இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குடிமையியல் | சமூக அறிவியல் - முடிவுரை | 10th Social Science : Civics : Chapter 4 : India’s Foreign Policy
முடிவுரை
தற்போது இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது. மேலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு, மிகப்பெரிய மக்களாட்சி நாடு மற்றும் வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. இந்தியா எந்தவொரு மிகப்பெரிய இராணுவக் கூட்டணியில் இல்லை என்றாலும் பெரிய நாடுகளுடன் போர்த்திறன் சார்ந்த ஒரு ஆழமான உறவைக் கொண்டுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான நமது பொதுவான போராட்டம் என்பது குறிப்பிடத்தக்க பலமாகும். இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் சமூகப் பொருளாதார முன்னேற்றங்களை அடைய எதிர்பார்க்கும் அதேவேளையில் அனைத்து நாட்டு மக்களுக்கும் அமைதி, சுதந்திரம், முன்னேற்றம் மற்றும் நீதி ஆகியவற்றையும் வேண்டுகிறது. இவ்வாறு சர்வதேச விவகாரங்களில் நிரந்தர நண்பனும் இல்லை : நிரந்தர பகைவனும் இல்லை; நலன்கள் மட்டுமே நிரந்தரமானவை என்ற வெளியுறவுக் கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. புதிய வகை சவால்கள் புதிய உண்மைகளுக்கேற்ப அமைத்துக்கொள்ள வலியுறுத்துகிறது. அப்போதும்கூட அதன் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கட்டமைப்பு மாறாமல் உள்ளது.