பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பரப்பளவைச் சதுர அலகுகளில் குறித்தல் | 6th Maths : Term 3 Unit 3 : Perimeter and Area
பரப்பளவைச் சதுர அலகுகளில் குறித்தல்
1 செ.மீ பக்க அளவுடைய ஒரு சதுரத்தைக் கருதுக. ஆகவே, அச்சதுரத்தின் பரப்பளவு 1 சதுர செ.மீ (1 செ.மீ2) ஆகும். இதன் ஒரு பக்கத்தை 10 சம பகுதிகளாகப் பிரிக்கவும். இவற்றில் 1 சம பகுதியானது 1 மி.மீக்குச் சமம் ஆகும். 1 செ.மீ = 10 மி.மீ என்பதை நாம் அறிவோம். அதாவது, 1 செ.மீ பக்க அளவுடைய சதுரமானது ஒவ்வொன்றும் 1 மி.மீ சதுர பரப்பளவுள்ள 100 சதுரங்களைப் பெற்றுள்ளது. ஆகவே,
அந்தச் சதுரத்தின் பக்க அளவு 10 மி.மீ மற்றும் பரப்பளவு = பக்கம் × பக்கம் = 10 மி.மீ × 10 மி.மீ = 100
சதுர மி.மீ (100 மி.மீ2). எனவே, 1 செ.மீ பக்க அளவுடைய சதுரத்தின் பரப்பளவு = 1 செ.மீ2 = 100 மி.மீ2.
இதைப் போலவே பின்வரும் மாற்றங்கள் பெறப்படுகின்றன எடுத்துக்காட்டாக,
i) 1 செ.மீ2 = 10 மி.மீ × 10 மி.மீ = 100 மி.மீ2
ii) 1 மீ2 = 100 செ.மீ × 100 செ.மீ = 10,000 செ.மீ2
iii) 1 கி.மீ2 = 1000 மீ × 1000 மீ = 10,00,000 மீ2
எடுத்துக்காட்டு 16 பின்வருவனவற்றை நிரப்புக.
i) 2 செ.மீ2 = _____ மி.மீ2
ii) 18 மீ2 = _____ செ.மீ2
iii) 5 கி.மீ2 = _____ மீ2
தீர்வு
i) 2 செ.மீ2 = 2 × 100 = 200 மி.மீ2
ii) 18 மீ2 =18 × 10000 = 1,80,000 செ.மீ2
iii) 5 கி.மீ2 = 5 × 1000000 = 50,00,000 மீ2
உங்களுக்குத் தெரியுமா?
1 ஏக்கர் = 4,046.86 மீ2
1 ஹெக்டேர் = 10,000 மீ2
இவற்றை முயல்க
பின்வருவனவற்றை நிரப்புக.
i) 7 செ.மீ2 = 700 மி.மீ2
ii) 10 மீ2 = 100000 செ.மீ2
iii) 3 கி.மீ2 = 3,000,000 மீ2