அரசியல் அறிவியல் - மக்களாட்சியில் அரசியல் கட்சிகளின் பங்கு | 11th Political Science : Chapter 9 : Public Opinion and Party System
மக்களாட்சியில் அரசியல் கட்சிகளின் பங்கு
மக்களாட்சியின் தரம் மற்றும் செயல்திறனை உறுதி செய்கின்ற விதமாக அரசியல் கட்சிகள் இருப்பு இருக்கின்றன. அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற கூட்டாட்சிகளில் உள்ள பன்முக பண்பாடு மற்றும் பன்மை சமூகங்களில் அமைதி ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக பராமரிப்பது அவசியம் ஆகின்றது. ஒரு கட்சி முறையில் விரைந்து முடிவெடுக்கவும், ஒத்திசைவு நடவடிக்கைகளுக்கு அதிக நெகிழ்வுத் தன்மையைக் கொண்டிருக்கும்போது இந்த முடிவுகள் பரந்துபட்ட மக்களின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தாது. இதனால் அரசாங்கத்திற்கு எதிரான அதிக எதிர்ப்பையும் பேதங்களையும் அது உருவாக்கும்.
கட்சியின் கட்டமைப்பு மற்றும் தலைமையின் இயல்பு காரணமாக இரு கட்சி முறைமையில், பொது கொள்கைகளிலும், முடிவுகளிலும், ஒத்துழைப்புக்கு மாறாக அரசியல் மைய்யப்படுத்தப்படுகிறது. பலகட்சி முறையில் கூட்டணி கட்சிகளிடையே கவனமாக கருத்தில் கொண்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அதன் செயல்திறன் உள்ளது. மேலும் விவாதங்களினால் பரஸ்பர அடிப்படையிலான ஒருமித்த கருத்தை அடைவதன் மூலமும் பெரும்பாலும் பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன. எனவே அரசியல் கட்சிகள் மக்களுடைய உரிமைகளையும், சுதந்திரங்களையும் காப்பாற்ற வேண்டியது முக்கியமான ஒரு மக்களாட்சியின் உந்து சக்திகள் ஆகும். பயனுள்ள குடியுரிமை பயிற்சி மற்றும் அதிக குடிமக்கள் பங்கேற்பு மூலம் மக்களாட்சி நாடுகளில் உள்ள இளைஞர்கள் அரசியல் கட்சிகளிள் பெரிய பங்கினை வகிக்க முடியும். இதனால் உலக நாடுகளில் முதிர்ச்சியடைந்த மற்றும் பரந்த மக்களாட்சிமயமாக்கலை வளர்க்க முடியும்.
மக்களாட்சியில் அரசியல் கட்சிகளின் பங்கு
• அரசியல் கட்சியின் பொதுப்பதவிகளுக்காக வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து தேர்தலில் நிறுத்துகின்றன.
• அவை கட்சியின் பெயரில் அரசாங்க அதிகாரிகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, ஒருதரப்படுத்த முயற்சி செய்கின்றன.
• பல அரசியல் அறிஞர்கள் கட்சிகள் மக்களாட்சிக்கு அவசியம் என்று நம்புகிறார்கள்.
• அரசியல் கட்சி என்பது மக்களது இறையாண்மை மற்றும் பெரும்பான்மை ஆட்சியின் பிரதான கருவியாக ஒரு சிலரால் கருதப்படுகிறது.
• அரசியல் கட்சிகள் ஒழுங்காக வேலை செய்யும் பொழுது, மக்களின் இறையாண்மைக்கான அவசியமான கருவிகளாக அவை இருக்கலாம்.
குறிப்பிடத்தக்க மேற்கோள்
அரசியல் கட்சிகளே மக்களாட்சியின் உந்து சக்திகள் ஆகும்.
பொதுக்கருத்தினை உருவாக்குவதற்கு அரசியல்வாதிகள் தங்களது பேச்சாற்றல் மற்றும் தலைமைத் திறன்களைப் பயன்படுத்துகின்றனர்.