அரசியல் அறிவியல் - பொதுக்கருத்தினை வரையறுத்தல் | 11th Political Science : Chapter 9 : Public Opinion and Party System
பொதுக்கருத்தினை வரையறுத்தல்
பொதுக்கருத்து ஓர் உளவியல் மற்றும் சமூகத்தில் உள்ள அனைவரின் நம்பிக்கைக்கும், இசைவான தனிநபரின் நடத்தை சார்ந்த சமூக செயல்முறையாகும். சுருக்கமாக, இது மக்களின் கூட்டு பார்வை, அவர்களுடைய அணுகுமுறை மற்றும் கருத்துக்கள் ஆகும்.
இது அரசாங்கம், அரசியல் குறித்த முன்னுரிமைகள் சார்ந்த மக்களின் கூட்டு விருப்பமாகும். மக்களாட்சி என்பது அனைவரின் ஒன்றிணைந்த தனிகருத்துகளும், பொதுக்கருத்துகளும், தனி நபர்க் கருத்துகளை விட முக்கியத்துவம் வாய்ந்தது என்ற கூற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஒன்றிணைந்த குழுக்கள், அரசாங்க தலைவர்கள், ஊடக உயர்குடியினர் ஆகியோர் பொதுக்கருத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
பொது மக்களின் கருத்துகளின் மீது ஊடகங்களின் தாக்கம் உள்ளது. உண்மையில், மக்களாட்சி அதன் அதிகாரத்துவத்தை மக்களிடமிருந்து பெறுகின்றது. பொதுக்கருத்து என்பது ஒரு தனிநபரின் கருத்து அல்ல, அந்நபர் மிகவும் மதிக்கப்படும் நபராகவும் இருக்கலாம். இது ஒரு தனிப்பட்ட கருத்தும் அல்ல. அவர் எத்தகைய நிபுணத்துவத்தைப் பெற்றிருப்பினும், பொதுக்கருத்து என்பது ஒரு பொது விவகாரத்தில் ஒன்றோ அல்லது பல பிரிவு மக்களோ ஒருங்கிணைந்த, ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தாகும். இது உண்மையில் பொதுக்கருத்தாகும்.
மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படுவதற்கு பொதுக்கருத்து என்பது ஓர் அத்தியாவசிய கூறாகும். அங்கே குடிமக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. மக்களின் கருத்துகளைப் புறக்கணித்து எந்த ஒரு அரசாங்கமும் நிலைத்திருக்க முடியாது.