அரசியல் அறிவியல் - அரசியல் கட்சிகளின் வரையறை | 11th Political Science : Chapter 9 : Public Opinion and Party System
அரசியல் கட்சிகளின் வரையறை
அரசியல் கட்சிகள் மக்களாட்சி முறை அமைப்புக்கு இன்றியமையாத கருவியாகும். அவைகள் திட்டவட்டமான லட்சியங்கள் மற்றும் செயல்திட்டத்துடன் உருவாக்கப்படுகின்றன. அவை பொது மக்களிடம், சமுதாயம் மற்றும் அரசுக்கு உள்ள பிரச்சனைகளைப் பற்றி விழிப்பூட்டுவதுடன் மாற்றுத் திட்டங்களையும் பரிந்துரைக்கின்றன. பரப்புரையின் மூலம் மக்கள் அரசியல் பிரச்சினைகளை அறியும்படி செய்வதுடன் தங்களின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களுக்கான ஆதரவையும் பெறுகின்றன.
பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு இடையே தொடர்ச்சியான போட்டி உள்ளதுடன் இந்த போட்டி மக்களாட்சியினை முதிர்ந்த செயல்பாட்டை உறுதி செய்கிறது.
குறிப்பிடத்தக்க மேற்கோள்
ஓர் மக்களாட்சியில் அரசியல் கட்சிகளின் மூலமாகவே பொதுக்கருத்துக்கள் வழி நடத்தப்படுகின்றன.
செயல்பாடு
மக்களாட்சியில் அரசியல் கட்சிகளின் பல்வேறு செயல்பாடுகளின் பட்டியல் பின்வருமாறு உள்ளன.
❖ கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடும்.
❖ கட்சிகள் வேறுபட்ட கொள்கைகளையும் திட்டங்களையும் முன்வைக்கும்.
❖ கட்சிகள் நாட்டிற்கான சட்டங்களை உருவாக்குகின்றன.
❖ கட்சிகள் அரசாங்கத்தை அமைத்து செயல்படுகின்றன.
❖ எதிர்க்கட்சிகளாகவும் கட்சிகள் பங்கு வகிக்கின்றன.
❖ கட்சிகள் பொதுக்கருத்துகளை வடிவமைக்கின்றன.
❖ அரசாங்கத்தின் நலத் திட்டங்களை மக்கள் பெறுவதற்கு கட்சிகள் உதவுகின்றன.
ஒரு மாதத்திற்கு செய்தித்தாள்களைப் படித்து, அரசியல் கட்சிகளின் பல்வேறு செயல்பாடுகள் தொடர்பான செய்திகளை சேகரிக்கவும்.