பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள் - சரியான விடையினைத் தேர்வு செய்க | 11th Chemistry : UNIT 10 : Chemical bonding
மதிப்பீடு:
சரியான விடையினைத் தேர்வு செய்க
1. பின்வருவனவற்றுள் எண்ம விதிப்படி அமையும் மைய அணுவைப் பெற்றுள்ளது எது?
அ) XeF4
ஆ) AlCl3
இ) SF6
ஈ) SCl2
[விடை : ஈ) SCl2]
2. மூலக்கூறில், OA, C மற்றும் OB ஆகியவற்றினுடைய முறைசார் மின்சுமைகள் முறையே
அ) -1, 0, + 1
ஆ) +1, 0, -1
இ) -2, 0, +2
ஈ) 0, 0, 0
[விடை : ஈ) 0, 0, 0]
3. பின்வருவனவற்றுள் எது எலக்ட்ரான் பற்றாக்குறைச் சேர்மம்?
அ) PH3
ஆ) (CH3) 2
இ) BH3
ஈ) NH3
[விடை : இ) BH3]
4. பின்வருவனவற்றுள் π பிணைப்பு காணப்படாத மூலக்கூறு எது?
அ) SO2
ஆ) NO2
இ) CO2
ஈ) H2O
[விடை : ஈ) H2O]
5. 2- பியுட்டைனலில் (2-butynal) உள்ள சிக்மா (σ) மற்றும் பை (π) பிணைப்புகளின் எண்ணிக்கைக்கு இடையேயுள்ளவிகிதம்
அ) 8/3
ஆ) 5/3
இ) 8/2
ஈ) 9/2
[விடை : அ) 8/3]
6. பின்வருவனவற்றுள், சல்பர் டெட்ரா புளூரைடு மூலக்கூறின் பிணைப்புக்கோணங்களாக இருக்க வாய்ப்புள்ளவை எவை?
அ) 120°,80°
ஆ) 109°.28
இ) 90°
ஈ) 89°,117°
[விடை : ஈ) 89°,117°]
7. கூற்று: ஆக்சிஜன் மூலக்கூறு பாரா காந்தத்தன்மை கொண்டது.
காரணம்: அதன் பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலில் இரண்டு தனித்த எலக்ட்ரான்கள் காணப்படுகின்றன.
அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R), ஆனது கூற்று (A)க்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, ஆனால் காரணம் (R) ஆனது, கூற்று (A) க்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறு.
ஈ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு.
[விடை : இ) கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறு.]
8. இணைதிற பிணைப்புக் கொள்கையின்படி, இரண்டு அணுக்களுக்கிடையே எந்நிலையில் பிணைப்பு உருவாகும்?
அ) முழுவதும் நிரம்பிய அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருத்தும்போது
ஆ) சரிபாதி நிரம்பிய அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது
இ) பிணைப்பில் ஈடுபடாதஅணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது
ஈ) காலியான அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது
[விடை : ஆ) சரிபாதி நிரம்பிய அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது]
9. ClF3, NF3 மற்றும் BF3 மூலக்கூறுகளில் உள்ள குளோரின், நைட்ரஜன் மற்றும் போரான் அணுக்கள் ஆகியன
அ) sp3 இனக்கலப்படைந்துள்ளன.
ஆ) முறையே sp3 , sp3 மற்றும் sp2 இனக்கலப்படைந்துள்ளன.
இ) sp2 இனக்கலப்படைந்துள்ளன.
ஈ) முறையே sp3d, sp3 மற்றும் sp2 இனக்கலப்படைந்துள்ளன.
[விடை : ஈ) முறையே sp3d, sp3 மற்றும் sp2 இனக்கலப்படைந்துள்ளன.]
10. ஒரு S மற்றும் மூன்று P ஆர்பிட்டால்கள் இனக்கலப்பிற்கு உட்படும்போது,
அ) ஒன்றுக்கொன்று 90° ல் அமைந்துள்ள நான்கு சமான ஆர்பிட்டால்கள் உருவாகும்.
ஆ) ஒன்றுக்கொன்று 109° 28'-ல் அமைந்துள்ள நான்கு சமான ஆர்பிட்டால்கள் உருவாகும்.
இ) ஒரே தளத்தில் அமைந்துள்ள நான்கு சமான ஆர்பிட்டால்கள் உருவாகும்.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
[விடை : ஆ) ஒன்றுக்கொன்று 109° 28'-ல் அமைந்துள்ள நான்கு சமான ஆர்பிட்டால்கள் உருவாகும்.]
11. பின்வருவனவற்றுள் எது, அவற்றின் பிணைப்புத்தரங்களின் ஏறுவரிசையில் அமைந்த சரியான வரிசையை குறிப்பிடுகிறது.
அ) C2 < C22- < O22- < O2
ஆ) C22- < C2+ < O2 < O22-
இ) O22- < O2 < C22- < C2+
ஈ) O22- < C2+ < O2 < C22-
[விடை : ஈ) O22- < C2+ < O2 < C22-]
12. PCl5 இல் உள்ள மைய அணுவின் இனக்கலப்பின்போது, கலப்பில் ஈடுபடும் ஆர்பிட்டால்கள்.
அ) s, px, py, dx2, dx2-y2
ஆ) s, px.py, pxy.dx2-y2
இ) s, px, py, pz, dx2-y2
ஈ) s, px, py, dxy , dx2-y2
[விடை : இ) s, px, py, pz, dx2-y2]
13. ஹைட்ரஜன் பெராக்சைடு, ஓசோன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றில் O-O பிணைப்பு நீளத்தின் சரியான வரிசை
அ) H2O2 > O3 > O2
ஆ) O2 > O3 > H2O2
இ) O2 > H2 O2 > O3
ஈ) O3 > O2 > H2 O2
[விடை : ஆ) O2 > O3 > H2 O2]
14. பின்வருவற்றில் எது டையா காந்தத்தன்மை கொண்டது?
அ) O2
ஆ) O22-
இ) O2+
ஈ) இவற்றில் ஏதுமில்லை.
[விடை : ஆ) O22-]
15. ஒரு மூலக்கூறின் பிணைப்புத்தரம் 2.5 மற்றும் அதன் மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8 என கண்டறியப்பட்டுள்ளது எனில், அதன் எதிர்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
அ) மூன்று
ஆ) நான்கு
இ) பூஜ்ஜியம்
ஈ) கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து கண்டறிய முடியாது.
[விடை : அ) மூன்று]
16. IF5 மூலக்கூறின் வடிவம் மற்றும் இனக்கலப்பு
அ) முக்கோண இருபிரமிடு வடிவம், sp3d2
ஆ) முக்கோண இருபிரமிடு வடிவம், sp3d
இ) சதுரபிரமிடு வடிவம், sp3d2
ஈ) எண்முகி வடிவம், sp3d2
[விடை : இ) சதுரபிரமிடு வடிவம், sp3d2]
17. பின்வருவனவற்றிலிருந்து தவறான கூற்றைத் தேர்ந்தெடு
அ) sp3 இனக்கலப்பு ஆர்பிட்டால்கள் சமமானவை மேலும் அவை ஒன்றுக்கொன்று 109O 28' கோணத்தில் அமைந்துள்ளன.
ஆ) dsp2 இனக்கலப்பு ஆர்பிட்டால்கள் சமமானவை மேலும் அவற்றில் எந்த இரண்டுக்கும் இடையே உள்ள கோணம் 90O
இ) ஐந்து sp3d இனக்கலப்பு ஆர்பிட்டால்களும் சமமற்றவை. இந்த ஐந்து sp3d இனக்கலப்பு ஆர்பிட்டால்களில், மூன்று 120O, கோணத்திலும், மீதமுள்ள இரண்டு ஆர்பிட்டால்கள் மற்ற மூன்று ஆர்பிட்டால்கள் அமைந்துள்ள தளத்திற்கு செங்குத்தாகவும் அமைந்துள்ளன.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
[விடை : இ) ஐந்து sp3d இனக்கலப்பு ஆர்பிட்டால்களும் சமமற்றவை. இந்த ஐந்து sp3d இனக்கலப்பு ஆர்பிட்டால்களில், மூன்று 120O, கோணத்திலும், மீதமுள்ள இரண்டு ஆர்பிட்டால்கள் மற்ற மூன்று ஆர்பிட்டால்கள் அமைந்துள்ள தளத்திற்கு செங்குத்தாகவும் அமைந்துள்ளன.]
18. ஒத்த இனக்கலப்பு, வடிவம் மற்றும் தனித்த எலக்ட்ரான் இரட்டை எண்ணிக்கையை கொண்ட மூலக்கூறுகள்
அ) SeF4, XeO2 F2
ஆ) SF4, Xe F2
இ) XeOF4, TeF4
ஈ) SeCl4, XeF4
[விடை : அ) SeF4, XeO2 F2]
19. பின்வரும் மூலக்கூறுகள்/அயனிகளில் BF3, NO2-, H2O எவற்றில் உள்ளமைய அணு sp2 இனக்கலப்பில் உள்ளது?
அ) NH2-மற்றும் H2O
ஆ) NO2- மற்றும் H2O
இ) BF3 மற்றும் NO2-
ஈ) BF3 மற்றும் NH2-
[விடை : இ) BF3 மற்றும் NO2-]
20. இரண்டு அயனிகள் NO3- மற்றும் H3O+ ஆகியவற்றின் சில பண்புகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எந்த ஒன்று சரியானது?
அ) வெவ்வேறு வடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் வேறுபடுகின்றன.
ஆ) ஒத்தவடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் ஒத்துள்ளன.
இ) ஒத்தவடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பில் வேறுபடுகின்றன.
ஈ) இவற்றில் எதுவுமில்லை.
[விடை : அ) வெவ்வேறு வடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் வேறுபடுகின்றன.]
21. 2,3 பெண்டாடையீனில் (2,3 pentadiene) வலமிருந்து இடமாக உள்ள ஐந்து கார்பன் அணுக்களின் இனக்கலப்பு வகைகள்.
அ) sp3, sp2, sp, sp2, sp3
ஆ) sp3, sp, sp, sp, sp3
இ) sp2, sp, sp2,sp2, sp3
ஈ) sp3, sp3, sp2, sp3, sp3
[விடை : அ) sp3, sp2, sp, sp2, sp3]
22. Xe F2 ஆனது --------- உடன் ஒத்த வடிவமுடையது.
அ) SbCl2
ஆ) BaCl2
இ) TeF2
ஈ) ICl-2
[விடை : ஈ) ICl-2]
23. மீத்தேன், ஈத்தேன், ஈத்தீன் மற்றும் ஈத்தைன் ஆகியவற்றில் உள்ள இனக்கலப்பு ஆர்பிட்டால்களின் s- பண்பு சதவீதங்கள் முறையே
அ) 25, 25, 33.3, 50
ஆ) 50, 50, 33.3, 25
இ) 50, 25, 33.3, 50
ஈ) 50, 25, 25, 50
[விடை : அ) 25, 25, 33.3, 50]
24. பின்வரும் மூலக்கூறுகளில் எது கார்பன்டையாக்சைடின் வடிவத்தை ஒத்துள்ளது?
அ) SnCl2
ஆ) NO2
இ) C2 H2
ஈ) இவை அனைத்தும்
[விடை : இ) C2 H2]
25. VSEPR கொள்கைப்படி, வெவ்வேறு வகை எலக்ட்ரான்களுக்கு இடைப்பட்ட விளக்கம் --------- வரிசையில் அமைகிறது.
அ) 1.p - 1.p > b.p-b.p > l.p-b.p
ஆ) b.p-b.p > b.p-l.p > l.p-b.p
இ) 1.p-.1.p > b.p-l.p > b.p-b.p
ஈ) b.p-b.p > 1.p-l.p > b.p-l.p
[விடை : இ) 1.p-1.p > b.p-l.p > b.p-b.p ]
26. ClF3 இன் வடிவம்
அ) முக்கோணசமதளம்
ஆ) பிரமிடுவடிவம்
இ) “T” வடிவம்
ஈ) இவற்றில் ஏதுமில்லை
[விடை : இ) “T” வடிவம்]
27. பூஜ்ஜிய மற்ற இரு முனை திருப்புத் திறனைக் காட்டுவது
அ) CO2
ஆ) p-டைகுளோரோபென்சீன்
இ) கார்பன்டெட்ராகுளோரைடு
ஈ) நீர்
[விடை : ஈ) நீர்]
28. பின்வரும் நிபந்தனைகளில் எது உடனிசைவு அமைப்புகளுக்கு சரியானது அல்ல?
அ) பங்கேற்கும் வடிவமைப்புகள் கண்டிப்பாக ஒரே எண்ணிக்கையிலான தனித்த எலக்ட்ரான்களை கொண்டிருக்க வேண்டும்.
ஆ) பங்கேற்கும் வடிவமைப்புகள் ஒத்த ஆற்றல்களை கொண்டிருக்க வேண்டும்.
இ) உடனிசைவு இனக்கலப்பு வடிவமைப்பானது, பங்கேற்கும் எந்த அமைப்பை விடவும் அதிக ஆற்றலை கொண்டிருக்க வேண்டும்.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
[விடை : இ) உடனிசைவு இனக்கலப்பு வடிவமைப்பானது, பங்கேற்கும் எந்த அமைப்பை விடவும் அதிக ஆற்றலை கொண்டிருக்க வேண்டும்.]
29. பின்வருவனவற்றுள், அயனி, சகப்பிணைப்பு மற்றும் ஈதல் சகப்பிணைப்பு இணைப்புகளை கொண்டுள்ள சேர்மம்
அ) NH4Cl
ஆ) NH3
இ) NaCl
ஈ)இவற்றில் ஏதுமில்லை.
[விடை : அ) NH4Cl]
30. CaO மற்றும் NaCl ஆகியன ஒரே படிக அமைப்பையும், ஏறத்தாழ ஒரே ஆரத்தையும் கொண்டுள்ளன. NaCl இன் படிகக்கூடு ஆற்றலை U எனக்கொண்டால், CaO இன் தோராயபடிகக்கூடு ஆற்றல் மதிப்பு
அ) U
ஆ) 2U
இ) U/2
ஈ) 4U
[விடை : ஈ) 4U]