முக்கிய நோக்கங்கள் - நீதிக் கட்சி | 11th Political Science : Chapter 13 : Political Developments in Tamilnadu

   Posted On :  04.10.2023 06:37 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 14 : தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி

நீதிக் கட்சி

அக்காலத்தில் இருந்த முதன்மையான அரசியல் கட்சியான இந்திய தேசிய காங்கிரசானது பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. எனவே பிராமணரல்லாத உறுப்பினர்களின் கோரிக்கைகளை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை.

நீதிக் கட்சி

அக்காலத்தில் இருந்த முதன்மையான அரசியல் கட்சியான இந்திய தேசிய காங்கிரசானது பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. எனவே பிராமணரல்லாத உறுப்பினர்களின் கோரிக்கைகளை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. எனவே சென்னை மாகாணத்தில் உள்ள பிராமணர் அல்லாத தலைவர்கள் பிராமணரல்லாதோர் அரசியல் அமைப்பு ஒன்றினை துவங்க நினைத்தனர். முதலாவது உலகப் போருக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் நிறுவனங்களில் பிரதிநிதியாகும் வாய்ப்பு போன்றவை இவர்களின் செயல்பாடுகளை ஊக்குவித்தன.


1916 ஆம் ஆண்டு டாக்டர். டி.எம். நாயர், சர் பிட்டி தியாகராயர் மற்றும் டாக்டர். சி. நடேசனார் போன்றோர்கள் பிராமணரல்லாதோரின் சமூக அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை முன்னேற்றுவதற்காக தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பை நிறுவினர். இவ்வாறு உருவான பின்னர் தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு (SILF) புகழ் பெற்ற நீதிக்கட்சியானது. "நீதிக்கட்சி" என்ற பெயர் ஆங்கில இதழான "நீதி" என்பதன் அடிப்படையில் பெயரிடப்பட்டது. இவர்களின் ஓயாத முயற்சியால் பிராமணரல்லாதோருக்கு மாகாண சட்டமன்ற தேர்தலில் இடஒதுக்கீடு பெற்றுத்தந்தனர்.


நீதிக் கட்சியின் முக்கிய நோக்கங்கள் 


. தென்னிந்தியாவின் அனைத்து பிராமணரல்லாதோரின் கல்வி, சமூக, பொருளாதார மற்றும் செல்வ மேம்பாட்டினை உருவாக்கி முன்னேற்றுதல்

. அரசமைப்பிலான அரசாங்கத்தைக் கொண்டு பிராமணரல்லாதோரின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுதல்

. அரசமைப்பிலான உண்மையான பிரதிநிதித்துவ அரசாங்கமாக ஆக்குதல் 

. பிராமணரல்லாதோரின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக பொதுக்கருத்தை உருவாக்குதல்.


1919 ஆம் ஆண்டு மாண்டேகுசெம்ஸ்போஃர்டு சீர்திருத்தமானது மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறையைக் கொண்டு வந்ததன் மூலம் சில துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அமைச்சருக்கு என ஒதுக்கப்பட்டது. இரட்டை ஆட்சியின் கீழ் 1920 ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஒத்துழையாமையின் ஒரு பகுதியாக தேர்தலை புறக்கணித்தது. ஆனால் பல்வேறு அடையாளங்களில் காங்கிரசைச் சேர்ந்த பலர் தேர்தலில் போட்டியிட்டனர்.

நீதிக் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று சென்னை மாகாணத்திற்கு . சுப்பராயலு முதலமைச்சரானார், அவரின் இறப்பிற்கு பிறகு பனகல் ராஜா 1921-ல் முதலமைச்சரானார்.

Tags : Political Developments in Tamilnadu முக்கிய நோக்கங்கள்.
11th Political Science : Chapter 13 : Political Developments in Tamilnadu : Justice Party Political Developments in Tamilnadu in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 14 : தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி : நீதிக் கட்சி - முக்கிய நோக்கங்கள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 14 : தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி