Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | காமராஜர் காலம் (1954 - 1963)

தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி - காமராஜர் காலம் (1954 - 1963) | 11th Political Science : Chapter 13 : Political Developments in Tamilnadu

   Posted On :  04.10.2023 06:51 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 14 : தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி

காமராஜர் காலம் (1954 - 1963)

காமராஜர் தொடக்கக் கல்வித்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்ததுடன் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். பள்ளிகளின் எண்ணிக்கையை பன்மடங்கு உயர்த்தினார், பல அணைகளைக் கட்டி நீர்பாசன வசதியை உயர்த்தினார்.

காமராஜர் காலம் (1954 - 1963)

காமராஜர் தொடக்கக் கல்வித்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்ததுடன் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். பள்ளிகளின் எண்ணிக்கையை பன்மடங்கு உயர்த்தினார், பல அணைகளைக் கட்டி நீர்பாசன வசதியை உயர்த்தினார். நிறைய தொழிற்பேட்டைகளை (Industrial Estates) அமைத்தார். அதன் மூலம் மாநிலத்தில் வியக்கத்தக்க அளவிற்கு தொழில்வளர்ச்சியை உறுதி செய்தார். ஏழைகிராமபுற குழந்தைகளும் கல்வி பெறச் செய்தார். அவர் குழந்தைகளுக்கு மதிய உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.



திராவிட கட்சிகளின் ஆட்சி

1967-ஆம் ஆண்டு பொது தேர்தலில் காங்கிரசு கட்சி தோற்கடிக்கப்பட்டது. தி.மு.. வெற்றி பெற்று சி.என்.அண்ணாதுரை முதலமைச்சரானார். அனைத்து ஏழைகளுக்குமான வீட்டு வசதி, படியரிசி திட்டத்தின் மூலம் உணவு பாதுகாப்பிற்கு முன்னோடியாக இருந்தது மற்றும் குடிசை மாற்றுவாரியம் அமைத்தது போன்றவற்றால் நகர்புற ஏழை மக்களிடம் போதுமான அளவு அண்ணாவிற்கு ஆதரவு பெருகியது. மிகவும் முக்கியமாக 1969 ஆம் ஆண்டு சி.என். அண்ணாதுரையின் தலைமையிலான அரசாங்கம் "மெட்ராஸ்" மாநிலத்தின் பெயரை "தமிழ்நாடு" என பெயர்மாற்றம் செய்தது. அக்கட்சியின் இதர முக்கிய சாதனைகள்.

உங்களுக்குத் தெரியுமா?

1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலமாக சென்னை மாகாணத்தில் இருந்து மலையாளப் பகுதிகள் கேரளாவிற்கும், தெலுங்கு பகுதிகள் ஆந்திரப் பிரதேசத்திற்கும், கன்னடப் பகுதிகள் மைசூர் மாநிலத்திற்கும் தரப்பட்டது. இங்ஙனம் சென்னை மாகாணம் தமிழர்களின் மாநிலமாக உருவானது.

காமராஜர் ஓர் நிலையான ஆட்சியைத் தந்தார்.


1. 75 மைல் தொலைவிற்கு மேல் உள்ள பேருந்து தடங்களை தேசியமயமாக்கியது

2. அனைத்து சாதி ஏழை மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வி மற்றும் தொழிற்கல்விக்கு முந்தைய படிப்புகளுக்கு கல்வி கட்டண விதிவிலக்கு அளிக்கப்பட்டது

3. இரண்டாவது உலக தமிழ் மாநாடு நடத்தப்பட்டது

4. தமிழக ஏழை மக்களுக்கு மானிய விலையில் அரிசி வழங்கப்பட்டது.

Tags : Political Developments in Tamilnadu தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி.
11th Political Science : Chapter 13 : Political Developments in Tamilnadu : Kamaraj Era (1954-1963) Political Developments in Tamilnadu in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 14 : தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி : காமராஜர் காலம் (1954 - 1963) - தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 14 : தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி