப்
பகுதிகள் தோன்ற காரணமாக உள்ளது.
•
போக்குவரத்து
நெரிசலை அதிகப்படுத்துகிறது.
•
குடிநீர்
பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது.
•
வடிகால்
பிரச்சனைகள் உண்டாகின்றன.
•
திடக்கழிவு
மேலாண்மையை சிக்கலாக்கிறது.
•
குற்றங்கள்
அதிகரிக்க காரணமாகின்றன.