புள்ளியியலின் வகைகள்
புள்ளியியல் இரு வகைகள் உள்ளன. அவைகள் விவரிப்பு புள்ளியியல் (Descriptive Statistics) மற்றும் உய்த்துணர்வு புள்ளியியல் (Inferential Statistics) ஆகும்.
1. விவரிப்பு புள்ளியியல்
விவரிப்பு புள்ளியியல் என்பது புள்ளிவிவர தொகுப்பையும், விவரிப்பையும் செய்யும் புள்ளியியலின் ஒரு பகுதியாகும்.
2. உய்த்துணர்வு புள்ளியியல்
கூறுவின் (Sample) விவரங்களை பகுப்பாய்வு செய்து அதன் பண்பினை (Sample statistic) அறிந்து கொள்வதன் மூலம் முழுத்தொகுப்பின் (Population) விவரங்களுக்கான பண்புகளை (Population Parameter) அறிந்துகொள்வது அல்லது உய்த்துணர்வதற்குப் பயன்படும் புள்ளியியலின் ஒரு பகுதி உய்த்துணர்வு புள்ளியியல் எனப்படுகிறது.
விவரிப்பு புள்ளியிலுக்கும், உய்த்துணர்வு புள்ளியியலுக்கும் உள்ள வேறுபாடுகள்
விவரிப்பு புள்ளியியல்
1. ஆய்வில் உள்ள முழுத்தொகுதியையும் விளக்குகின்றது
2. புள்ளி விவரங்களை வரைபடங்களாகவும் விளக்கப்படங்களாகவும் வழங்குகின்றது
3. புள்ளிவிவரங்களின் சுருக்கங்களைத் தருகின்றது
உய்த்துணர்வு புள்ளியியல்
1. மாதிரி ஆய்வின் அடிப்படையில் முழுத்தொகுதி பற்றி முடிவெடுக்கப்படுகின்றது
2. கருதுகோள்களை சோதனை செய்து கணிக்கின்றது
3. மாதிரியைத் தாண்டி முழுத்தொகுப்பினை அறிந்து கொள்ள பயன்படுகின்றது