இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை | குடிமையியல் | சமூக அறிவியல் - குறுகிய விடை தருக. | 10th Social Science : Civics : Chapter 4 : India’s Foreign Policy
V. குறுகிய விடை தருக.
1. வெளியுறவுக் கொள்கை என்றால் என்ன?
வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களில் தனது தேசிய
நலனைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இரு தரப்பு மற்றும் பல தரப்பு உறவுகளைப் பேணவும்
வடிவமைக்கப்பட்ட கொள்கை ஆகும்.
2. இந்தியாவின் அணுசக்தி கொள்கையை விவரி.
• நமது மரபு மற்றும் தேசிய நெறிமுறைகள் படை வலிமைக் குறைப்பை நடைமுறைப்படுத்துவது
ஆகும்.
• உலக அளவில் ஆயுதப் பெருக்கத் தடை இந்தியாவின் அணுக் கொள்கையில் மேலோங்கிய
ஒரு கருத்தாகவே இருந்து வருகிறது.
• இதனால் ஐ.நா.வின் படை வலிமைக் குறைப்புத் திட்டங்களுக்கு இந்தியா ஆதரவளித்தது.
இந்தியாவின் அணுக் கொள்கையின் இரண்டு மையக் கருத்துகள்:
• முதலில் பயன்படுத்துவதில்லை.
• குறைந்தபட்ச நம்பகமான தற்காப்புத்திறன்.
3. வேறுபடுத்துக: உள்நாட்டு கொள்கை
மற்றும் வெளிநாட்டுக் கொள்கை.
உள்நாட்டுக் கொள்கை
1. உள்நாட்டு கொள்கை என்பது ஒரு நாடு தனது நாட்டிற்குள்ளான
விவகாரங்கள் தொடர்பாக கொண்டுள்ள கொள்கையாகும்.
2. இது உள்விவகாரங்கள்,
சமூக நலம், சுகாதாரம், கல்வி,
குடியியல் உரிமைகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும்
சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சட்டங்களை உள்ளடக்கியது.
வெளிநாட்டுக் கொள்கை
1. வெளிநாட்டுக் கொள்கை என்பது ஒரு நாடு பிற நாடுகளுடன்
கொண்டுள்ள விவகாரங்கள் தொடர்பானதாகும்.
2. வணிகம், அரச தந்திரம்,
தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு, உளவுத் துறை மற்றும் உலகளாவிய சூழல் ஆகிய வகைகளை கொண்டது வெளிநாட்டுக் கொள்கை.
4. பஞ்சசீல கொள்கைகளில் ஏதேனும் நான்கினைப் பட்டியலிடுக.
• ஒவ்வொரு நாட்டின் எல்லையையும், இறையாண்மையும் மதித்தல்.
• பரஸ்பர ஆக்கரமிப்பின்மை.
• உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்.
• அமைதியாக சேர்ந்திருத்தல்.
5. இந்தியா அணிசேராக் கொள்கையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?
• நாட்டின் முதல் பிரதமரான நேரு, அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகள் ஆப்பிரிக்கா,
ஆசியாவில் புதிதாக தோன்றிய நாடுகளில் தங்களது செல்வாக்கைச் செலுத்துவதை
எதிர்த்தார்.
• எனவே பனிப்போர் நிலவும் இரு துருவ உலகமான அமெரிக்கா மற்றும் சோவியத்ரஷ்யா
வல்லரசுகளுடன் சேராமல் அணிசேரா இயக்கம் என்ற வழியை தேர்ந்தெடுத்ததோடு சர்வதேச விவகாரங்களில்
மூன்றாவது அணியை உருவாக்க இந்தியா முயன்றது.
6. சார்க் உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக.
• ஆப்கானிஸ்தான்
• பூடான்
• நேபாளம்
• பாகிஸ்தான்
• வங்காளதேசம்
• இந்தியா
• மாலத்தீவுகள்
• இலங்கை
7. அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?
• இந்தியா - ஜவகர்லால் நேரு
• இந்தோனேசியா - சுகர்னோ
• யூகோஸ்லாவியா - டிட்டோ
• கானா - குவாமே நிக்ரூமா
• எகிப்து - நாசர்
8. வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுக.
• உடன்படிக்கைகள்
• வெளிநாட்டு உதவி
• நிர்வாக ஒப்பந்தங்கள்
• சர்வதேச வணிகம்
• தூதுவர்களை நியமித்தல்
• ஆயுதப் படைகள்