பருப்பொருளின் பண்புகள் - மீட்சி ஆற்றல் | 11th Physics : UNIT 7 : Properties of Matter
மீட்சி ஆற்றல் (Elastic energy)
ஒரு பொருளை நீட்சியடையச் செய்தால் மீள்விசைக்கு (அகவிசை) எதிராக வேலை செய்யப்படுகிறது. செய்யப்பட்ட இந்த வேலை பொருளினுள் மீட்சி ஆற்றலாக சேமிக்கப்படுகிறது.
நீட்டப்படாத நிலையில் L நீளமும் A குறுக்குவெட்டுப் பரப்பும் கொண்ட ஒரு கம்பியைக் கருதுக. ஒரு விசை l என்ற நீட்சியை உருவாக்குவதாகக் கொள்க. கம்பியின் மீட்சி எல்லை தாண்டப்படவில்லை எனவும் ஆற்றலில் இழப்பு இல்லை எனவும் கொள்க. எனவே F என்ற விசையினால் செய்யப்பட்ட வேலை கம்பி பெற்றுள்ள ஆற்றலுக்கு சமமாகும்.
கம்பியானது dl அளவு நீட்சியடையும்போது செய்யப்படும் வேலை
dW = F dl
O முதல் l வரை கம்பி நீட்சியடைய செய்யப்பட்ட வேலை
சமன்பாடு (7.12) ஐ சமன்பாடு (7.11) இல் பிரதியிட
தொகையிடலில் l என்பது வெற்று மாறி (dummy variable) என்பதால் நாம் l என்பதை (எல்லைகளில் அல்ல) l’ என மாற்ற
ஓரலகு பருமனில் உள்ள ஆற்றலானது ஆற்றல் அடர்த்தி எனப்படும். இது பின்வருமாறு அளிக்கப்படுகிறது
எடுத்துக்காட்டு 7.5
2m நீளமும் 10-6m2 குறுக்கு வெட்டுப் பரப்பும் கொண்ட ஒரு கம்பியில் 980 N பளு தொங்கவிடப்பட்டுள்ளது . (i) கம்பியில் உருவான தகைவு (ii) திரிபு மற்றும் (ii) சேமிக்கப்பட்ட ஆற்றல் ஆகியவற்றைக் கணக்கிடுக. Y = 12 × 1010N m−2 எனத்தரப்பட்டுள்ளது.
தீர்வு