அரசியல் அறிவியல் : உள்ளாட்சி அரசாங்கங்கள் - கலைச்சொற்கள்(Glossary) : உள்ளாட்சி அரசாங்கங்கள் | 11th Political Science : Chapter 11 : Local Governments
கலைச்சொற்கள் : Glossary
மாநகராட்சி: மாநகராட்சி என்பது பெருநகரத்தில் இயங்கும் உள்ளாட்சி அரசாங்கத்துக்கான சட்டப்படியான சொற்பதம் ஆகும். பத்து லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களில், இவ்வகையான உள்ளாட்சி அரசாங்கம் செயல்படும்.
நகராட்சி: நகராட்சி என்பது நகரங்களில் இயங்கும் உள்ளாட்சி அரசாங்கத்துக்கான சட்டப்படியான சொற்பதம் ஆகும். இதன் அதிகார எல்லையையும், அதிகார வரம்பையும் மாநில மற்றும் மத்திய அரசின் சட்டங்கள் தீர்மானிக்கின்றன.
பாளைய வாரியங்கள்: பாளைய மத்திய அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்ட ராணுவ பகுதிகளாகும். அவை பாதுகாப்பு அமைச்சத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. இதன் நிர்வாக அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், நியமன உறுப்பினர்கள் மற்றும் பதவி வழி தலைவர்கள் இடம் பெறுவர். இதனை பாளைய வாரியச் சட்டம் 2006-ஆம் தீர்மானிக்கிறது.
பேரூராட்சி: ஒரு பேரூராட்சி 20000 முதல் 25000 வரையிலான மக்கள் தொகையை கொண்ட சிறிய நகரமாகும். பஞ்சாயத்துராஜ் நிர்வாக அமைப்பின் மூலம் இந்த அமைப்பு உருவாக்கப்படுகிறது.
பஞ்சாயத்து ராஜ்: பஞ்சாயத்து ராஜ் என்பது 1992-ஆம் ஆண்டின் சட்டத்திருத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட உள்ளாட்சி அரசாங்கத்தை குறிக்கும் சொற்பதமாகும்.
கிராம சபை: கிராம சபை என்பது கிராம பஞ்சாயத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பு
மேயர்: ஒரு பெருநகரத்தை ஆள்கின்ற குழுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்.
வார்டு: ஒரு உள்ளாட்சி அமைப்பின் நில பகுதிகள் வார்டுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வார்டும் ஒரு உறுப்பினரை கொண்டிருக்கும். அவர் அந்த வார்டின் பிரதிநிதியாவார்.
கவுன்சிலர்: சபையின் உறுப்பினர்
நகர்பாலிகா: இந்தியாவில் நகர்பாலிகா என்பது 1,00,000 மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகர உள்ளாட்சியை நிர்வகிக்கும் அமைப்பு.
இரட்டையாட்சி: சுதந்திரமான இரு அதிகாரம் பெற்ற அமைப்புகளால் நடத்தப்படும் அரசாங்கம். (இந்தியாவில் 1919-ஆம் ஆண்டு முதல் 1935-ஆம் ஆண்டு வரை நடைப்பெற்றது)