Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | திராவிட இயக்கத்தின் தோற்றம்

தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி - திராவிட இயக்கத்தின் தோற்றம் | 11th Political Science : Chapter 13 : Political Developments in Tamilnadu

   Posted On :  04.10.2023 06:33 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 14 : தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி

திராவிட இயக்கத்தின் தோற்றம்

சென்னை மாகாணத்தில் பிராமணரல்லாதோரின் தமிழ் அடையாளம், சமூக அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாப்பிற்காக ஓர் பிராமணரல்லாத குழுவால் துவங்கப்பட்டதே "திராவிட இயக்கமாகும்."

திராவிட இயக்கத்தின் தோற்றம் 

சென்னை மாகாணத்தில் பிராமணரல்லாதோரின் தமிழ் அடையாளம், சமூக அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாப்பிற்காக ஓர் பிராமணரல்லாத குழுவால் துவங்கப்பட்டதே "திராவிட இயக்கமாகும்."


திராவிடர்கள் மற்றும் பிராமணரல்லாதோர்

1801 ஆம் ஆண்டு பன்மொழி கொண்ட சென்னை மாகாணமானது (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் துலு) காலனிய ஆட்சியால் உருவாக்கப்பட்டது. இந்தியாவினுடைய பன்மைத் தன்மையை சென்னை மாகாணத்தின் அரசியல் வளர்ச்சியில் காணமுடியும். வங்காளத்திலும், வடஇந்தியாவின் பிற பகுகளிலும் சமஸ்கிருதம் மற்றும் வேதங்களை மையப்படுத்திய இந்திய பண்பாடு முன் எடுக்கப்பட்டது. இவற்றோடு இந்தோ - ஆரிய () இந்தோ - ஜெர்மன் மொழிக் குடும்பம் அங்கீகரிக்கப்பட்டது. வேதமல்லாத, சமஸ்கிருதம் அல்லாத பண்பாடு அங்கீகரிக்கப்படவில்லை.


பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ். (1777-1819) இவர் சென்னை ராஜதானி கிழக்கிந்தியக் கம்பனி அரசின் சிறப்பான ஓர் அதிகாரி ஆவார். 1810இல் (மதராஸ்) சென்னை கலெக்டரானார். 1812இல் "புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரி" யை நிறுவினார்.கம்பனி அலுவலர்களுக்கு உள்ளூர் (தென்னிந்திய) மொழிகளில் பயிற்சி அளிப்பதற்காக இந்தக் கல்லூரி நிறுவப்பட்டது. |அத்துடன் அம்மொழிகளின் இலக்கிய இலக்கண ஆய்வுகளும் மேற்கொள்ளப் பட்டன. எல்லிஸ் தமிழ் சமஸ்கிருத மொழிகளில் புலமை பெற்றவர். திருக்குறள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அறத்துப்பாலின் 18 அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அலெக்ஸாண்டர் டங்கன் காம்பெல் அவர்களது "தெலுங்கு இலக்கணம்" என்றநூலுக்குஎல்லிஸ் எழுதிய முன்னுரையில் தென்னிந்திய மொழிகளின் "திராவிடச் சான்று" என்பதனை விளக்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய |தென்னிந்திய மொழிகள், சமஸ்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல என்றும், அவற்றை திராவிட மொழிக் குடும்பம் என வகைப்படுத்தலாம் என்றும் விளக்கியிருந்தார். தொன்மையான தமிழை முதன்மையாகக் கொண்ட திராவிட மொழிக்குடும்பம் என்ற கருத்தியலை முதன்முதலில் வெளியிட்டவர் எல்லிஸ் ஆவார். அதனால்தான் அவரை "தமிழ் மறுமலர்ச்சியின் முன்னோடி" என அயோத்திதாசர் பாராட்டினார்.


இராபர்ட் கால்டுவெல் (1814-1891) கிறிஸ்தவ மதபோதகரான இவர், 1838 இல் சமயப் பணிக்காக திருநெல்வேலி (இடையான்குடி) பகுதியை வந்தடைந்தார். சமயப்பணியுடன் கல்விப் பணி மற்றும் மொழி ஆராய்ச்சியையும் மேற்கொண்டார். அவரது புகழ்பெற்ற ஆய்வு நூலான "திராவிட அல்லது தென்னிந்திய குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்" 1856 இல் வெளியிடப்பட்டது. அதன் வாயிலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருத மொழி குடும்பத்தைச் சேராதவை, திராவிட மொழிக் குடும்பம் என்று வகைப்படுத்தக் கூடியவை என்பதை தகுந்த சான்றுகளுடன் நிறுவினார் . அவற்றில் தமிழ் மிகத் தொன்மையானது என்றும், மிகத் தொன்மையான கிறிஸ்துவ மறைநூற்களில் கூட தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார். 1816இல் எல்லிஸ் அவர்களால் முன்மொழியப்பட்ட "திராவிட மொழிக் குடும்பம்” என்கிற கருத்தியலை 1856இல் ஒப்பிலக்கணம் மூலம் உறுதிப்படுத்தியவர் கால்டுவெல் ஆவார். அவரது மனைவியார் எலிஸா மால்ட் அவர்களும் இப்பகுதியில் மகளிர் கல்விக்குப் பெருந் தொண்டாற்றியுள்ளார். கால்டுவெல் அவர்களின் ஆய்வுகள் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளின் தனித்துவத்தையும் தொன்மையையும் எடுத்துரைக்கும் விதமாக அமைத்தன.

1837 ஆம் ஆண்டு மற்றும் இதர ஆய்வாளர்களால் பிராமண மூல ஆவணங்கள் மற்றும் தென்னிந்திய மொழிகளின் மீதான ஆய்வுகள் (எல்ஸிஸ் 1816 மற்றும் கால்டுவெல் 1856) போன்றவைகள் இந்திய கலாச்சாரம் என்பது ஒரே மாதிரியானத் தன்மையைக் கொண்டது அல்ல என்றும், புத்த, திராவிட மரபுகள் கூட இந்தியாவில் இருந்தன என்பது நிரூபிக்கப்பட்டது. தென்னிந்தியாவில், குறிப்பாக, பன்மொழி கொண்ட சென்னை மாகாணத்தில், பிராமணரல்லாதோர் இடத்தில், திராவிட மொழிக்குழுக்கள் மற்றும் திராவிட பண்பாட்டுத் தொன்மை ஆகியவை, திராவிட அடையாள எழுச்சிக்கு இட்டு சென்றது.

(1) பிராமணர்கள், பிராமணரல்லாதோர் மீது தங்களது மேன்மையை கோருவது மற்றும் (2) பிராமணர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை ஏகபோகமாக்கியது ஆகிய இரண்டு திராவிட அடையாளத்தை பிராமணரல்லாதோர் அடையாளமாக மாற்றியமைத்தது. மகாராஷ்டிராவில் கூட மகாத்மா ஜோதிபா புலே இதே போன்று ஓர் பிராமணரல்லாதோர் இயக்கத்தைத் துவக்கினார் இவ்வாறு திராவிடம் என்பது தென்னிந்தியாவில் பிராமணரல்லாதோர் என்பதைக் குறிப்பதாயிற்று.

சென்னை மாகாண பிராமணரல்லாதோரின் பிரச்சனையை புதியதாக தேசியத் தலைவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்பதாகக் குறைபாடு இருந்தது. 1852 ஆம் ஆண்டு கஜீலு லட்சுமி நரசு செட்டி என்பவர் இதனை வெளிப்படுத்தி, ஆங்கிலேய இந்திய கழகத்திலிருந்து வெளியேறி, சென்னை வாழ் மக்கள் சங்கம் என்ற பெயரில் ஓர் அமைப்பை தொடங்கினார். சிப்பாய்க் கலகத்திற்கு பிந்தைய காலங்களில் பிராமணரல்லாத தலைவர்கள் அரசியல் சீர்திருத்தங்களைக் காட்டிலும் சமூக சீர்திருத்தத்தின் மீது கவனம் செலுத்தினார். 1909 ஆம் ஆண்டு மிண்டோ மார்லி சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சென்னை மாகாணத்தைச் சார்ந்த பிராமணரல்லாதோருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று எதிர்ப்பு காட்ட துவங்கினர்.

1913 ஆம் ஆண்டு ஆளுனரின் செயற்குழு உறுப்பினர், திரு. சர். அலெக்சாண்டர் ஜோர்டன் கார்டிவ் என்பவர் அளித்த புள்ளியியல் விவரமானது, மக்கள் தொகையில் மூன்று சதவீதம் மட்டும் அங்கம் வகிக்கும் பிராமணர்கள் அனைத்து வாய்ப்புகளையும் எடுத்துக் கொண்டார்கள் என்பதை நிரூபித்தார்.

Tags : Political Developments in Tamilnadu தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி.
11th Political Science : Chapter 13 : Political Developments in Tamilnadu : Emergence of Dravidian Movement Political Developments in Tamilnadu in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 14 : தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி : திராவிட இயக்கத்தின் தோற்றம் - தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 14 : தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி