பொருளாதாரம் - புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் | 12th Economics : Chapter 12 : Introduction to Statistical Methods and Econometrics
புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம்
"புள்ளியியல் என்பது அறிவியலின் இலக்கணம்'
- கார்ல் பியர்ஸன்
புரிதலின் நோக்கங்கள்
1. புள்ளியில் நுட்பங்களை அறிந்து கொண்டு பொருளாதார பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்வதற்கான அறிவைப் பெறுவது
2. பொருளாதார அளவையியலின் அடிப்படைகளையும் அதன் பயன்பாட்டையும் அறிந்துகொள்வது.
புள்ளியியல் - சொல் பிறப்பியலும், புள்ளியிலின் வளர்ச்சிக் கட்டங்களும்
புள்ளியியல் (Statistics) என்ற சொல் உலகின் மேலை நாடுகளில் இருந்து பிறந்தது. இதனை 'ஸ்டேட்டஸ்' ('Status') என்று லத்தீனிலும், ஸ்டேட்டிஸ்டிக் ('Statistik') என்று ஜெர்மனிலும், 'ஸ்டேட்டிஸ்க்' ('Statisque') என்று பிரெஞ்சு மொழியிலும் பலவகையாக அழைக்கப்பட்டது. பல்வேறு நாடுகளின் அரசியல் அறிவியல் என்று பொருள்படும் வகையில் 1749 ஆம் ஆண்டு காட்பிரீட் ஆக்கன்வால் என்பவர் இதனை 'ஸ்டேட்டிஸ்டிக்' ('Statistik') என அழைத்தார்.
புள்ளியியலின் முதல் புத்தகமாக "உயிர்ப் புள்ளியியலின் பங்களிப்புகள்" (Contributions to Vital Statistics) 6T60TM தலைப்பில் பிரான்ஸிஸ் ஜி.பி. நெய்ஸன் 1845-ஆம் ஆண்டு வெளியிட்டார். இது மக்களின் பிறப்பு இறப்பு விவரங்களை பற்றிய முறையான தொகுப்பாக இருந்தது.
புள்ளியியலின் தந்தை
கடந்த நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த தாவரவியல் அறிஞர் ரொனால்டு பிஷர் புள்ளியியலில் அடிப்படை நெறி முறைகளை ஏற்படுத்தினார். அவருடைய புள்ளியியல் ஆய்வுகள் பரிணாம வளர்ச்சியை பகுப்பாய்வு செய்யவும் நவீன மரபியல் ஆய்வுகளுக்கு அடித்தளமாகவும் அமைந்துள்ளது.
முக்கிய புள்ளியியல் பங்களிப்பினை ஆர்.ஏ.ஃபிஷர் (1890-1962) உடற்கூறு மரபியல், உளவியல், கல்வியியல், விவசாயம் மற்றும் இதர துறைகளுக்கான பயன்பாட்டினை விரிவாக்கினார். இதனுடன், மதிப்பீட்டுக் கோட்பாடு, மாறுபாட்டுப் பகுப்பாய்வு, வடிவமைப்புச் சோதனைகள் போன்ற புள்ளியியல் பாடங்களின் முதன்மையாளராக இருந்தார். அதனால் அவர் புள்ளியியலின் தந்தை எனப்படுகிறார்.