பருப்பொருளின் பண்புகள் - மீட்சி ஆற்றல் | 11th Physics : UNIT 7 : Properties of Matter

11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள்

மீட்சி ஆற்றல்

ஒரு பொருளை நீட்சியடையச் செய்தால் மீள்விசைக்கு (அகவிசை) எதிராக வேலை செய்யப்படுகிறது.

மீட்சி ஆற்றல் (Elastic energy) 


ஒரு பொருளை நீட்சியடையச் செய்தால் மீள்விசைக்கு (அகவிசை) எதிராக வேலை செய்யப்படுகிறது. செய்யப்பட்ட இந்த வேலை பொருளினுள் மீட்சி ஆற்றலாக சேமிக்கப்படுகிறது.

நீட்டப்படாத நிலையில் L நீளமும் A குறுக்குவெட்டுப் பரப்பும் கொண்ட ஒரு கம்பியைக் கருதுக. ஒரு விசை l என்ற நீட்சியை உருவாக்குவதாகக் கொள்க. கம்பியின் மீட்சி எல்லை தாண்டப்படவில்லை எனவும் ஆற்றலில் இழப்பு இல்லை எனவும் கொள்க. எனவே F என்ற விசையினால் செய்யப்பட்ட வேலை கம்பி பெற்றுள்ள ஆற்றலுக்கு சமமாகும். 

கம்பியானது dl அளவு நீட்சியடையும்போது செய்யப்படும் வேலை

dW = F dl 

O முதல் l வரை கம்பி நீட்சியடைய செய்யப்பட்ட வேலை


சமன்பாடு (7.12) ஐ சமன்பாடு (7.11) இல் பிரதியிட


தொகையிடலில் l என்பது வெற்று மாறி (dummy variable) என்பதால் நாம் l என்பதை (எல்லைகளில் அல்ல) l’  என மாற்ற


ஓரலகு பருமனில் உள்ள ஆற்றலானது ஆற்றல் அடர்த்தி எனப்படும். இது பின்வருமாறு அளிக்கப்படுகிறது



எடுத்துக்காட்டு 7.5

2m நீளமும் 10-6m2 குறுக்கு வெட்டுப் பரப்பும் கொண்ட ஒரு கம்பியில் 980 N பளு தொங்கவிடப்பட்டுள்ளது . (i) கம்பியில் உருவான தகைவு (ii) திரிபு மற்றும் (ii) சேமிக்கப்பட்ட ஆற்றல் ஆகியவற்றைக் கணக்கிடுக. Y = 12 × 1010N m−2 எனத்தரப்பட்டுள்ளது.

தீர்வு



Tags : Properties of Matter பருப்பொருளின் பண்புகள்.
11th Physics : UNIT 7 : Properties of Matter : Elastic energy Properties of Matter in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள் : மீட்சி ஆற்றல் - பருப்பொருளின் பண்புகள் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள்