Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | திராவிட இயக்கம்: இரண்டாம் உலகப்போர் காலத்திலும் அதன் பின்னரும்

தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி - திராவிட இயக்கம்: இரண்டாம் உலகப்போர் காலத்திலும் அதன் பின்னரும் | 11th Political Science : Chapter 13 : Political Developments in Tamilnadu

   Posted On :  04.10.2023 06:48 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 14 : தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி

திராவிட இயக்கம்: இரண்டாம் உலகப்போர் காலத்திலும் அதன் பின்னரும்

1939 ஆம் ஆண்டு இந்தியா இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேய அரசாங்கத்தால் ஈடுபடுத்தப்படுவதை விரும்பாத காங்கிரசு அமைச்சரவை பதவியை துறந்தது. பெரியார் திராவிட நாடு கோரிக்கையை எழுப்பினார்.

திராவிட இயக்கம்: இரண்டாம் உலகப்போர் காலத்திலும் அதன் பின்னரும்

1939 ஆம் ஆண்டு இந்தியா இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேய அரசாங்கத்தால் ஈடுபடுத்தப்படுவதை விரும்பாத காங்கிரசு அமைச்சரவை பதவியை துறந்தது. பெரியார் திராவிட நாடு கோரிக்கையை எழுப்பினார்.

1944 ஆம் ஆண்டு நீதிக்கட்சி பெரியார் தலைமையிலான சேலம் மாநாட்டில் அதன் பெயரை "திராவிடர் கழகம்" என மாற்றியும், திராவிட நாடு அடைவதே தனது லட்சியம் என்றும் அறிவித்து, சமூக பண்பாட்டு சமத்துவத்திற்கு முன்பாக விடுதலை அடைவது தமிழர்களின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று கூறினார். 1949 ஆம் ஆண்டில், திராவிட கழகத்தை விட்டு பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணாதுரையால் ஆரம்பிக்கப்பட்டது.

1951ஆம் ஆண்டில் உச்ச நீதி மன்றமானது உயர்கல்வியில் சாதிவாரி இடஒதுக்கீட்டை உடைத்து எறிந்தது. உடனடியாக பெரியாரின் திராவிடர் கழகம் மீண்டும் சாதிவாரி இடஒதுக்கீட்டைத் திரும்ப பெற போராட்டத்தை துவக்கியது.


திராவிட முன்னேற்ற கழகமும் கூட இந்த போராட்ட இயக்கத்தில் சேர்ந்து கொண்டது. காங்கிரசு தலைவர் காமராஜர் இந்த சிக்கலை மத்தியில் இருக்கும் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதனைத் தொடர்ந்து சமூக மற்றும் கல்வி அடிப்படையில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சாதகமாக இட ஒதுக்கீடு அளிக்கும் முதலாவது நாடாளுமன்ற சட்டத் திருத்தம் இயற்றப்பட்டது

Tags : Political Developments in Tamilnadu தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி.
11th Political Science : Chapter 13 : Political Developments in Tamilnadu : Dravidian Movement during second World War and after Political Developments in Tamilnadu in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 14 : தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி : திராவிட இயக்கம்: இரண்டாம் உலகப்போர் காலத்திலும் அதன் பின்னரும் - தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 14 : தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி