அரசியல் அறிவியல் : உள்ளாட்சி அரசாங்கங்கள் - தற்கால பிரச்சனைகள் | 11th Political Science : Chapter 11 : Local Governments
தற்கால பிரச்சனைகள்
உள்ளாட்சி அமைப்பில் உள்ள பல - பிரச்சனைகளை நிபுணர்கள் அவ்வப்போது சுட்டிக்காட்டியுள்ளார். நிபுணர்கள் சுட்டிக்காட்டிய பிரச்சனைகளை பின்வரும் பகுதிகளில் காணலாம். முதலில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு பொறுப்புகளை அதிகப்படுத்தப்படவேண்டும். இதற்கு முன் அவை மாநில அரசின் பொறுப்புகளாக இருந்தது.
பல்வேறு நிலைகளில் உள்ள அரசாங்கங்களின் திறன் மற்றும் அவர்களின் கட்டுப்பாட்டு எல்லை போன்றவற்றை கருத்தில் கொண்டு முழு அரசு இயந்திரம் - வகைப்படுத்தப்பட வேண்டும். இரண்டாவதாக, கிராம நீதிமன்றங்கள், காவல் துறையானது முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலைமையில் இது சாத்தியப்படாது. மூன்றாவதாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல விதமான பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன, அவற்றில் பல மாநில அரசின் துறைகளோடு தொடர்புடையவை.
சுருக்கமாக, சொன்னால் 73- மற்றும் 74- வது சட்டத்திருத்தம் பல சீர்த்திருத்தங்களை உள்ளாட்சி அரசாங்கத்தில் கொண்டுவந்துள்ளது. ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், சீர்திருத்தங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் உருவாக்கிய விதத்தில் இருந்தன. பல புதுமையான மாற்றங்கள் இந்த சட்ட திருத்தங்களினால் கொண்டு வரப்பட்டன. இந்தியாவில் இதுவரை 18 மாநிலங்களில் மட்டும் தான் தங்களது சட்டசபையில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்த இசைவு தந்துள்ளன. மேலும் சில மாநில அரசாங்கங்கள் சட்டத்திருத்தத்திற்கு பிறகும், உள்ளாட்சி அமைப்பு உருவாக்க சட்டம் இயற்றிய பின்னும் பல பிரிவுகளை சரிவர செயல்படுத்தவில்லை, மேற்கூறிய காரணங்களால் உள்ளாட்சி அமைப்பில் உள்ள சிக்கல்கள் உள்ளன. அவை அகற்றபடாவிட்டால் 73-வது மற்றும் 74-வது சட்டத்திருத்தத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முடியாது.
உங்களுக்குத் தெரியுமா?
பஞ்சாயத்து ராஜ்(1959-2018)
தமிழ்நாடு நகர்ப்புற சட்டங்கள் (நன்காவது சட்டத்திருத்தம்) மசோதா 2018 மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் (இரண்டாவது சட்டத்திருத்தம்) மசோதா 2018 இரண்டும் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்பு அதிகாரங்களின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்தது.
உங்களுக்குத் தெரியுமா?
15 மாநகராட்சிகளும், 152 நகராட்சிகளும், 561 பேரூராட்சிகளும் தமிழகத்தின் நகர உள்ளாட்சி அமைப்புகளாக உள்ளன.