இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை - வெளியுறவுக் கொள்கையினை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் | 10th Social Science : Civics : Chapter 4 : India’s Foreign Policy
வெளியுறவுக் கொள்கையினை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள்
• நாட்டின் புவியியல் அமைப்பு மற்றும்
பரப்பளவு
• நாட்டின் வரலாறு, பாரம்பரியம் மற்றும்
தத்துவம் அடிப்படையிலானவை
• இயற்கை வளங்கள்
• பொருளாதார வளர்ச்சியின் அவசியம்
• அரசியல் நிலைத்தன்மை மற்றும் அரசாங்க
அமைப்பு
• அமைதிக்கான அவசியம், ஆயுதக் குறைப்பு,
அணு ஆயுதப் பெருக்கத்தடை
• இராணுவ வலிமை
• சர்வதேச சூழ்நிலை
நாடு
சுதந்திரம் அடைந்தது முதல்
1950 மற்றும் 1960களில் இந்தியாவின் வெளியுறவுக்
கொள்கைகள், நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு வழிகாட்டுதலின்படி
முக்கியக் குறிக்கோள்களைக் கொண்டதாக அமைந்திருந்தன. நீண்டகாலமாக
காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற நாடுகள் பொருளாதார மேம்பாடு தொடர்பாகக்
கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டன. எனவே சோவியத் சோஷலிச் குடியரசுகளின்
ஒன்றியம் (USSR) அல்லது அமெரிக்க ஐக்கிய நாடுகள்
(USA) ஆகியவற்றின் ஏதேனும் ஒரு முகாம்களில் சேர்வது அவசியமாயிற்று.
நாட்டின் முதல் பிரதமரான நேரு, அமெரிக்கா மற்றும்
சோவியத் ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகள் ஆப்பிரிக்கா, ஆசியாவில் புதிதாகத்
தோன்றிய நாடுகளில் தங்களது செல்வாக்கைச் செலுத்துவதை எதிர்த்தார். எனவே பனிப்போர் நிலவும் இரு துருவ உலகமான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா
வல்லரசுகளுடன் சேராமல் அணிசேரா இயக்கம் என்ற வழியைத் தேர்ந்தெடுத்ததோடு சர்வதேச விவகாரங்களில்
மூன்றாவது அணியை உருவாக்க முயன்றார்.
“பரந்த அளவில் அணிசேராமை
என்பது இராணுவக் கூட்டணியில்
இணைத்துக் கொள்ளாதது அல்ல. அதாவது பிரச்சனைகளை முடிந்தவரை இராணுவக்
கண்ணோட்டத்தில் பார்க்காமல், அது சில நேரங்களில் மட்டும்
ஏற்பட்டாலும் சுதந்திரமாக மற்றும் அனைத்து நாடுகளுடனும் நட்பு ரீதியிலான உறவைப் பராமரித்தல்”
-
ஜவகர்லால் நேரு