வெப்பமும் வெப்ப இயக்கவியலும் | இயற்பியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக | 11th Physics : UNIT 8 : Heat and Thermodynamics
வெப்பமும் வெப்ப இயக்கவியலும் (இயற்பியல்)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. வெப்பமான கோடை காலத்தில் சாதாரண நீரில் குளித்த பின்னர் நமது உடலின்
(a) அக ஆற்றல் குறையும்
(b) அக ஆற்றல் அதிகரிக்கும்
(c) வெப்பம் குறையும்
(d) அக ஆற்றல் மற்றும் வெப்பத்தில் மாற்றம் நிகழாது
விடை : a) அக ஆற்றல் குறையும்
2. சார்லஸ் விதியின்படி பருமன் மற்றும் வெப்ப நிலைக்குக்குமான வரைபடம்
(a) ஒரு நீள்வட்டம்
(b) ஒரு வட்டம்
(c) ஒரு நேர்க்கோடு
(d) ஒரு பரவளையம்
விடை : c) ஒரு நேர்க்கோடு
3. சைக்கிளில் டயர் திடீரென்று வெடித்து அதில் உள்ள காற்று விரிவடைகிறது. இதற்கு ...................... நிகழ்வு என்று பெயர்.
(a) வெப்பநிலை மாறா
(b) வெப்பப் பரிமாற்றமில்லா
(c) அழுத்தம் மாறா
(d) பருமன் மாறா
விடை : b) வெப்பப் பரிமாற்றமில்லா
4. ஒரு நல்லியல்பு வாயு ஒன்று (P1, V1, T1, N) என்ற சமநிலை நிலையிலிருந்து (2P1, 3V1, T2. N) என்ற மற்றொரு சமநிலை நிலைக்குச் சென்றால்
(a) T1 = T2
(b) T1 = T2 / 6
(c) T1 = 6T2
(d) T1 = 3T2
விடை : (b) T1 = T2 / 6
தீர்வு :
T1 = T2 / 6
2P1 3V1 = NKT2
6P1V1 = NKT2
P1V1 = NKT2 / 6
NKT1 = NK T2 / 6
P1V1 = NKT1
NKT1 = NK T2 / 6
T1 = T2 / 6
5. சீரான அடர்த்தி உள்ள தண்டு ஒன்றினை வெப்பப்படுத்தும் போது அத்தண்டின் பின்வரும் எப்பண்பு அதிகரிக்கும்
(a) நிறை
(b) எடை
(c) நிறை மையம்
(d) நிலைமத்திருப்புத்திறன்
விடை : d) நிலைமத்திருப்புத்திறன்
தீர்வு :
I = mr2
6. மூடப்பட்ட பாத்திரத்தினுள் உணவு சமைக்கப் படுகிறது. சிறிது நேரத்திற்குப்பின் நீராவி பாத்திரத்தின் மூடியை சற்றே மேலே தள்ளுகிறது. நீராவியை வெப்ப இயக்க அமைப்பு என்று கருதினால் இந்நிகழ்விற்கு பொருத்தமான கூற்று எது?
(a) Q > O, W > O
(b) Q < O, W > 0
(c) Q > O, W < O
(d) Q < O, W < O
விடை : a) Q > O, W > O
7. நாம் அதிகாலை உடற்பயிற்சி செய்யும் நிகழ்வில், நமது உடலை ஒரு வெப்ப இயக்க அமைப்பு என்று கருதினால், கீழ்கண்டவற்றுள் பொருத்தமானக் கூற்று எது?
(a) ∆U > O, W > O
(b) ∆U < O, W > O
(c) ∆U < O, w < O
(d) ∆U = O, W > O
விடை : (b) ∆U < O, W > O
8. மேசை மீது வைக்கப்பட்ட சூடான தேநீர் சிறிது நேரத்தில் சூழலுடன் வெப்பச் சமநிலையை அடைகிறது. அறையில் உள்ள காற்று மூலக்கூறுகளை வெப்ப இயக்க அமைப்பு என்று கருதினால் கீழ்கண்டவற்றுள் எக்கூற்று பொருத்தமானது?
(a) ∆U > O, Q = O
(b) ∆U > O, W < O
(c) ∆U > O, Q > O
(d) ∆U = O, Q > O
விடை : c) ∆U > O, Q > O
9. நல்லியல்பு வாயு ஒன்று (Pi, Vi) என்ற தொடக்க நிலையிலிருந்து (Pf , Vf) என்ற இறுதிநிலைக்கு பின்வரும் மூன்று வழிமுறைகளில் கொண்டு செல்லப் படுகிறது. எவ்வழி முறையில் வாயுவின் மீது பெரும் வேலை செய்யப்பட்டிருக்கும்?
(a) வழிமுறை A
(b) வழிமுறை B
(c) வழிமுறை C
(d) அனைத்து வழிமுறைகளிலும் சமமான வேலை செய்யப்பட்டுள்ளது
விடை : b) வழிமுறை B
10. A→B→C→D என்ற மீள் சுற்று நிகழ்வில் (Cyclic process) உள்ள நல்லியல்பு வாயுவின் V-T வரைபடம் காட்டப் பட்டுள்ளது. (இங்கு D→A மற்றும் B→C இவ்விரண்டும் வெப்பப்பரிமாற்றமில்லா நிகழ்வுகள்)
இச்செயல் முறைக்கு பொருத்தமான PV வரைபடம் எது?
விடை : b)
11. வெகுதொலைவிலுள்ள விண்மீனொன்று 350 nm அலைநீளத்தில் பெருமச் செறிவுகொண்ட கதிர் வீச்சை உமிழ்கிறது எனில், அவ்விண்மீனின் வெப்ப நிலை
(a) 8280 K
(b) 5000 K
(c) 7260K
(d) 9044 K
விடை : a) 8280 K
தீர்வு:
λm = b / T
⇒ T = b / λm
= 2.898×10-3 / 350×10-9
λm = 8280 K
12. கீழ்க்கண்டவற்றுள் எது நிலைமாறிகளைக் கொண்ட தொகுப்பு?
(a) Q, T, W
(b) P, T, U
(c) Q, W
(d) P, T, Q
விடை : b) P, T, U
13. பருமன் மாறா நிகழ்விற்கு பின்வருவனவற்றுள் எது பொருத்தமானது?
(a) W = O
(b) Q = O
(c) U = O
(d) T = O
விடை : a) W = O
14. நீரின் உறை நிலைக்கும் அதன் கொதி நிலைக்கும் இடையே இயங்கும் வெப்ப இயந்திரத்தின் பயனுறுத்திறன்
(a) 6.25%
(b) 20%
(c) 26.8%
(d) 12.5%
விடை : c) 26.8%
தீர்வு:
Tn = 100°C
Tn = 373
TL = 0°C
TL = 273 K
[ TH − TL ] / TH = n
= ( [373 – 273] / 373 ) × 100
= ( 100 / 373 ) × 100
n = 26.8%
15. ஒரு இலட்சிய குளிர்பதனப் பெட்டியின் உறைவிக்கும் பாகத்தின் (freezer) வெப்பநிலை -12°C அதன் செயல்திறன் குணகம் COP யானது 5 எனில் குளிர்பதனப் பெட்டியைச் சூழ்ந்துள்ள காற்றின் வெப்பநிலை என்ன?
(a) 50°C
(b) 45.2°C
(c) 40.2°C
(d) 37.5°C
விடை : c) 40.2°C
தீர்வு:
TL = −12°C + 278 K
TL = 261 K,
B=5,
TH = ?
β = TL / [TH – TL ]
⇒ TH = [ TL / β ] + TL
= [261/5] + 261
= 525 + 261
= 313.2K
TH = 313.2 K − 273°C
TH = 40.2°C
விடைகள்:
1) a 2) c 3) b 4) b
5) d 6) a 7) b 8) c
9) b 10) b 11) a 12) b
13) a 14) b 15) c