அரசியல் அறிவியல் : உள்ளாட்சி அரசாங்கங்கள் - தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் | 11th Political Science : Chapter 11 : Local Governments
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள்
73-வது மற்றும் 74-வது சட்டத்திருத்தத்தின் மூலம் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது, தமிழகத்தின் உள்ளாட்சி அரசாங்கம் பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
73-வது சட்டத்திருத்தத்தின் மூலம் தமிழக அரசாங்கத்தின் அரசமைப்பு கடமைகளாக, அதிகாரத்துடன் கூடிய கிராம சபைகளை அனைத்து கிராமங்களிலும் உருவாக்குதல். பொதுவான மேற்பார்வை மற்றும் பஞ்சாயத்தின் வருடாந்திர திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல் முதலான அதிகாரங்கள் பஞ்சாயத்து, மூன்று அடுக்குகளை கொண்ட உள்ளாட்சி அமைப்பை உருவாக்குதல் மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், கிராம பஞ்சாயத்து போன்றவை உள்ளன.
இந்த உள்ளாட்சி அமைப்பில் பெண்கள், (பட்டியலினத்தவர் / பழங்குடியினர்) மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடும், வரி விதிக்கும் அதிகாரமும், நிதி ஆதாரம் பெறவும் வழிவகை செய்யப்பட்டன. மேலும் மாநில அரசிடமிருந்து நிதியைப் பெற்று பயன்படுத்துவதற்கு மாநில நிதி ஆணையம் ஏற்படுத்தப்பட்டது
உங்களுக்குத் தெரியுமா?
தமிழ்நாட்டில் 12,620 கிராம பஞ்சாயத்தும், 385 ஊராட்சி ஒன்றியமும், 30 மாவட்ட பஞ்சாயத்தும் உள்ளது.
74-வது சட்டத்திருத்தத்தின் மூலம் அதிகார பகிர்வு உருவாக்கப்பட்டுவரிவிதிக்கும் அதிகாரம், மாநில அரசுடன் வருமான பகிர்வு, சீரான தேர்தல் நடத்துதல், பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர் பழங்குடியினர் இடஒதுக்கீடு உருவாகின. மேலும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நகர அமைப்பு உருவாகவும் வழி செய்தன.
73-வது சட்ட திருத்தம் படி, மாற்றங்கள் கொண்டு வருவதற்காக, தமிழ்நாட்டில் ஏற்கனவே அமலில் இருந்த தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1958 மாற்றப்பட்டு தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1994 புதிதாக இயற்றப்பட்டது. பின்பு இது 1996-ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. இந்த திருத்தத்தின் மூலம் வளர்ச்சிக்கான திட்டங்களை ஏற்படுத்த, மாவட்ட திட்டக்குழு,மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாநில நிதி ஆணையம் போன்றவை உருவாக்கப்பட்டன.
இந்த 1994 சட்டத்தின் படி தமிழ்நாட்டில் முதலில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக 1,17,000 பிரதிநிதிகள் பஞ்சாயத்தின் மூன்றடுக்குகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நகர உள்ளாட்சி அரசாங்கம்
74-வது சட்டத்திருத்தம் பல்வேறு மாநிலங்களில் நகர உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்க வழி செய்தது. தமிழகத்தில் நகர உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் 1996, 2001, மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது.