கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | அளவைகள் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.1 | 6th Maths : Term 2 Unit 2 : Measurements

   Posted On :  22.11.2023 12:36 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள்

பயிற்சி 2.1

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள் : பயிற்சி 2.1 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.1


1. கோடிட்ட இடங்களை நிரப்புக

(i) 250 மி.லி + ½ லி = __________லி 

விடை : ¾ லி

 (ii) 150 கி.கி 200 கி + 55 கி.கி 750 கி =____________கி.கி__________கி

விடை : 205 கி.கி 950கி

(iii) 20 லி – 1 லி 500 மி.லி =__________லி__________மி.லி

விடை : 18லி 500 மி.லி.

(iv) 450 மி.லி × 5 =__________லி_________மி.லி

விடை : 2 லி 250 மி.லி

(v) 50 கி.கி  ÷100 கி  =________

விடை : 500


2. சரியா? தவறா?

(i) புகழேந்தி 100கி வேர்க்கடலை சாப்பிட்டான். அது 0.1 கி.கிக்குச் சமம். [விடை : சரி]

(ii) மீனா 250 மி.லி மோர் வாங்கினாள். அது 2.50 லிக்குச் சமம். [விடை : தவறு]

(iii) கார்குழலியின் பையின் எடை 1 கி.கி 250 கி, பூங்கொடியின் பையின் எடை 2 கி.கி 750 கி. அந்தப் பைகளின் மொத்த எடை 4 கி.கி. [விடை : சரி]

(iv) வான்மதி ஒவ்வொன்றும் 500 கிராம் எடையுள்ள 4 நூல்களை வாங்கினாள். அந்த 4 நூல்களின் மொத்த எடை 2 கி.கி [விடை : சரி]

(v) காயத்ரி 1 கி.கி எடையுள்ள பிறந்தநாள் கேக்கை வாங்கினாள். அந்தக் கேக்கில் 450 கி தன் நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்கிறாள் எனில் மீதம் உள்ள கேக்கின் எடை 650 கி. [விடை : தவறு]


3. குறிப்பிடப்பட்ட அலகிற்கு மாற்றுக

(i) 10 லி 5 மி.லிஇலிருந்து மி.லி 

(ii) 4 கி.மீ 300 மீஇலிருந்து மீ 

(iii) 300 மி.கிஇலிருந்து கி 

விடை

i) 10 லி 5 மி.லி

= 10000 மி.லி. + 5 மி.லி

= (10000 + 5) மி.லி.

= 10005 மி.லி.

ii) 4கி.மீ. மற்றும் 300 மீ

= 4 × 1000மீ + 300மீ 

= (4000 + 300) மீ

= 4300மீ

iii) 300 மி.கி. = 300/1000கி = 0.3கி.


4. மேலின அலகாக மாற்றுக:

(i) 13000 மி.மீ (கி.மீ, மீ, செ.மீ

(ii) 8257 மி.லி (கி.லி, லி)

விடை

(i) 13000 மி.மீ (கி.மீ, மீ, செ.மீ

1 கி.மீ. = 1000 மீ.

1 மீ = 100 செ.மீ.

1 செ.மீ. = 10 மி.மீ.

100 செ.மீ. = 1000 மி.மீ.

10 மி.மீ. = 1 செ.மீ

1000 மி.மீ.= 100 செ.மீ.

1 மீ = 1000 மி.மீ.

1000 மீ = 1000000 மி.மீ.

13000 மி.மீ.

= (13000 / 10) செ.மீ.

= 1300 செ.மீ.

= (13000/1000) மீ = 13000 மி.மீ. = 13 மீ

= (13000/1000000) கி.மீ. = 13000 மி.மீ

= 0.013 கி.மீ.

 (ii) 8257 மி.லி (கி.லி, லி)

விடை

1லி = 1000 மி.லி.

1000 லி  = 1 கி.லி

1கி.லி. = 1000000 மி.லி.

8257 மி.லி.

= 8257/1000 லி

= 8.257 லி

= 8257 மி.லி

= [ 8257 / 1000000 ] கி.லி. = 0.008257 கி.லி


5. கீழின அலகாக மாற்றுக:

(i) 15 கி.மீ (மீ, செ.மீ, மி.மீ

(ii) 12 கி.கி (கி, மி.கி)

விடை :

(i) 15 கி.மீ (மீ, செ.மீ, மி.மீ

1கி.மீ. = 1000 மீ

1 மீ = 100 செ.மீ.

1000 மீ. = 100000 செ.மீ.

15 கி.மீ. = 15 × 1000 மீ = 15000மீ 

15 கி.மீ. = 15 × 100000 செ.மீ.

= 1500000 செ.மீ

15 கி.மீ = 15 × 1000000 மி.மீ.

= 15000000 மி.மீ

ii) 12 கி.கி. (கி. மி.கி)

விடை

1000 கி = 1 கி.கி

1கி = 1000 மி.கி.

1000 கி  = 1000000 மி.கி

12 கி.கி. = 12 × 1000 கி

= 12000 கி 

12 கி.கி. = 12 × 1000000 மி.கி.

= 12000000 மி. கி.


6. கீழ்க்கண்டவற்றை ஒப்பிட்டு > () < () = என்ற குறியீடு இட்டு நிரப்புக.

(i) 800 கி + 150 கி _____ 1 கி.கி

(ii) 600 மி.லி + 400 மி.லி _____ 1லி

(iii) 6 மீ 25 செ.மீ _____ 600 செ.மீ + 25 செ.மீ

(iv) 88 செ.மீ  _____ 8 மீசெ.மீ    

(v) 55 கி  _____ 550 மி.கி

விடை :

 i) < ii) = iii) = iv) < v) >


7. கீதா 2 லி 250 மி.லி கொள்ளளவு கொண்ட தண்ணீர்க் குடுவையைக் கொண்டு வந்தாள். அதிலிருந்து அவளுடைய நண்பர்கள் 300 மி.லி தண்ணீர் குடித்து விட்டனர். குடுவையில் உள்ள மீதித் தண்ணீரின் அளவு எவ்வளவு?

விடை

தண்ணீரின் மொத்த கொள்ளளவு

= 2 லி 250 மி.லி

= ((2 × 1000) + 250) மி.லி

= 2000 + 250 மி.லி.

= 2250 மி.லி

குடித்த தண்ணீரின் அளவு = 300 மி.லி

குடுவையில் உள்ள மீதித் தண்ணீ ரின் அளவு

= (2250 – 300) மி.லி

= 1950 மி.லி

= 1 லி 950 மி.லி.


8. தேன்மொழியின் தற்போதைய உயரம் 1.25 மீ. ஒவ்வோர் ஆண்டும் அவள் 5 செ.மீ வளருகிறாள் எனில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு அவளின் உயரம் என்ன?

விடை

தேன்மொழியின் தற்போதைய உயரம் = 1.25மீ 

ஒவ்வோர் ஆண்டும் வளர்ச்சி = 5 செ.மீ

முதல் வருட மொத்த வளர்ச்சி = 1.25மீ + 5செ.மீ

6 ஆண்டுகளுக்குப் பின் அவள் உயரம்

= 1.25 மீ + (5செ.மீ. × 6) 

= 1.25 மீ + 30 செ.மீ

= 125 செ.மீ. + 30 செ.மீ

= 155 செ.மீ.


9. பிரியா 22 ½ கி.கி எடையுள்ள வெங்காயம் வாங்கினாள். கண்ணன் 18 ¾ கி.கி எடையுள்ள வெங்காயம் வாங்கினான். மாலன் 9 கி.கி 250 கி எடையுள்ள வெங்காயம் வாங்கினான். இவர்கள் வாங்கிய வெங்காயத்தின் மொத்த எடை எவ்வளவு?

விடை:

வாங்கிய வெங்காயத்தின் மொத்த எடை


= 22கி.கி. 500கி  + 18கி.கி. 750கி  + 9கி.கி. 250கி 

= 49 கி.கி 1500 கி 

= 50 கி.கி 500 கி


10. மாறன் ஒவ்வொரு நாளும் 1.5 கி.மீ தொலைவு நடந்து பள்ளியை அடைகிறார். அதே நேரம் மகிழன் 1400 மீ தொலைவு நடந்து பள்ளியை அடைகிறார். இவர்களுள் யார் கூடுதல் தொலைவு நடக்கிறார்? எவ்வளவு தொலைவு கூடுதலாக நடக்கிறார்?

விடை

மாறன் கடந்த தொலைவு = 1.5 கி.மீ.

= 1500 மீ 

மகிழன் கடந்த தொலைவு = 1400 மீ 

கூடுதல் தொலைவு = 1500 மீ – 1400 மீ

= 100 மீ 

மாறன் 100மீ கூடுதலாக நடக்கிறார்.


11. இளஞ்செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒரு நாள் முகாமில், ஒரு மாணவருக்கு 150 கி அரிசி மற்றும் 15 மி.லி எண்ணெயும் தேவைப்படுகின்றன. அந்த முகாமில் 40 மாணவர்கள் பங்கேற்றனர் எனில், அவர்களுக்கு எத்தனை கி.கி அரிசியும், எத்தனை லிட்டர் எண்ணெயும் தேவைப்படும்?

விடை :

ஒரு மாணவனுக்குத்தேவையான அரிசி = 150கி 

40 மாணவர்களுக்குத் தேவையான அரிசி

= 40 × 150 கி = 6000 கி

= 6 கி.கி

ஒரு மாணவனுக்குத் தேவையான எண்ணெய்

= 15 மி.லி

40 மாணவர்களுக்குத் தேவையான எண்ணெய்

= 40 × 15 மி.லி. = 600 மி.லி.


12. ஒரு பள்ளியில், 200 லி எலுமிச்சைப் பழச்சாறு தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் 250 மி.லி பழச்சாறு கொடுத்தால் எத்தனை மாணவர்களுக்கு அது போதுமானதாக இருக்கும்?

விடை

தயாரிக்கப்பட்ட எலுமிச்சைப் பழச்சாற்றின் அளவு = 200 லி

= 200 × 1000 மி.லி

= 200000 மி.லி.

ஒவ்வொரு மாணவருக்கும் கொடுக்கப்பட்ட பழச்சாறின் அளவு = 250 மி.லி

போதுமானதாக இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை = 200000/250 = 800


13. 2 லி கொள்ளளவுள்ள சாடியில் தண்ணீர் நிரப்பக் கீழ்க்கண்ட கொள்ளளவுகளில் உள்ள குவளைகளில் எத்தனை முறை தண்ணீர் ஊற்ற வேண்டும் ?

(i) 100 மி.லி

(ii) 50 மி.லி

(iii) 500 மி.லி

(iv) 1 லி

(v) 250 மி.லி

விடை : i) 20 ii) 40 iii) 4 iv) 2 v) 8

 


கொள்குறி வகை வினாக்கள்


14. 9 மீ 4 செ.மீக்குச் சமமானது

() 94 செ. மீ

() 904 செ. மீ

() 9.4 செ. மீ

() 0.94 செ. மீ

[விடை : () 904 செ. மீ]


15. 1006 கிராமுக்குச் சமமானது.

() 1 கி.கி 6 கி

() 10 கி.கி 6 கி

() 100 கி.கி 6 கி 

() 1 கி.கி 600 கி

[விடை : () 1 கி.கி 6 கி]


16. ஒரு தோட்டத்தில் ஒவ்வொரு நாளும் 150 லி தண்ணீர் தெளிக்கப்படுகிறது எனில் ஒரு வாரத்தில் தெளிக்கப்பட்ட தண்ணீரின் அளவு

() 700 லி

() 1000 லி

() 950 லி

() 1050 லி

[விடை : () 1050 லி]


17. எது பெரியது? 0.007 கி, 70 மி.கி, 0.07 செ.கி.

() 0.07 செ.கி

() 0.007 கி

() 70 மி.கி

() அனைத்தும் சமம்

[விடை : () 70 மி.கி]


18. 7 கி.மீ – 4200 மீக்கு சமமானது .

() 3 கி.மீ 800 மீ

() 2 கி.மீ 800 மீ 

() 3 கி.மீ 200 மீ 

() 2 கி.மீ 200 மீ

[விடை : () 2 கி.மீ 800 மீ]

Tags : Questions with Answers, Solution | Measurements | Term 2 Chapter 2 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | அளவைகள் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 2 Unit 2 : Measurements : Exercise 2.1 Questions with Answers, Solution | Measurements | Term 2 Chapter 2 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள் : பயிற்சி 2.1 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | அளவைகள் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள்