Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | கணக்குகளில் சதவீதத்தின் பயன்பாடுகள்

கேள்வி பதில்கள், தீர்வுகள் | வாழ்வியல் கணிதம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு கணக்கு - கணக்குகளில் சதவீதத்தின் பயன்பாடுகள் | 8th Maths : Chapter 4 : Life Mathematics

   Posted On :  21.10.2023 08:16 pm

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வாழ்வியல் கணிதம்

கணக்குகளில் சதவீதத்தின் பயன்பாடுகள்

சதவீதம் என்பது ஒரு நூற்றுக்கு அல்லது ஒரு நூறில் எனப் பொருள்படும் என்பதை நாம் அறிவோம். அது % என்ற குறியீட்டால் குறிக்கப்படும். x% என்பது x / 100 என்ற பின்னத்தைக் குறிக்கும்.

கணக்குகளில் சதவீதத்தின் பயன்பாடுகள்

சதவீதம் என்பது ஒரு நூற்றுக்கு அல்லது ஒரு நூறில் எனப் பொருள்படும் என்பதை நாம் அறிவோம். அது % என்ற குறியீட்டால் குறிக்கப்படும். x% என்பதுஎன்ற பின்னத்தைக் குறிக்கும். அது அளவுகளை எளிதாக ஒப்பிடுவதற்குப் பயன்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைக் கணக்குகளில் நாம் அதன் பயன்களைக் காணலாம்.


எடுத்துக்காட்டு 4.1

600 இன் x % என்பது 450 எனில், x இன் மதிப்பைக் காண்க.  

தீர்வு :

600 இன் x% = 450



எடுத்துக்காட்டு 4.2

ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க.

தீர்வு:

அந்த எண்ணை x என்க .


x = 160

மாற்று முறை

மேலேயுள்ள சூத்திரத்தைப் பயன்படுத்தி,



உங்களுக்குத் தெரியுமா

நாம் A என்ற அளவைக் கொண்டுத் தொடங்கி, அந்த அளவை x% குறைத்தால், நாம்  பெறும் குறைந்த அளவானது

ஆகும்.  


எடுத்துக்காட்டு 4.3

அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள் எனில், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க

தீர்வு

தேர்வின் மொத்த மதிப்பெண்களை x என்க

இங்கு, x இன் 80% = 576


  x = 720

ஆகவே, தேர்வின் மொத்த மதிப்பெண்கள் = 720.


எடுத்துக்காட்டு 4.4

20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை ₹96 எனில், ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க.

தீர்வு :

ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலைx என்க.

20% உயர்வுக்கு பின், புதிய விலை


ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலை, x = ₹80.

மாற்று முறை:

மேலேயுள்ள சூத்திரத்தைப் பயன்படுத்தி


  A = ₹80


உங்களுக்குத் தெரியுமா

நாம் A என்ற அளவைக் கொண்டுத் தொடங்கி, அந்த அளவை x% அதிகரித்தால், நாம் பெறும் அதிகரித்த அளவானது,

ஆகும்.


இவற்றை முயல்க

1. ஒரு நாளில் 10 மணி நேரம் என்பது எத்தனை சதவீதம்? 41.66%

2. R என்ற நபர் பெறுவதில் 50% Q என்ற நபரும், Q பெறுவதில் 50% P என்ற நபரும் பெறுமாறு  P, Q மற்றும் R என்ற மூன்று நபர்களுக்கு ₹350 பிரிக்கவும். R: ₹200 , Q: ₹100, P: ₹50


சிந்திக்க 

ஒரு மாநகரத்தின் போக்குவரத்துக் காவல் ஆணையாளர் பெருமிதத்தோடு, இந்த ஆண்டில் 200% விபத்துகள் குறைந்துள்ளன என அறிவித்துள்ளார். இதனை அவர், சென்ற ஆண்டு 200 இலிருந்து 600 ஆக உயர்ந்த விபத்துகளின் சதவீதம் தெளிவாக 200% ஆகும் எனவும், அது இந்த ஆண்டு 600 இலிருந்து 200 ஆக குறைந்துள்ளது என்பதும் அதே 200% குறைவு ஆகும் என ஒப்பிட்டுக் கூறியுள்ளார். இங்கு 600 இலிருந்து 200 ஆகக் குறைந்துள்ளது என்பது, அவர் அறிவித்துள்ளவாறு அதே 200% ஆகுமா? நியாயப்படுத்துக



எடுத்துக்காட்டு 4.5

ஒரு நபரின் வருமானம் 10% அதிகரிக்கப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில், அவருடைய வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தைக் காண்க


குறிப்பு

கொடுக்கப்பட்ட எண்ணானது முதலில் x% அதிகரிக்கப்பட்டு அல்லது குறைக்கப்பட்டு, பிறகு y% அதிகரிக்க அல்லது குறைக்கப்பட்டால், அந்த எண்ணானது அதிகரிக்கும் அல்லது குறையும். குறைவிற்கு '–' குறியீட்டைப் பயன்படுத்தவும். அதேபோல், '–' குறியீடானது விடையில் இருந்தால், அதனைக் குறைவு எனக் கொள்ளவும். இந்தக் குறிப்பைப் பயன்படுத்தி எடுத்துக்காட்டு 4.5 இன் விடையைச் சரிபார்க்கவும்.

Tags : Questions with Answers, Solution | Life Mathematics | Chapter 4 | 8th Maths கேள்வி பதில்கள், தீர்வுகள் | வாழ்வியல் கணிதம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 4 : Life Mathematics : Applications of Percentage in Word Problems Questions with Answers, Solution | Life Mathematics | Chapter 4 | 8th Maths in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வாழ்வியல் கணிதம் : கணக்குகளில் சதவீதத்தின் பயன்பாடுகள் - கேள்வி பதில்கள், தீர்வுகள் | வாழ்வியல் கணிதம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வாழ்வியல் கணிதம்