இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் | புவியியல் | சமூக அறிவியல் - வேறுபடுத்துக. | 10th Social Science : Geography : Chapter 6 : India - Population, Transport, Communication & Trade

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 5 : இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

வேறுபடுத்துக.

சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

IV. வேறுபடுத்துக.

 

1. மக்களடர்த்தி மற்றும் மக்கட்தொகை வளர்ச்சி.


மக்களடர்த்தி

இது சராசரியாக ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையை குறிப்பிடுகிறது.

மக்கட்தொகை வளர்ச்சி

மக்கள் தொகை மாற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியிலிருந்து மற்றொரு காலப் பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதையோ அல்லது குறைவதையோ குறிப்பிடுவதாகும்.

 

2. தனிநபர் தகவல் தொடர்பு மற்றும் பொதுத் தகவல் தொடர்பு


தனிநபர் தகவல் தொடர்பு

1. தனிநபர்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் தனிமனித தகவல் தொடர்பு என அழைக்கப்படும்

2. இது அஞ்சல் சேவை, தந்தி, கைப்பேசி, பிரதிகள், குறுந்தகவல், இணையதளம் போன்றவை உள்ளடக்கியது.

பொதுத் தகவல் தொடர்பு

1. பொது தகவல் தொடர்பு என்பது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் தகவல்களை பெறுவதாகும்.

2. இது கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் சிறந்த வழியாகும்.

 

3. அச்சு ஊடகம் மற்றும் மின்னனு ஊடகம்.


அச்சு ஊடகம்

1. செய்தித்தாள் எல்லோராலும் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த அச்சு ஊடகத்தின் கீழ்வரும் ஒரு தகவல் தொடர்பு சாதனமாகும்.

2. இந்தியாவில் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் செய்திகளை அளிக்கக்கூடிய பல செய்தித்தாள்கள் உள்ளன.

மின்னணு ஊடகம்

1. இது கல்வி, செய்தி மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.

2. சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள் மற்றும் சிறப்பு விழாக்கள் தொடர்பான நிகழ்வுகளையும் சிறப்பு செய்திகளாக ஒளிபரப்புகிறது.

 

4. சாலைவழி போக்குவரத்து மற்றும் இரயில்வழி போக்குவரத்து.


சாலைவழி போக்குவரத்து

1. சாலை வழி குறுகிய மற்றும் நீண்ட தூரத்திற்கு பயணிகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்கிறது.

2. சாலைகள் அமைப்பதும், அதனை பராமரிப்பதும் எளிது.

3. அதிக பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக அனுப்ப முடியாது.

இரயில்வழி போக்குவரத்து

1. மிக அதிக அளவிலான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் தேவையை பூர்த்தி செய்கிறது.

2. இரயில் தடங்களை அமைப்பதும், அதனை பராமரிப்பதும் கடினம்.

3. அதிக பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக அனுப்பலாம்.

 

5. நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வான்வழிப் போக்குவரத்து.


நீர்வழிப் போக்குவரத்து

1. மெதுவான போக்குவரத்து.

2. குறைந்த செலவு.

3. சுற்றுச்சூழலைப் பாதிக்காது.

4. கனமான பொருளை எடுத்து செல்லும்.

வான்வழிப் போக்குவரத்து

1. விரைவான போக்குவரத்து.

2. அதிக செலவு.

3. சுற்றுச்சூழலைப் பாதிக்கும்.

4. பயணிகள், சரக்குகள் மற்றும் அஞ்சலை எடுத்துச் செல்லும்.

 

6. உள்நாட்டு வணிகம் மற்றும் பன்னாட்டு வணிகம்.


உள்நாட்டு வணிகம்

1. ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம்.

2. உள்நாட்டு வணிகம் எனவும், உள்ளூர் வணிகம் எனவும் அழைக்கப்படுகிறது.

3. உள்நாட்டு வணிகத்தில் நிலவழி போக்குவரத்து முக்கிய பங்காற்றுகிறது.

4. இவ் வணிக முறையில் உள்நாட்டு நாணயம் பயன்படுத்தப்படுகிறது.

பன்னாட்டு வணிகம்

1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம்.

2. பன்னாட்டு வணிகம் அல்லது அயல்நாட்டு வணிகம் எனவும் அழைக்கப்படுகிறது.

3. பன்னாட்டு வணிகத்தில் நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

4. இதில் அந்நிய நாட்டு பணம் பயன்படுத்தப்படுகிறது.

 

Tags : Population, Transport, Communication & Trade in India | Geography | Social Science இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் | புவியியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Geography : Chapter 6 : India - Population, Transport, Communication & Trade : Distinguish between Population, Transport, Communication & Trade in India | Geography | Social Science in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 5 : இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் : வேறுபடுத்துக. - இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் | புவியியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 5 : இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்