பருப்பொருளின் பண்புகள் - பாய்ஸன் விகிதம் | 11th Physics : UNIT 7 : Properties of Matter
பாய்ஸன் விகிதம்
நாம் ஒரு கம்பியை நீட்சியடையச் செய்வதாகக் கருதினால் அதன் நீளம் அதிகரிக்கிறது (நீட்சி), ஆனால் விட்டம் குறைகிறது (குறுக்கம்) அதுபோன்றே நாம் ஒரு இரப்பர் பட்டையை நீட்சியடையச் செய்தால் (நீட்சி) அது குறிப்பிடத்தக்க அளவு மெல்லியதாகிறது (குறுக்கம்). அதாவது பொருளின் ஒரு திசையிலான சீர்குலைவு மற்றொரு திசையில் சீர்குலைவை உருவாக்குகிறது. இதனை அளவிட பிரஞ்சு இயற்பியலாளர் எஸ்.டி.பாய் சொய் என்பவர் பாய்சொய் விகிதம் என அழைக்கப்படும் ஒரு விகிதத்தை முன்மொழிந்தார்.
ஒப்புமைக் குறுக்கத்திற்கும் (பக்கவாட்டுத்திரிபு) ஒப்புமை விரிவாக்கத்திற்கும் (நீளவாட்டுத்திரிபு) இடையே உள்ள விகிதம்" என அது வரையறுக்கப்படுகிறது. அதன் குறியீடு µ ஆகும்.
L நீளமும் D விட்டமும் கொண்ட ஒரு கம்பி ஒன்றைக கருதுவோம். செலுத்தப்பட்ட விசையினால் கம்பி நீட்சியடைந்தால், நீள அதிகரிப்பு l எனவும் விட்டத்தில் குறைவு d எனவும் கொண்டால்,
எதிர்க்குறியானது நீளவாட்டில் நீட்சியும், பக்கவாட்டில் குறுக்கமும் உள்ளதைக் குறிக்கிறது. மேலும் இது சம பரிமாணங்களைக் கொண்டுள்ள அளவுகளின் விகிதமாகும். எனவே பாய்சொய் விகிதம் அலகற்றது மற்றும் பரிமாணமற்றது (பரிமாணமற்ற எண்) ஆகும். சில பொருள்களின் பாய் சொய் விகித மதிப்புகள் அட்டவணை 7.2 இல் கொடுக்கப்பட்டுள்ளன.