Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | சிந்திக்க, இவற்றை முயல்க, நினைவு கூர்தல், செயல்பாடு

கேள்வி பதில்கள், தீர்வுகள் | வாழ்வியல் கணிதம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு கணக்கு - சிந்திக்க, இவற்றை முயல்க, நினைவு கூர்தல், செயல்பாடு | 8th Maths : Chapter 4 : Life Mathematics

   Posted On :  22.10.2023 01:19 am

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வாழ்வியல் கணிதம்

சிந்திக்க, இவற்றை முயல்க, நினைவு கூர்தல், செயல்பாடு

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வாழ்வியல் கணிதம் : சிந்திக்க, இவற்றை முயல்க, நினைவு கூர்தல், செயல்பாடு

இவற்றை முயல்க 

கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்குக் குறிப்பிடப்பட்ட சதவீத மதிப்பைக் காண்க.


இவற்றை முயல்க

1. ஒரு நாளில் 10 மணி நேரம் என்பது எத்தனை சதவீதம்? 41.66%

2. R என்ற நபர் பெறுவதில் 50% Q என்ற நபரும், Q பெறுவதில் 50% P என்ற நபரும் பெறுமாறு  P, Q மற்றும் R என்ற மூன்று நபர்களுக்கு ₹350 பிரிக்கவும். R: ₹200 , Q: ₹100, P: ₹50


சிந்திக்க 

ஒரு மாநகரத்தின் போக்குவரத்துக் காவல் ஆணையாளர் பெருமிதத்தோடு, இந்த ஆண்டில் 200% விபத்துகள் குறைந்துள்ளன என அறிவித்துள்ளார். இதனை அவர், சென்ற ஆண்டு 200 இலிருந்து 600 ஆக உயர்ந்த விபத்துகளின் சதவீதம் தெளிவாக 200% ஆகும் எனவும், அது இந்த ஆண்டு 600 இலிருந்து 200 ஆக குறைந்துள்ளது என்பதும் அதே 200% குறைவு ஆகும் என ஒப்பிட்டுக் கூறியுள்ளார். இங்கு 600 இலிருந்து 200 ஆகக் குறைந்துள்ளது என்பது, அவர் அறிவித்துள்ளவாறு அதே 200% ஆகுமா? நியாயப்படுத்துக


இவற்றை முயல்க

1. ஒரு பொருளின் விற்பனை விலையானது அதன் அடக்க விலையை விடக் குறைவு எனில், நட்டம் ஏற்படுகிறது

2. ₹5000 அடக்க விலையாகக் கொண்ட ஒரு பொருளானது ₹4850 இக்கு விற்கப்பட்டால், அங்கு இலாபமா? நட்டமா? அதன் சதவீதம் என்ன? நட்டம், 97%

3. ஒரு பொருளின் அடக்க விலை மற்றும் விற்ற விலையின் விகிதம் 5:7 எனில், இலாபம் 40  % ஆகும்.



சிந்திக்க 

ஒரு கடைக்காரர் தகவல் பலகை ஒன்றை அதன் அடக்க விலையைவிட 15% அதிகமாகக் குறித்து, பிறகு 15% தள்ளுபடி வழங்குகிறார். இந்த பரிவர்த்தனையில், அவர் இலாபம் அடைவாரா அல்லது நட்டம் அடைவாரா? நட்டம்


இவற்றை முயல்க

1. கொடுக்கப்பட்ட அசலுக்கான தனிவட்டியைக் காணப் பயன்படும் சூத்திரம் PNR /100 ஆகும்

2. ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் ₹900 இக்கு 73 நாள்களுக்கு கிடைக்கும் தனிவட்டியைக் காண்க. 14.4

3. எத்தனை ஆண்டுகளில் ₹2000 ஆனது ஆண்டுக்கு 10% தனி வட்டியில் ₹3600 ஆக மாறும்? 18 ஆண்டுக்கு


இவற்றை முயல்க

(1) பின்வரும் எடுத்துக்காட்டுகளை நேர் அல்லது எதிர் விகிதம் என வகைப்படுத்துக

(i) பருப்பு வகைகளின் எடையும் விலையும்

(ii) பேருந்தில் பயணம் செய்த தூரமும் அதற்கான கட்டணமும்

(iii) ஒரு குறிப்பிட்டத் தூரத்தைக் கடக்கத் தடகளை வீரரின் வேகம்

(iv) ஒரு குறிப்பிட்டக் காலத்தில் ஒரு கட்டுமானப் பணியை முடிக்க பணியமர்த்தப்பட்ட வேலையாள்களின் எண்ணிக்கை.

(v) வட்டத்தின் பரப்பளவும் அதன் ஆரமும்

(2) ஒரு மாணவனால் 15 நிமிடங்களில் 21 பக்கங்களைத் தட்டச்சுச் செய்யமுடியும். இதே  வேகத்தில், அந்த மாணவனுக்கு 84 பக்கங்கள் தட்டச்சுச் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்

(3) 35 பெண்கள் ஒரு வேலையை 16 நாள்களில் செய்து முடிப்பர் எனில், 28 பெண்கள் அதே வேலையை எத்தனை நாள்களில் செய்து முடிப்பர்?


இவற்றை முயல்க

1. x மற்றும் y ஆகியவை நேர் மாறலில் உள்ளன எனில், x = y = 5 எனும்போது, k இன் மதிப்பைக் காண்க

2. x மற்றும் y ஆகியவை எதிர் மாறலில் உள்ளன எனில், x = 64 மற்றும் y = 0.75 எனும்போது, விகிதசம மாறலின் மாறிலியைக் காண்க.


செயல்பாடு

கொடுக்கப்பட்ட ஆரத்திற்கு ஒரு வட்டத்தை வரைக. எந்த ஒரு அடுத்தடுத்த சோடி ஆரங்களுக்கிடையேயுள்ள கோணங்கள் சமமாக இருக்குமாறு, அதன் ஆரங்களை வரைக. முதலில் 3 ஆரங்கள் வரைவதில் தொடங்கி 12 ஆரங்கள் வரை வரையவும். ஆரங்களின் எண்ணிக்கைக்கும் அடுத்தடுத்த சோடி ஆரங்களுக்கிடையே உள்ள கோணத்திற்குமான தொடர்பினை பட்டியலிட்டு அட்டவணையில் குறித்து, அவை எதிர் மாறலில் உள்ளனவா என ஆராய்க. விகிதசம மாறிலி என்ன?


இவற்றை முயல்க

பின்வரும் வினாக்களில் இடம் பெற்றுள்ள வெவ்வேறு மாறல்களைக் கண்டறிக.

1. 24 ஆண்கள் 12 நாள்களில் 48 பொருள்களை செய்வர் எனில், 6 ஆண்கள் 6 பொருள்களை 6 நாள்களில் செய்வர்

2. 15 வேலையாள்கள் 4 கி.மீ நீளமுள்ள சாலையை 4 மணி நேரத்தில் அமைப்பர் எனில், 15 வேலையாள்கள் 8 கி.மீ நீளமுள்ள சாலையை 8 மணி நேரத்தில் அமைப்பர்

3. நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 25 பெண்கள் 36 நாட்களில் முடிப்பர் எனில், 20 பெண்கள் நாளொன்றுக்கு ………….. மணி நேரம் வேலை செய்து அதே வேலையை 30 நாள்களில் முடிப்பர்

4. ஒரு முகாமில் 98 நபர்களுக்கு 45 நாள்களுக்கு போதுமான 420 கி.கி அரிசி உள்ளது எனில், 42 நபர்களுக்கு 60 கி.கி அரிசியானது …………. நாள்களுக்கு மட்டுமே போதுமானதாகும்.


இவற்றை முயல்க

1. விக்ரம் ஒரு வேலையின் மூன்றில் ஒரு பகுதியை p நாள்களில் முடிப்பார் எனில், அவர் அந்த வேலையின் பகுதியை 9/4 P. நாள்களில் முடிப்பார்

2. m நபர்கள் ஒரு வேலையை n நாள்களில் முடிப்பர் எனில், 4m நபர்கள் அந்த வேலையை n/4 நாள்களிலும்,  நபர்கள் அதே வேலையை 4n நாள்களிலும் முடிப்பர்.


Tags : Questions with Answers, Solution | Life Mathematics | Chapter 4 | 8th Maths கேள்வி பதில்கள், தீர்வுகள் | வாழ்வியல் கணிதம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 4 : Life Mathematics : Try these, Recap Exercise, Student Activities, Think and answer Questions with Answers, Solution | Life Mathematics | Chapter 4 | 8th Maths in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வாழ்வியல் கணிதம் : சிந்திக்க, இவற்றை முயல்க, நினைவு கூர்தல், செயல்பாடு - கேள்வி பதில்கள், தீர்வுகள் | வாழ்வியல் கணிதம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வாழ்வியல் கணிதம்