பொருளாதாரம் - புள்ளியிலின் பண்புகள் மற்றும் பணிகள் | 12th Economics : Chapter 12 : Introduction to Statistical Methods and Econometrics
புள்ளியிலின் பண்புகள் மற்றும் பணிகள்
i) புள்ளியியல் என்பது விவரங்களின் தொகுப்பாகும். இது தனியொரு புள்ளிவிவரத்தை மட்டும் குறிக்காமல், புள்ளி விவரங்களின் தொகுப்பைக் குறிப்பதாகும். உதாரணத்திற்கு, இது ஒரு நாளின் உற்பத்தி, ஒரு நாளின் விற்பனை போன்றவற்றை குறிப்பதல்ல. ஒவ்வொரு நாளிலும் செய்யப்பட்ட உற்பத்தி, ஒவ்வொரு நாளிலும் செய்யப்பட்ட விற்பனைகள் போன்ற புள்ளிவிவர தொடர்களின் தொகுப்பை குறிப்பதாகும்.
ii) புள்ளியியல் என்பது எண்ணிக்கைகளை திரட்டுவது, மதிப்பீடு செய்வது மற்றும் வெளிப்படுத்துவது ஆகும்.
iii) புள்ளிவிவர திரட்டுதல் முறையானதாகவும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட நோக்கத்துடனும் இருப்பது அவசியம்: புள்ளிவிவரங்களை திரட்டுவதற்கான நோக்கம் முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டதாக இருந்தால்தான் அவ்விவரங்கள் துல்லியமானதாக இருக்கும்.
iv) இது ஒப்பீடு செய்ய வசதியளிக்கும் நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாக இருக்க வேண்டும்: இரு விவரத் தொகுப்புகள் இருக்கும்பொழுது, சராசரி, விகிதங்கள், கெழுக்கள் போன்ற கருவிகள் அவ்வேறுபட்ட இரு விவரங்களை ஒப்பிட உதவியாக இருக்க வேண்டும்.
' புள்ளியியலின் பணிகள்
· புள்ளியியல் விவரங்களை துல்லியமான வடிவில் வழங்குகிறது.
· இது பரந்த விவரங்களை சுருக்கித் தருகிறது.
· இது ஒப்பீடுகளைச் செய்ய உதவுகிறது. இது எடுகோள்களை உருவாக்கவும், சோதனைக்கு உட்படுத்தவும் உதவுகிறது.
· இது மதிப்பீடுகளைச் செய்ய உதவுகிறது.
· கொள்கைகளை உருவாக்குவதில் இது உதவுகிறது.