அளவைகள் | இரண்டாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 7th Maths : Term 2 Unit 2 : Measurements
பாடச்சுருக்கம்
• வட்டம் என்பது ஒரு நிலையான புள்ளி(மையம்)யிலிருந்து, சம தொலைவில் (ஆரம்) அமைந்த புள்ளிகளை எல்லையாகக் கொண்ட வடிவமாகும்.
• ஒரு வட்டப் பகுதியைச் சுற்றி அதன் விளிம்பின் தொலைவு, அவ்வட்டத்தின் சுற்றளவு (circumference) எனப்படும்.
• வட்டத்தின் சுற்றளவு, C = πd அலகுகள், இங்கு ‘d' என்பது வட்டத்தின் விட்டம் மற்றும் π = 22/7 (அல்லது) 3.14 (தோராயமாக) ஆகும்.
• ஒரு வட்டத்திற்குள் அடைபடும் பகுதி, அந்த வட்டத்தின் பரப்பளவு ஆகும்.
• வட்டத்தின் பரப்பளவு (A) = πr2 ச. அலகுகள். இங்கு r என்பது வட்டத்தின் ஆரமாகும்.
• வட்ட நடைபாதையின் பரப்பளவு = வெளி வட்டத்தின் பரப்பளவு - உள் வட்டத்தின் பரப்பளவு =πR2 – πr2 = π (R2 –r2) ச. அலகுகள். இங்கு, R மற்றும் r என்பன முறையே வெளி மற்றும் உள்வட்ட ஆரங்களாகும்.
• செவ்வக நடைபாதையின் பரப்பளவு = வெளிப்புறச் செவ்வகப் பரப்பளவு - உட்புறச் செவ்வகப் பரப்பளவு = (LB – lb) ச.அலகுகள், இங்கு , L, B மற்றும் l, b ஆகியன முறையே வெளிப்புற, உட்புறச் செவ்வகங்களின் நீளமும் அகலமுமாகும்.
இணையச் செயல்பாடு
செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது
படி-1: கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி ஜியோ ஜீப்ரா இணையப் பக்கத்தில் 'அளவைகள்' என்னும் பணித்தாளிற்குச் செல்லவும். இரண்டு செயல்பாடுகள் உள்ளன. அவை "செயல்பாட்டின் மூலம் பரப்பளவு” மற்றும் “வட்டப்பாதை கணக்குகள்”.
படி-2 : முதல் செயல்பாட்டில் n (பிரிவுகளின் எண்ணிக்கை) என்ற நழுவலையும், r (ஆரத்தை அதிகரிக்க) என்ற நழுவலையும் நகர்த்துக, பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்பொழுது அது கிட்டத்தட்ட செவ்வகமாக ஆகிறது.
நீளம் = பரிதியில் பாதி மற்றும் அகலம் = ஆரம்.
எனவே, பரப்பளவு= நீளம் × அகலம் = πr2. மேலும் இரண்டாவது செயல்பாட்டையும் முயற்சிக்க.
செயல்பாட்டிற்கான உரலி
அளவைகள் : https://www.geogebra.org/m/f4w7csup#material/bztgqe8q
அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.