Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | பயிற்சி 4.3 (கூட்டுவட்டி)

கேள்வி பதில்கள், தீர்வுகள் | வாழ்வியல் கணிதம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.3 (கூட்டுவட்டி) | 8th Maths : Chapter 4 : Life Mathematics

   Posted On :  21.10.2023 10:31 pm

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வாழ்வியல் கணிதம்

பயிற்சி 4.3 (கூட்டுவட்டி)

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வாழ்வியல் கணிதம் : பயிற்சி 4.3 (கூட்டுவட்டி) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.3


1. கோடிட்ட இடங்களை நிரப்புக :

(i) ₹5000 இக்கு 12% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டுவட்டியானது    ₹272     ஆகும்

(ii)  ₹8000 இக்கு 10% ஆண்டு வட்டியில், ஓர் ஆண்டுக்கு, அரையாண்டுக்கு ஒரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டுவட்டியானது    ₹820    ஆகும்.

(iii) ஒரு நகரத்தின் மக்கள்தொகை ஆண்டுதோறும் 10% வீதம் அதிகரிக்கிறது. அதன் தற்போதைய மக்கள்தொகை 26620 எனில், 3 ஆண்டுகளுக்கு முன் மக்கள்தொகை    20000    ஆகும்.

(iv) கூட்டுவட்டியானது காலாண்டுக்கொரு முறை கணக்கிடப்பட்டால், தொகையை    A = P ( 1 + r/100 )4n      என்ற சூத்திரத்தைப் பயன்படுத்திக் காணலாம்

(v) ₹5000 இக்கு, 8% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம்    ₹32     ஆகும்


2. சரியா, தவறா எனக் கூறுக.

(i) தேய்மான மதிப்பு என்ற சூத்திரம் மூலம் கணக்கிடப்படுகிறது. விடை: தவறு

(ii) ஒரு மாநகரத்தின் தற்போதைய மக்கள்தொகை P என்க. இது ஆண்டுதோறும் r % அதிகரிக்கிறது எனில், n ஆண்டுகளுக்கு முன்பு மக்கள்தொகையானது ஆகும். விடை: சரி

(iii) ஓர் இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு ₹16800. அது ஆண்டுக்கு 25% வீதம் தேய்மானம் அடைகிறது. 2 ஆண்டுகளுக்குப் பின் அதன் மதிப்பு ₹9450 ஆகும். விடை: தவறு

(iv) 20% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்படும் முறையில், ₹1000 ஆனது 3 ஆண்டுகளில் ₹1331 ஆக ஆகும். விடை: தவறு

(v) 20% ஆண்டு வட்டியில், காலாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்படும் முறையில், ₹16000 இக்கு 9 மாதங்களுக்கு கிடைக்கும் கூட்டுவட்டியானது ₹2522 ஆகும். விடை: தவறு


3. ₹3200 இக்கு 2.5% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்படும் முறையில், 2 ஆண்டுகளுக்கு, கிடைக்கும் கூட்டுவட்டியைக் காண்க.



4. ₹4000 இக்கு 10% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்படும் முறையில் ஆண்டுகளுக்கு, கிடைக்கும் கூட்டுவட்டியைக் காண்க.



5. ஓர் அசலானது 2 ஆண்டுகளில், ஆண்டுக்கு 4% கூட்டுவட்டியில் ₹2028 ஆக ஆகிறது எனில், அசலைக் காண்க.



6. ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால் எத்தனை ஆண்டுகளில், ₹3375 ஆனது ₹4096 ஆக மாறும்?



7. I, II மற்றும் III ஆண்டுகளுக்கான வட்டி வீதங்கள் முறையே 15%, 20% மற்றும் 25% எனில், ₹15000 இக்கு 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டியைக் காண்க.



8. ₹5000 இக்கு 2% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், ஓர் ஆண்டுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க.



9. ₹8000 இக்கு, 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹ 20 எனில், வட்டி வீதத்தைக் காண்க.



10. 15% ஆண்டு வட்டியில், 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹1134 எனில், அசலைக் காண்க.




கொள்குறி வகை வினாக்கள் 


11. ஓர் அசலின் மீதான வட்டி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டால், ஓராண்டிற்கு ……………… மாற்றுக் காலங்கள் இருக்கும். 

() 2 

() 4 

() 6 

() 12

விடை: () 6


12. 10% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், ₹4400 ஆனது ₹4851 ஆக எடுத்து கொள்ளும் நேரம்  ………… ஆகும்.

() 6 மாதங்கள் 

() 1 ஆண்டு 

() ஆண்டுகள் 

() 2 ஆண்டுகள் 

விடை: () 1 ஆண்டு


13. ஓர் இயந்திரத்தின் விலை ₹18000. அது ஆண்டுக்கு வீதம் தேய்மானம் அடைகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் மதிப்பு ……………  ஆக இருக்கும்

() ₹12000

() ₹12500 

() ₹15000 

() ₹16500 

விடை: () ₹12500


14. 10% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், 3 ஆண்டுகளில் …………….. என்ற அசலானது ₹2662 தொகையாக ஆகும்

() ₹2000

() ₹1800 

() ₹1500 

() ₹2500 

விடை: () ₹2000


15. 2% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு ஓர் அசலுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹1 எனில், அசல் ஆனது ………………. ஆகும்

() ₹2000 

() ₹1500 

() ₹3000 

() ₹2500 

விடை: () ₹2500

Tags : Questions with Answers, Solution | Life Mathematics | Chapter 4 | 8th Maths கேள்வி பதில்கள், தீர்வுகள் | வாழ்வியல் கணிதம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 4 : Life Mathematics : Exercise 4.3 (Compound Interest) Questions with Answers, Solution | Life Mathematics | Chapter 4 | 8th Maths in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வாழ்வியல் கணிதம் : பயிற்சி 4.3 (கூட்டுவட்டி) - கேள்வி பதில்கள், தீர்வுகள் | வாழ்வியல் கணிதம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வாழ்வியல் கணிதம்