Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை | குடிமையியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் | 10th Social Science : Civics : Chapter 4 : India’s Foreign Policy

   Posted On :  25.07.2022 01:44 am

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

பயிற்சி : I. சரியான விடையைத் தேர்வு செய்யவும். II. கோடிட்ட இடத்தை நிரப்புக. III. சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும். IV. பொருத்துக.- புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள் - சமூக அறிவியல் : குடிமையியல் : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

அலகு 4

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

 

பயிற்சி

 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

 

1. இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் எந்த அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்?

) பாதுகாப்பு அமைச்சர்

ஆ) பிரதம அமைச்சர்

இ) வெளி விவகாரங்கள் அமைச்சர்

ஈ) உள்துறை அமைச்சர்

[விடை: () வெளி விவகாரங்கள் அமைச்சர்]

 

2. எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது?

அ) இந்தியா மற்றும் நேபாளம்

) இந்தியா மற்றும் பாகிஸ்தான்

இ) இந்தியா மற்றும் சீனா

) இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா

[விடை: () இந்தியா மற்றும் சீனா]

 

3. இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?

அ) சட்டப்பிரிவு 50

) சட்டப்பிரிவு 51

இ) சட்டப்பிரிவு 52

) சட்டப்பிரிவு 53

[விடை: () சட்டப்பிரிவு 51]

 

4. இன ஒதுக்கல் கொள்கை என்பது

) ஒரு சர்வதேச சங்கம்

ஆ) இராஜதந்திரம்

இ) ஒரு இனப் பாகுபாட்டுக்கொள்கை

ஈ) மேற்கூறியவைகளில் எதுவுமில்லை

[விடை: () ஒரு இனப் பாகுபாட்டுக்கொள்கை]

 

5. 1954 இல் இந்தியா மற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது தொடர்பானது.

அ) வியாபாரம் மற்றும் வணிகம்

) சாதாரண உறவுகளை மீட்டெடுப்பது

இ) கலாச்சார பரிமாற்றங்கள்

) ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்

[விடை: () ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்]

 

6. நமது வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்பு இல்லாதது எது?

) உலக ஒத்துழைப்பு

) உலக அமைதி

) இனச் சமத்துவம்

) காலனித்துவம்

[விடை: () காலனித்துவம்]

 

7. கீழ்க்கண்டவைகளில் அணிசேரா இயக்கத்தில் நிறுவன உறுப்பினர் அல்லாத நாடு எது?

) யூகோஸ்லாவியா

) இந்தோனேசியா

) எகிப்து

) பாகிஸ்தான்

[விடை: () பாகிஸ்தான்]

 

8. பொருந்தாத ஒன்றினைக் கண்டுபிடி.

) சமூக நலம்

) சுகாதாரம்

) ராஜதந்திரம்

) உள்நாட்டு விவகாரங்கள்

[விடை: () ராஜதந்திரம்]

 

9. அணிசேராமை என்பதன் பொருள்

) நடுநிலைமை வகிப்பது

) தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்

) இராணுவமயமின்மை

) மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை

[விடை: () தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்]

 

10. இராணுவம் சாராத பிரச்சனைகள் என்பது

) ஆற்றல் பாதுகாப்பு

) நீர் பாதுகாப்பு

) தொற்றுநோய்கள்

) இவை அனைத்தும்

[விடை: () இவை அனைத்தும்]

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

 

1. இந்தியா தனது முதல் அணு சோதனையை நடத்திய இடம் பொக்ரான்

2. தற்போது நமது வெளியுறவுக் கொள்கையானது உள்நாட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உள் முதலீட்டை அதிகரித்தல், வணிகம், தொழில்நுட்பம் உருவாக்குவதற்கான வழிமுறையாகச் செயல்படுகிறது.

3. இராஜதந்திரம் என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.

4. இரு வல்லரசுகளின் பனிப்போரினை எதிர்கொள்ள இந்தியா பின்பற்றிய கொள்கை அணிசேராக்கொள்கை.

5. நமது மரபு மற்றும் தேசிய நெறிமுறைகள் படை வலிமை குறைப்பு நடைமுறைப்படுத்துவதாகும்.

 

III. சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

 

1. பின்வருவனவற்றைக் காலவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

(i) பஞ்சசீலம்

(ii) சீனாவின் அணுவெடிப்புச் சோதனை

(iii) 20 ஆண்டுகள் ஒப்பந்தம்

(iv) இந்தியாவின் முதல் அணுவெடிப்புச் சோதனை

) (i), (iii), (iv), (ii)

) (i), (ii), (iii), (iv) .

இ) (i), (ii), (iv), (iii)

) (i), (iii), (ii), (iv)

[விடை : () (i), (iii), (iv), (ii)]

 

2. பின்வருவனவற்றில் அணிசேரா இயக்கத்துடன் தொடர்பு இல்லாதது எது?

(i) அணிசேரா இயக்கம் என்ற சொல் வி.கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

(ii) இதன் நோக்கம் இராணுவக் கூட்டமைப்பில் சேர்ந்து வெளி விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தல் ஆகும்.

(iii) தற்போது இது 120 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.

(iv) இது பொருளாதார இயக்கமாக மாற்றமடைந்துள்ளது.

) (i) மற்றும் (ii)

) (iii) மற்றும் (iv)

இ) (ii) மட்டும்

) (iv) மட்டும்

[விடை: () (ii) மட்டும்]

 

3. கீழ்க்காணும் ஒவ்வொரு கூற்றுக்கும் எதிராக சரியா / தவறா என எழுதுக.

அ) பனிப்போரின் போது சர்வதேச விவகாரங்களில் இந்தியா மூன்றாவது அணியை உருவாக்க முயற்சித்தது.

விடை: சரி

ஆ) இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிறைவேற்றும் பொறுப்பு இந்திய உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்தது.

விடை: தவறு

) இந்தியாவின் அணுசக்தி சோதனை பூமிக்கடியிலான அணு சோதனை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது.

விடை: சரி

 

4. கூற்று : 1971 இல் இந்தோ- சோவியத் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா சோவியத் யூனியனுடன் இணைந்தது.

காரணம் : இது 1962 பேரழிவுகரமான சீனப் போருக்குப் பின் தொடங்கியது.

அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

ஆ)கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

) கூற்று சரி காரணம் தவறு.

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

[விடை: () கூற்று சரி காரணம் தவறு]

 

5. கூற்று : இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது.

காரணம் : உலகின் இரண்டாவது அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா ஆகும்.

) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

) கூற்று தவறு காரணம் சரி.

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

[விடை: () கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.]

 

6. இந்தியா சுதந்திரத்திற்குப் பின்னர் இராணுவ முகாம்களில் இணைவதைத் தவிர்ப்பது அவசியமாக இருந்தது. ஏனெனில், இந்தியா இதனை / இவைகளை மீட்கவேண்டி இருந்தது.

) கடுமையான வறுமை

) எழுத்தறிவின்மை

) குழப்பமான சமூக பொருளாதார நிலைமைகள்

) மேற்கூறிய அனைத்தும்

[விடை: () மேற்கூறிய அனைத்தும்]

 

IV. பொருத்துக.

1. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளது - 1955

2. தென் கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பின் பாலம் – 1954

3. பஞ்சசீலம் - மாலத்தீவுகள்

4. ஆப்பிரிக்க - ஆசிய மாநாடு – வெளியுறவுக் கொள்கை

5. உலக அமைதி - மியான்மர்

விடை:

1. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளது - மாலத்தீவுகள்

2. தென் கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பின் பாலம் - மியான்மர்

3. பஞ்சசீலம் - 1954

4. ஆப்பிரிக்க - ஆசிய மாநாடு – 1955

5. உலக அமைதி - வெளியுறவுக் கொள்கை

 

Tags : India’s Foreign Policy | Civics | Social Science இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை | குடிமையியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Civics : Chapter 4 : India’s Foreign Policy : One Mark Questions Answers India’s Foreign Policy | Civics | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை | குடிமையியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை