பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு - ஒழுங்கற்ற வடிவங்களின் பரப்பளவு | 6th Maths : Term 3 Unit 3 : Perimeter and Area
ஒழுங்கற்ற வடிவங்களின் பரப்பளவு
முக்கோணம், சதுரம் போன்ற வடிவங்களின் பரப்பளவுகளைக் குறிப்பிட்ட வாய்ப்பாடுகளைப் பயன்படுத்திக் காண முடியும். ஆனால், இலைகள் போன்ற சில ஒழுங்கற்ற வடிவங்களின் தோராயமான பரப்பளவைப் பின்வருமாறு காண முடியும். ஓர் இலையை ஒரு வரைபடத்தாளின் மீது வைத்து அதனுடைய எல்லையின் பதிவு எடுக்கவும். இப்போது எல்லையின் உள்ளே அமையும். 1 செ.மீ × 1 செ.மீ சதுரங்களை உற்று நோக்கவும். முழுமையான சதுரங்களை பச்சை நிறத்திலும், பகுதி அளவு அதாவது அரை சதுரத்திற்கும் அதிகமானவைகளை ஆரஞ்சு நிறத்திலும், அரை சதுரங்களை நீல நிறத்திலும் வண்ணம் தீட்டுவோம். அரை சதுரத்திற்கும் குறைவான பரப்பளவுக் கொண்ட பகுதிகளைத் தவிர்க்கவும்.
இலையின் தோராயப் பரப்பளவு =
முழுச்சதுரங்களின் எண்ணிக்கை + அரைச் சதுரத்திற்கும் அதிகமான பரப்பு கொண்ட சதுரங்களின் எண்ணிக்கை + 1/2 × அரைச் சதுரங்களின் எண்ணிக்கை
= (14 + 6 + ½ × 2) = 21 சதுர செ.மீ.
குறிப்பு
இலைகள் போன்ற ஒழுங்கற்ற வடிவங்களுக்குத் துல்லியமான பரப்பளவு உண்டு. அவற்றை உங்களது உயர் வகுப்புகளில் கற்பீர்கள்.
இவற்றை முயல்க
பின்வரும் வடிவங்களின் தோராயமான பரப்பளவு காண்க