ஸ்டோக் விதி மற்றும் அதன் பயன்பாடுகள்
பாகுநிலை ஊடகத்தின் வழியே ஒரு பொருள் வீழ்ந்தால் அதனுடன் உடனடியாக தொடுதலில் உள்ள பாய்ம ஏட்டை அது இழுக்கும். இது திரவத்தின் வெவ்வேறு ஏடுகளுக்கு இடையே சார்பு இயக்கத்தை உருவாக்குகிறது. ஸ்டோக் வெவ்வேறு பாய்மங்களில் சிறிய கோளப்பொருள்களின் இயக்கத்திற்கான பல சோதனைகள் செய்து, r ஆரமுள்ள கோளப்பொருளின் மீது செயல்படும் பாகியல் விசை F ஆனது
i) கோளத்தின் ஆரம் (r)
ii) கோளத்தின் திசைவேகம் (v) மற்றும்
iii) திரவத்தின் பாகியல் எண் η
ஆகியவற்றைச் சார்ந்தது என்ற முடிவைப் பெற்றார். எனவே F ∝ ηx r yvz ⇒ F =kηxr y vz இங்கு k என்பது ஒரு பரிமாணமற்ற மாறிலி
பரிமாணங்களைப் பயன்படுத்தி, மேற்கண்ட சமன்பாட்டை இவ்வாறு எழுதலாம்.
[MLT – 2] = k [ML−1T – 1] x ×[ L]y × [LT−1] z
தீர்வு காண, x = 1, y = 1 மற்றும் z = 1 எனவே F=kη rv
சோதனைமூலம் k = 6π என ஸ்டோக் கண்டறிந்தார்.
இந்த தொடர்பு ஸ்டோக் விதி எனப்படும்.
ஸ்டோக் விதியின் செயல்முறைப் பயன்பாடுகள் :
மழைத்துளிகள் அளவில் சிறியதாகவும், அதன் முற்றுத்திசைவேகங்கள் குறைவாகவும் உள்ளதால் அவை மேக வடிவில் காற்றில் மிதக்கின்றன. அவை அளவில் பெரிதாகும் போது அவற்றின் முற்றுத்திசைவேகங்கள் அதிகரித்து மழையாக கீழே விழுகின்றன.
இந்த விதி கீழ்க்காண்பவற்றை விளக்குகிறது :
அ) மேகங்களின் மிதத்தல்
ஆ) சிறிய மழைத்துளிகளைவிட பெரிய மழைத்துளிகள் நம்மை அதிகமாக தாக்குகின்றன
இ) பாராசூட் உதவியுடன் கீழிறங்கும் ஒருவர் மாறா முற்றுத்திசைவேகத்தை பெறுகின்றார்.