தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி - கலைச்சொற்கள்(Glossary) : தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி | 11th Political Science : Chapter 13 : Political Developments in Tamilnadu
கலைச்சொற்கள் : Glossary
கூட்டணி: அரசியல் கட்சிகள், குறிப்பாக தேர்தல் நேரத்தின் பொழுது உருவாக்கி கொள்ளும் தற்காலிக உடன்படிக்கை ஆகும்.
திராவிடர்: தென்னிந்திய பகுதிகளில் பேசப்படும் குடும்ப மொழிகளின் பதத்தினை குறிக்கும். குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா பிரதேசம் மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் வாழும் திராவிடமொழி பேசும் மக்கள்.
மின் ஆளுகை: மின்-ஆளுகை என்பது பொதுமக்களுக்கு தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தின் (ICT) பயன்பாட்டின் மூலம் சேவை வழங்குதல் ஆகும்.
மக்கள் ஈர்ப்புவாதம்: பொதுமக்களுக்கு நலகத் திட்டங்களை வழங்க அவர்களின் ஆதரவை பெறும் நோக்கத்துடன் செய்யப்படும் அரசியல் நடவடிக்கை ஆகும்.
முற்போக்குவாதம்: தங்கள் கொள்கைகளை, திட்டங்களை மிகவும் தீவிரமான வழிகளில் ஆதரித்து பேசுவோர்.
பிராந்தியவாதம்: இது ஒரு அரசியல் கொள்கை. இது ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது மாநிலத்தின் நலனில் குறிப்பாக ஆவணம் செலுத்தும், தேசத்திற்காக அல்ல.
இடஒதுக்கீடு: இது முக்கியமாக, ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகத்தினரை சமூக-அரசியல்பொருளாதார அரங்கில் அதிகாரமளிப்பதைக் குறிக்கும். நேர்முக பாகுபாடு என்பது இதன் பொருளாகும்.
சமூகநீதி: இது ஒரு அரசியல் கருத்து எல்லா மக்களும் செல்வம் சுகாதாரம் நலம், நீதி வாய்ப்பு, ஆகியவற்றை சமமாக பெறும்படியாக செய்ய வேண்டும் என்பதை தாங்கிப் பிடிக்கிறது.
சமூக நலம்: ஏழைகள், தேவை உடையோர், ஒதுக்கப்பட்ட மக்கள் ஆகியோருக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவி, சேவைகளைக் குறிக்கும்.
மாநில சுயாட்சி: மாநில சுயாட்சி என்பது அரசாங்கங்கள் அரசியல் மற்றும் பொருளாதார அரங்கில் முழுமையான தன்னாட்சியுடன் இருப்பதற்கான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு கோட்பாடாகும்.