அளவைகள் | இரண்டாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு - வட்டம் (Circle) | 7th Maths : Term 2 Unit 2 : Measurements

   Posted On :  06.07.2022 02:07 am

7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 2 : அளவைகள்

வட்டம் (Circle)

நம்முடைய அன்றாட வாழ்வில் பல்வேறு இடங்களில் வட்ட வடிவங்களைக் கடந்து வந்துள்ளோம். வட்ட வடிவத்தைப் புரிந்து கொள்வதற்கு முதலில் ஒரு செயல்பாட்டின் மூலம் வட்டத்தைப் படி (trace) எடுப்பது எவ்வாறு என்பதை நாம் அறியலாம்.

வட்டம் (Circle)

நம்முடைய அன்றாட வாழ்வில் பல்வேறு இடங்களில் வட்ட வடிவங்களைக் கடந்து வந்துள்ளோம். வட்ட வடிவத்தைப் புரிந்து கொள்வதற்கு முதலில் ஒரு செயல்பாட்டின் மூலம் வட்டத்தைப் படி (trace) எடுப்பது எவ்வாறு என்பதை நாம் அறியலாம்.


செயல்பாடு

பலகையில் ஆணியைப் பொருத்தி அதனைச் சுற்றிக் கயிற்றைக் கட்டுக. மேலும் மற்றொரு முனையில் பென்சிலைப் படத்தில் உள்ளவாறு பொருத்துக. கயிற்றைத் தொய்வின்றி வைத்துப் பென்சிலால் வரைக. பென்சிலானது வட்டத்தைப் படி எடுக்கிறது.

ஆணியின் நிலையை மாற்றும்பொழுது என்ன நடக்கிறது? அதே வட்டம் அல்லது மாறுபட்ட வட்டம் கிடைக்கிறதா? நாம் கயிற்றை நீளமாக்கலாமா? நீளமாக்கிய பிறகும் இதே அளவுள்ள வட்டத்தைப் பெறுவோமா

பென்சிலுக்குப் பதிலாகப் பேனாவைப் பொருத்தலாமா? வட்டம் என்னவாகிறது? ஆம். பென்சில், பேனா அல்லது வண்ணப் பென்சிலை மாற்றுவதால் வட்டத்தின் வண்ணம் மட்டுமே மாறுகிறது. ஆனால் ஆணியை இடம் மாற்றினாலோ அல்லது கயிற்றின் நீளத்தை மாற்றினாலோ வட்டத்தின் இடம் மாறுகிறது. மேலும் அளவும் மாறுகிறது. ஆணியின் நிலைப்புள்ளி மற்றும் கயிற்றின் நீளம் ஆகிய இரண்டும் வட்டத்திற்கு மிகவும் முக்கியமானவை ஆகும்

பலகையில் ஆணியின் இடம், வட்டத்தின் மையம் (O); கயிற்றின் நீளம், வட்டத்தின் ஆரம் (r) ஆகும்

வட்டத்தைப் படி எடுக்கும்பொழுது கயிற்றின் ஏதேனும் இரு நேர்க்கோட்டிலமையும் நிலைகள் வட்டத்தின் விட்டமாகும் (d). இது ஆரத்தின் இரு மடங்காகும் (d =2r).


இவற்றை முயல்க

1. வட்ட வடிவத்தில் அமைந்த வாழ்வியல் எடுத்துக்காட்டுகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இவை தவிர, மேலும் மூன்று எடுத்துக்காட்டுகளை வழங்குக.

வளையல் , மிதிவண்டி சக்கரம்  மற்றும்  கடிகாரம் .

2. உன்னுடைய மிதிவண்டிச் சக்கரத்தின் விட்டத்தைக் காண்க

என்னுடைய மிதிவண்டி சக்கரத்தின் விட்டம்  70 செமீ.

3. ஒரு வட்டத்தின் விட்டம் 14 செ.மீ எனில், அதன் ஆரம் யாது

ஒரு வட்டத்தி விட்டம்  = 14 cm

ஆரம் = 14/2 = 7 cm

4. வளையலின் ஆரம் 2 அங்குலம் எனில், அதன் விட்டம் காண்க.

வளையலின் ஆரம் = 2 அங்குலம் 

விட்டம்  = 2 × 2 = 4 அங்குலம்


செயல்பாடு 

வட்டத்தின் சுற்றளவைக் கணக்கிடுதல் 

(மாணவர்களை) வெவ்வேறு ஆரங்களில் ஐந்து வட்டங்களைத் தாளில் வரையச் செய்க. நூல் மற்றும் அளவுகோலின் உதவியுடன் அவ்வட்டங்களின் ஆரம், விட்டம் மற்றும் சுற்றளவைக் கணக்கிடச் செய்க

மேற்கண்ட அளவுகளைப் பின்வருமாறு அட்டவணைப்படுத்துக.


மேற்கண்ட அட்டவணையிலிருந்து என்ன அறிகிறீர்கள்? வட்டத்தின் சுற்றளவானது விட்டத்தின் மூன்று மடங்கைவிட அதிகமாக உள்ளது எனக் கூற முடியுமா?


Tags : Measurements | Term 2 Chapter 2 | 7th Maths அளவைகள் | இரண்டாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 2 Unit 2 : Measurements : Circle Measurements | Term 2 Chapter 2 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 2 : அளவைகள் : வட்டம் (Circle) - அளவைகள் | இரண்டாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 2 : அளவைகள்