அளவைகள் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு - மீள்பார்வை | 6th Maths : Term 2 Unit 2 : Measurements
மீள்பார்வை
நீளத்திற்கு மீட்டரும், எடைக்குக் கிராமும், கொள்ளளவுக்கு லிட்டரும் உலக அளவில் அடிப்படை அலகுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மெட்ரிக் அலகுகள் ஆகும்.
நாம் வெவ்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறு அளவுகளுக்கு ஏற்பப் பல்வேறு மெட்ரிக் அலகுமுறையைப் பயன்படுத்துகிறோம்.
இவற்றை முயல்க
1. கீழ்க்காணும் அட்டவணையை முழுமைப் படுத்துக
மெட்ரிக் அளவைகள் அட்டவணை (அலகின் வரிசை முறை)
2. கீழ்க்கண்டவற்றை எந்த அலகில் அளக்கலாம் எனத் தீர்மானிக்க.
i. உன்னுடைய நடு விரலின் நீளம். சென்டிமீட்டர் (செ.மீ)
ii. ஒரு யானையின் எடை. கிலோகிராம் (கி.கி)
iii. ஒரு மோதிரத்தின் எடை. கிராம் (கி)
iv. ஒரு மாத்திரையின் எடை. மில்லிகிராம் (மி.கி)
v. ஒரு பூட்டூசியின் (safety pin) நீளம். மில்லிகிராம் (மி.கி)
vi. ஒரு கட்டடத்தின் உயரம். மீட்டர் (மீ)
vii. தமிழகக் கடற்கரையின் நீளம் கிலோமீட்டர் (கி.மீ)
vii. ஒரு கோப்பையில் உள்ள குளம்பியின் (Coffee) அளவு. மில்லிலிட்டர் (மி.லி)
ix. தண்ணீர்த் தொட்டியின் கொள்ளளவு. லிட்டர் (லி)