அரசியல் அறிவியல் - கலைச்சொற்கள்(Glossary) : பொதுக்கருத்து மற்றும் கட்சி | 11th Political Science : Chapter 9 : Public Opinion and Party System
கலைச்சொற்கள்: Glossary
அரசியல் கட்சி : தன் உறுப்பினர்களை, பொது அலுவலகத்திற்கு தேர்ந்தெடுப்பதன் மூலம் அரசியல் அதிகாரத்தை பெறும் ஓர் அமைப்பு.
ஒருகட்சி முறை: அரசமைப்பை அடிப்படையாக கொண்டு அரசாங்கம் அமைக்கும் உரிமையை பெற்ற ஓர் அரசியல் கட்சி அல்லது அரசியல் அதிகாரத்தின் மீது தனிப்பட்ட கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் ஒரே ஒரு அரசியல் கட்சி.
இரு கட்சி முறை : இந்த அமைப்பில் இரண்டு கட்சிகள் மட்டுமெ அரசியலில் இருக்கும். இவற்றுள் ஒன்று ஆளும் கட்சியாகவும் மற்றொன்று எதிர்க்கட்சியாகவும் இருக்கும். இந்த முறையில் பெறும்பான்மையை பெறுவதற்கு மிகுந்த வாய்ப்பு உள்ளது. மற்ற கட்சிகள் மிக சிறிய கட்சிகளாகவோ அல்லது நாட்டின் ஒரு பகுதியில் மட்டும் இயங்கும் கட்சிகளாகவோ இருக்கும்.
பல கட்சி முறை : பல அரசியல் கட்சிகள் அரசாங்க பதவிகளை தனித்தனியாகவோ அல்லது கூட்டணியிலோ கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ள ஒரு அமைப்பு.
தேர்தல் : தகுதி வாய்ந்த நபர்களை ஆட்சி அதிகாரத்திற்கு வாக்கெடுப்பின் மூலம் மக்கள் தேர்ந்தெடுக்கும் முறை.
தேர்தல் ஆணையம் : தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற ஒரு அமைப்பு. மாநில சட்டப்பேரவைகள், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தவும், மேற்பார்வையிடவும் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு.
தேர்தலியல் : தேர்தல் அதன் முடிவுகள், அது தொடர்பான புள்ளி விவரங்கள் பற்றிய படிப்பு.
தேர்தல் முறைமை : தேர்தல்களைப் பற்றிய அனைத்து விதிகளுக்கான பொது பெயர், வாக்காளர்களின் பதிவு, வேட்பாளர், பிரச்சார செலவு, ஒளிபரப்பு முதலியன.
பெரும்பான்மை அரசாங்கம் : சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தில் ஐம்பது சதவிகித இடங்களுக்கு மேல் கொண்டு அமைக்கும் அரசாங்கம்...
மக்களாட்சி : மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சியாகும்.