புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் - புள்ளிவிவரங்கள் | 12th Economics : Chapter 12 : Introduction to Statistical Methods and Econometrics

   Posted On :  17.03.2022 04:43 am

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 12 : புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம்

புள்ளிவிவரங்கள்

புள்ளிவிவரங்கள் என்பது உண்மைகளைப் பற்றிய விவரம் அல்லது எண்கள் ஆகும். அவைகள் முடிவுகளை எடுப்பதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. இவைகள் அறிந்துகொள்வதற்கும், பகுப்பாய்விற்கும் அடிப்படையானவையாகும்.

புள்ளிவிவரங்கள்

புள்ளிவிவரங்கள் என்பது உண்மைகளைப் பற்றிய விவரம் அல்லது எண்கள் ஆகும். அவைகள் முடிவுகளை எடுப்பதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. இவைகள் அறிந்துகொள்வதற்கும், பகுப்பாய்விற்கும் அடிப்படையானவையாகும். புள்ளிவிவரங்கள் புள்ளியிலுக்கான மூலப்பொருளாகும். புள்ளிவிவரங்கள் இருவகைப்படும். அவையாவன: அளவு விவரங்கள் (Quantitative Data) மற்றும் பண்பு விவரங்கள் (Qualitative Data).

1. அளவு விவரங்கள் (Quantitative data)

அளவு விவரங்கள் என்பது குறிப்பிட்ட அலகில் அளவிடப்பட்டு எண்வடிவில் கூறப்படுபவை ஆகும். (உதாரணம்) வயது வருமானம், நிறுவனங்களின் எண்ணிக்கை.

2. பண்பு விவரங்கள் (Qualitative data)

சிலபண்புகள் இருக்கின்றனவா அல்லது இல்லையா என்று மட்டுமே கூறமுடியும் (உதாரணம் - பால் (Gender), இனம் (Community) சில பண்புகளை அளவிடமுடியாது ஆனால் வரிசைப்படுத்தலாம். (உதாரணம் - நேர்மை (Honesty), இத்தகைய பண்பு சார் விவரங்களே பண்பு விவரங்களாகும்.

(i) பெயரளவு விவரங்கள் (Nominal Data)

பெயரளவு விவரங்கள் குறிப்பிட்ட பண்பினை இரண்டு, மூன்றாக வகைப்படுத்துவது பெயரளவு விவரங்களாகும். அவ்வகைப்பாட்டிற்குள் வரும் உறுப்புகளின் எண்ணிக்கையை குறிப்பிடுவது பெயரளவு விவரங்கள் ஆகும். உதாரணத்திற்கு மக்களை ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் என வகைப்படுத்தி எண்ணிக்கையை குறிப்பது. மேலும், கல்வியறிவின் அடிப்படையில் மக்களை முறைசார் கல்வியற்றோர், துவக்கப்பள்ளி பயின்றவர்கள், உயர்நிலைப் பள்ளி பயின்றவர்கள், மேல்நிலை வகுப்பு பயின்றவர்கள், இளநிலை பட்டப்படிப்பு பெற்றவர், முதுநிலை பட்டப்படிப்பு பயின்றவர் என வகைப்படுத்தி எண்ணிக்கையில் கூறப்படுவது.

(ii) தரவரிசை விவரங்கள் (Rank Data)

அளவிடப்பட்ட விவரங்களை எண்களில் கொடுக்கப்படாமல் தரவரிசையில் கொடுக்கப்பட்டிருந்தால் அவைகள் தரவரிசை விவரங்கள் எனப்படும். உதாரணத்திற்கு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை தரவரிசையில் 1,2,3........ எனக் கொடுக்கப்பட்டிருந்தால் அவைகள் தரவரிசை விவரங்கள் எனப்படும். மேலும், ஒரு ஓட்டப் பந்தய போட்டியில் கலந்து கொண்டவர்கள், போட்டித் தேர்வில் பெற்ற இடங்கள் ஆகியன தரவரிசை விவரங்களுக்கான மற்ற உதாரணங்கள் ஆகும்.



புள்ளிவிவர ஆதாரங்களின் (Source of Data) அடிப்படையில் வகைப்பாடு

விவரங்கள் எப்படி சேகரிக்கப்பட்டன என்ற அடிப்படையில் அவைகளை இரண்டாகப் பிரிக்கலாம் : அவையாவன : முதல் நிலை விவரங்கள் மற்றும் இரண்டாம்நிலை விவரங்கள்.

 (i) முதல்நிலை விவரங்கள் (Primary Data)

விவரங்கள் குறிப்பிட்ட நோக்கத்துடனும் முதல் முறையாகவும் விவர சேகரிப்பாளரால் திரட்டப்பட்டிருந்தால் அவைகள் முதல்நிலை விவரங்கள் எனப்படும். இவைகள் கூறுகளிடமிருந்தோ அல்லது முழுத்தொகுப்பையோ விவர சேகரிப்பிற்கு பயன்படுத்திக் கொள்வதாகும். முதல்நிலை விவரங்களுக்கான உதாரணம்: மாணவர்களின் மதிப்பெண்ணை அவர்களிடமிருந்து நேரடியாக பெற்றுக்கொள்வது, விவசாயிகளின் நில அளவுகளை விவசாயிகளிடமிருந்து சேகரிப்பது.

(ii) இரண்டாம் நிலை விவரங்கள் (Secondary Sources)

பொது நோக்கத்திலோ அல்லது குறிப்பிட்ட நோக்கத்திற்காக மற்றொருவர் ஏற்கனவே சேகரித்து வைத்திருக்கும் விவரங்களை நாம் அதை வைத்திருப்பவரிடம் சென்று சேகரித்தால், அவ்விவரங்களை இண்டாம் நிலை விவரங்கள் என்கிறோம். பொருளியல் ஆய்வுகளுக்குகாக எண்ணற்ற இரண்டாம் நிலை விவரங்கள் உள்ளன. அவற்றில் சில: மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவேடுகள் (Census Reports), மத்திய புள்ளிவிவர அமைப்பின் வெளியீடுகள் (Publications of Central Statistical Organization, CSO), தேசிய கூறெடுப்பு விசாரணை அமைப்பின் வெளியீடுகள் (National Sample Survey Organization, NSSO), இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைகள் (Reserve Bank of India Bulletin), பொருளாதார ஆய்வறிக்கைகள் (Economic Surveys), மத்திய மற்றும் மாநில பொருளியல் மற்றும் புள்ளியியல் இயக்குநரக வெளியீடுகள் (Publications of Central and State Governments Directorate of Economics andStatistics),புத்தகங்கள், பொருளியலுக்கான பருவ இதழ்கள் (Economic Journals), அமைப்புக்களினால் வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத விவரங்கள், அரசுத்துறை வெளியீடுகள், பன்னாட்டு அமைப்புகளின் வெளியீடுகள், இணைய பக்கங்கள் உள்ளிட்ட ஏராளமானவை.


Tags : Statistical Methods and Econometrics புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல்.
12th Economics : Chapter 12 : Introduction to Statistical Methods and Econometrics : Data Statistical Methods and Econometrics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 12 : புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் : புள்ளிவிவரங்கள் - புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 12 : புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம்