தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் - அறிமுகம் | 10th Science : Chapter 12 : Anatomy and Plant Physiology
அலகு 12
தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின், மாணவர்கள் பெறும்
திறன்களாவன
* வாஸ்குலார் திசுத்தொகுப்பின்
வகைகள் மற்றும் பணிகளை புரிந்து கொள்ளுதல்
* இருவிதையிலை மற்றும் ஒரு
விதையிலைத்தாவர வேர்,
தண்டு, இலைகளின் உள்ளமைப்பை தெரிந்து
கொள்ளுதல்
* அவற்றிற்கிடையேயான வேறுபாட்டை
அறிந்து கொள்ளுதல்
* பசுங்கணிகத்தில் காணப்படும்
ஒளிச்சேர்க்கை நிறமிகளை அறிதல்
* கணிகங்களின் அமைப்பு மற்றும்
பணியினை தெரிந்து கொள்ளுதல்
* மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பைப்
புரிந்து கொள்ளுதல்
* காற்று சுவாசம் மற்றும்
காற்றில்லா சுவாசித்தலின் அடிப்படை நிகழ்வுகளை அறிந்து கொள்ளுதல்.
அறிமுகம்
தாவரங்களில் பல்வேறுபட்ட
கட்டமைப்புகள் காணப்படுகின்றன. அணுக்கள் ஒன்றிணைந்து மூலக்கூறுகளாகவும், மூலக்கூறுகள்
இணைந்து செல்களாகவும், செல்கள் இணைந்து திசுக்களாகவும்
மற்றும் திசுக்கள் இணைந்து உறுப்புகளாகவும் அமைந்துள்ளன. தாவர உள்ளமைப்பியல்
பற்றிய தொகுப்பை முதன் முதலில் வெளியிட்டவர் நெகமய்யா க்ரூ என்பவர்,
இவரே உள்ளமைப்பியலின் தந்தை என அழைக்கப்படுகிறார் தாவரத்தின்
உட்புற அமைப்பைப் பற்றி படிப்பது உள்ளமைப்பியல் (Anatomy) எனப்படும். (Ana - as under, Tamnein = to cut) பல்வேறு
வகையான திசுக்களின் அமைப்பு மற்றும் பணிகளை நீங்கள் ஏற்கனவே 9 ஆம் வகுப்பில் படித்திருப்பீர்கள். இப்பாடத்தில் திசுத்தொகுப்பு, முதல் நிலை உள்ளமைப்பு, ஒளிச்சேர்க்கை மற்றும்
சுவாசித்தல் பற்றி அறிந்து கொள்வீர்கள்.