Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | வாழ்வியல் கணிதம்

அலகு 4 | 8 ஆம் வகுப்பு கணக்கு - வாழ்வியல் கணிதம் | 8th Maths : Chapter 4 : Life Mathematics

   Posted On :  21.10.2023 10:06 am

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வாழ்வியல் கணிதம்

வாழ்வியல் கணிதம்

கற்றல் நோக்கங்கள் • சதவீதம், இலாபம், நட்டம் மற்றும் தனி வட்டி ஆகிய கருத்துக்களை நினைவு கூர்ந்து , சதவீதக் கணக்குகள், இலாபம்–நட்டம், இதரச் செலவுகள், தள்ளுபடி, சரக்கு மற்றும் சேவை வரி (GST) உள்ளிட்ட சதவீதப் பயன்பாடுகள் கொண்ட கணக்குகளுக்குத் தீர்வு காணுதல். • கூட்டுவட்டியைப் பற்றி அறிதல், அமைப்புகள் மற்றும் சூத்திரங்களைக் கொண்டு எளிய கணக்குகளில் அவற்றைப் பயன்படுத்திக் கூட்டுவட்டியைக் காணுதல். • 2 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகளுக்குத் தனிவட்டி மற்றும் கூட்டுவட்டிகளுக்கு இடையேயுள்ள வித்தியாசத்தைக் காணுதல். • நேர் மற்றும் எதிர் விகிதங்களை நினைவு கூர்தல். • கலப்பு மாறல் பற்றி அறிதல் மற்றும் அதனைச் சார்ந்த கணக்குகளைச் செய்தல். • நேரம் மற்றும் வேலை கணக்குகளுக்குத் தீர்வுக் காணுதல்.

இயல் 4

வாழ்வியல் கணிதம்



கற்றல் நோக்கங்கள்

சதவீதம், இலாபம், நட்டம் மற்றும் தனி வட்டி ஆகிய கருத்துக்களை நினைவு கூர்ந்து , சதவீதக் கணக்குகள், இலாபம்நட்டம், இதரச் செலவுகள், தள்ளுபடி, சரக்கு மற்றும் சேவை வரி (GST) உள்ளிட்ட சதவீதப் பயன்பாடுகள் கொண்ட கணக்குகளுக்குத் தீர்வு காணுதல்

கூட்டுவட்டியைப் பற்றி அறிதல், அமைப்புகள் மற்றும் சூத்திரங்களைக் கொண்டு எளிய கணக்குகளில் அவற்றைப் பயன்படுத்திக் கூட்டுவட்டியைக் காணுதல்

• 2 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகளுக்குத் தனிவட்டி மற்றும் கூட்டுவட்டிகளுக்கு இடையேயுள்ள வித்தியாசத்தைக் காணுதல்

•  நேர் மற்றும் எதிர் விகிதங்களை நினைவு கூர்தல்

கலப்பு மாறல் பற்றி அறிதல் மற்றும் அதனைச் சார்ந்த கணக்குகளைச் செய்தல்

நேரம் மற்றும் வேலை கணக்குகளுக்குத் தீர்வுக் காணுதல்.


அறிமுகம்

VIII வகுப்பு கணக்குப் பாடவேளையில் பின்வரும் உரையாடலானது நிகழ்கிறது

ஆசிரியர் : அன்பான மாணவர்களே, கொடி நாளுக்காக பணம் பெறப்படுகிறது. இதுவரை VII வகுப்பில் 40 மாணவர்களில் 32 பேரும், நம் வகுப்பில் 50 மாணவர்களில் 42 பேரும் பங்களிப்பு செய்துள்ளனர். எந்த வகுப்பின் பங்களிப்பு சிறப்பானது என்பது குறித்து உங்களில் யாரேனும் கூற முடியுமா

சங்கர் : ஆசிரியரே, 40 இக்கு 32 என்பதை எனவும், 50 இக்கு 42 என்பதை எனவும் எழுதலாம். இவற்றின் ஒத்த பின்னங்கள் முறையே மற்றும் ஆகும். எனவே, நமது வகுப்பு மாணவர்களின் பங்களிப்பே சிறந்ததாகும்.

ஆசிரியர் : மிக நன்று சங்கர். ஒப்பீடு செய்ய வேறேதும் வழி உள்ளதா

பும்ரா : ஆம் ஆசிரியரே, ஒப்பீடு செய்ய சதவீதங்கள் நமக்குப் பயன்படும்இங்கு மற்றும் ஆகும். எனவே, நமது  வகுப்பு மாணவர்களின் பங்களிப்பானது VII வகுப்பு மாணவர்களை விட 4% அதிகமாகும்.

ஆசிரியர் : அருமையாக விளக்கமளித்தாய் பும்ரா. நீ கூறியது மிகவும் சரியாகும். சதவீதங்களின் பயன்பாடு எந்த இடத்தில் அதிகம் காணப்படுகிறது என்பதை உங்களில் யாரேனும் ஒருவர் கூற முடியுமா?

புவி : ஆம் ஆசிரியரே, இலாபம், நட்டம், தள்ளுபடி, சரக்கு மற்றும் சேவை வரி, முதலீட்டின் மீதான வட்டி, மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் இயந்திரங்களின் தேய்மான மதிப்பு ஆகியவற்றைக் கணக்கிடவும் மற்றும் ஒப்பீடு செய்யப்படும் பெரும்பாலான இடங்களிலும் சதவீதங்கள் பயன்படும் என என் தந்தை என்னிடம் கூறியுள்ளார். மேலும், மதிப்புகளை ஒப்பிடும்போது சதவீதங்களைப் பயன்படுத்துவது ஓர் எளிய வழியாகும் எனவும் அவர் கூறினார்

ஆசிரியர் : நன்றாகக் கூறினாய் புவி. இந்த இயலில் மேற்கூறியத் தலைப்புகளில் சதவீதங்களின் பயன்பாடுகள் குறித்துக் கற்க இருக்கிறோம்

மேற்காணும் உரையாடலானது, நம் அன்றாட வாழ்வில் பல்வேறு சூழல்களில் பார்க்கும் கணக்குகளில் எவ்வாறு சதவீதங்களைப் பயன்படுத்தலாம் என்பதைக் குறித்து அறிய ஏதுவாக அமைகிறது. மேலும், நாம் நேர் மற்றும் எதிர் விகிதங்கள், கலப்பு மாறல் மற்றும் நேரம் மற்றும் வேலை தலைப்புகளையும் பிறகு பார்க்க இருக்கிறோம்.

எங்கும் கணிதம்அன்றாட வாழ்வில் வாழ்வியல் கணிதம்


கூட்டுவட்டியின் மூலம் பணம் வேகமாக அதிகரிக்கிறது.


காலத்தைப் பொறுத்து, ஓர் ஒட்டகச் சிவிங்கியின் வளர்ச்சியானது, நேர்மாறலில் இருப்பதற்கான எடுத்துக்காட்டாகும். ஏற்றஇறக்க விளையாட்டானது எதிர்மாறலுக்கான எடுத்துக்காட்டாகும்.


இவற்றை முயல்க 

கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்குக் குறிப்பிடப்பட்ட சதவீத மதிப்பைக் காண்க.


Tags : Chapter 4 | 8th Maths அலகு 4 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 4 : Life Mathematics : Life Mathematics Chapter 4 | 8th Maths in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வாழ்வியல் கணிதம் : வாழ்வியல் கணிதம் - அலகு 4 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வாழ்வியல் கணிதம்