Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்குப் பிறகு திராவிட ஆட்சி

தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி - தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்குப் பிறகு திராவிட ஆட்சி | 11th Political Science : Chapter 13 : Political Developments in Tamilnadu

   Posted On :  04.10.2023 06:54 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 14 : தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி

தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்குப் பிறகு திராவிட ஆட்சி

கடந்த 62 ஆண்டுகளாக தமிழகத்தை திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. 1957-ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அரசியலில் நுழைய தீர்மானித்தது. இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்ததின் விளைவாகவும், புதிதாக திருத்தம் செய்யப்பட்ட தேர்தல் விதிகளை கடந்து வரவும், தனது "திராவிட நாடு" கோரிக்கையைக் கைவிட்டது.

தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்குப் பிறகு திராவிட ஆட்சி


கடந்த 62 ஆண்டுகளாக தமிழகத்தை திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. 1957-ஆம் ஆண்டு தி.மு.. தேர்தல் அரசியலில் நுழைய தீர்மானித்தது. இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்ததின் விளைவாகவும், புதிதாக திருத்தம் செய்யப்பட்ட தேர்தல் விதிகளை கடந்து வரவும், தனது "திராவிட நாடு" கோரிக்கையைக் கைவிட்டது. 1967-ஆம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அண்ணாதுரை சிறிது காலமே ஆட்சி புரிந்தார். (1967-1969), இருந்த போதிலும், சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என்றும், திருமணச் சட்டத்தை இயற்றியது, மத்திய அரசாங்கத்தின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்தது. தமிழகத்தில் இரு மொழி கொள்கையை (ஆங்கிலம் மற்றும் தமிழ்) நடைமுறைப்படுத்தியது ஆகியவை அவரின் குறிப்பிடத்தக்க சாதனைகள் ஆகும்.

சி.என். அண்ணாதுரை முதன்முறையாக, மலிவு விலை அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். (படி அரிசி, ஒரு ரூபாய்) அவருக்கு பின் வந்த திரு. மு. கருணாநிதி அம்மரபினைத் தொடர்ந்தார்.

1972 ஆம் ஆண்டு எம்.ஜி. ராமச்சந்திரன் தன்னுடைய திராவிட கட்சியை தொடங்கினார். (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - ...தி.மு.) 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றினார். இதனை 1987-இல் தனது இறப்பு வரை தக்கவைத்துக் கொண்டார். அதன்பிறகு மு.கருணாநிதி தலைமையில் தி.மு.கவும் செல்வி. ஜெ. ஜெயலலிதா தலைமையில் ...தி.மு.கவும் அடுத்தடுத்த தேர்தல்களில் மாறிமாறி வெற்றி பெற்று அமைச்சரவையை ஏற்படுத்தினர். மேலும், இவை இரண்டோடு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் போன்ற உடைப்பின் வழி திராவிட கட்சிகளும் சில இருக்கின்றன.


அறுபது வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு திராவிட ஆட்சி பங்களித்துள்ளது. அவர்கள் தமிழ் மொழியின் நலன், தமிழக மக்கள், தமிழ்நாடு ஆகியவற்றின் நலனை உறுதியுடன் பாதுகாத்தனர். சாதாரண மக்களின் துன்பங்களை போக்குவதற்காக பல்வேறு சமூக நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை மலிவு விலையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தது. பின்னர் இலவச அரிசித்திட்டம், சத்துணவுத் திட்டம், பட்டபடிப்பு வரை இலவச கல்வி, விவசாயத்திற்கு இலவச மின்சாரம், "சைக்கிள் ரிக்க்ஷா ஒழிப்பு", "கையால் மலம் அள்ளுவது ஒழிப்பு", கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான "தொட்டில் குழந்தை திட்டம்", அமைப்பு சார பணியாளர்களுக்கு பல்வேறு நலவாரியங்கள், இன்னும் கூறினால் மாற்றுப்பாலினத்தவர் நலன் போன்றவற்றை உறுதி செய்தன. ஒருவரை ஒருவர் அழிக்கும் சாதி சண்டைக்கும் "சமத்துவபுரமும்", "உழவர் சந்தையும்" உருவாக்கப்பட்டன.


குடிசைகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டது. குடிசைவாசிகளின் குடியிருப்புத் தேவைக்கு குடிசை மாற்று வாரியம் ஏற்படுத்தப்பட்டது. இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக வியக்கத்தக்க அளவு தொழில் வளர்ச்சி அதிகரிக்கப்பட்டது. இந்த வளர்ச்சியின் விளைவாக தமிழ்நாடு மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் (HDI) உயர்ந்த மதிப்பைப் பதிவு செய்தது. இன்று தமிழ்நாடு மோட்டார் வாகனத்தொழில், (தானியங்கி), மின்னணு, மற்றும் மருந்து உற்பத்தி துறைகளில் முன்னணி நிலையில் இருக்கிறது. அதன் புதிய பொருளாதார மண்டல ங்கள் பெருமளவு முதலீடுகளை ஈர்த்துள்ளன. தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் சாதனைகள் அனைவராலும் புகழ்ந்து பேசப்படுகிறது. சாலைகள், துறைமுகங்கள், மின்சாரவசதி, திறன் பெற்ற தொழிலாளர்கள் கிடைப்பது போன்றவைகள் தொழில் வளர்ச்சியை எளிமைப்படுத்தியுள்ளன.

பல்வேறு வகைகளில் பன்மடங்கு பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கைகள் உயர்ந்துள்ளன. இங்கு பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துள்ளது. இவற்றுள் தனித்தன்மையான பல்கலைக் கழகங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் பெண்களுக்கென்று தனியாகப் பெண்கள் பல்கலைக் கழகம் உள்ளதுடன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சட்டம், மருத்துவம், சித்த மருத்துவம், விளையாட்டு போன்றவற்றிற்கும் தனியாகப் பல்கலைக்கழகம் உள்ளன. தமிழ்பல்கலைக்கழகம் மூலம் தமிழ்மொழி மேம்பாடு, தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ்மாநாடு, செம்மொழி மாநாடு, எழுத்து சீர்திருத்தம் என தமிழ்மொழியை அனைத்து வகையிலும் முன்னேற்றுவதற்கு நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டது

திராவிட கட்சிகள், அண்ணாதுரையின் காலத்தில் இருந்து மதச்சார்பற்ற தன்மை மாநில தன்னாட்சி போன்றவற்றிற்காகப் பாடுபட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகள் தேசிய அரசியலின் நீடித்த தன்மைக்குக் கூட பங்காற்றியிருக்கின்றன. தமிழகத்தில் திராவிட அரசியல் செல்வாக்கு தொடர்ந்து வல்லமை பெற்றதாக இருக்கிறது.

Tags : Political Developments in Tamilnadu தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி.
11th Political Science : Chapter 13 : Political Developments in Tamilnadu : Dravidian Rule in Post - Independence Tamilnadu Political Developments in Tamilnadu in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 14 : தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி : தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்குப் பிறகு திராவிட ஆட்சி - தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 14 : தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி