Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | வெவ்வேறு அலகுகளையுடைய அளவுகளின் அடிப்படைச் செயல்கள்

அளவைகள் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு - வெவ்வேறு அலகுகளையுடைய அளவுகளின் அடிப்படைச் செயல்கள் | 6th Maths : Term 2 Unit 2 : Measurements

   Posted On :  22.11.2023 12:28 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள்

வெவ்வேறு அலகுகளையுடைய அளவுகளின் அடிப்படைச் செயல்கள்

தசம எண்களின் அடிப்படைச் செயல்களைச் செய்வது போன்றே, ஒரே மெட்ரிக் அலகுகளில் இடம்பெறும் அடிப்படைச் செயல்களையும் செய்யலாம். குறிப்பாக, ஒரே அலகில் உள்ள அளவுகளைக் கூட்டவோ / கழிக்கவோ முடியும். ஆனால் வெவ்வேறு அலகுகளில் உள்ள அளவுகளை ஒரே அலகாக மாற்றிய பிறகே கூட்டவோ / கழிக்கவோ முடியும்.

வெவ்வேறு அலகுகளையுடைய அளவுகளின் அடிப்படைச் செயல்கள் 

தசம எண்களின் அடிப்படைச் செயல்களைச் செய்வது போன்றே, ஒரே மெட்ரிக் அலகுகளில் இடம்பெறும் அடிப்படைச் செயல்களையும் செய்யலாம். குறிப்பாக, ஒரே அலகில் உள்ள அளவுகளைக் கூட்டவோ / கழிக்கவோ முடியும். ஆனால் வெவ்வேறு அலகுகளில் உள்ள அளவுகளை ஒரே அலகாக மாற்றிய பிறகே கூட்டவோ / கழிக்கவோ முடியும்.


எடுத்துக்காட்டு 8: சரிதா தனக்கு 6 மீ 40 செ.மீ துணியும், தன்னுடைய தங்கைக்கு 3 மீ 80 செ.மீ துணியும் வாங்கினாள். அவள் வாங்கிய துணியின் மொத்த நீளம் என்ன ?

தீர்வு:



எடுத்துக்காட்டு 9: பிரதீப் சந்தையைச் சென்றடைய 4 கி.மீ 350 மீ பயணம் செய்கிறார். அதே சந்தைக்கு, கந்தன் 6 கி.மீ 200 மீ பயணம் செய்கிறார், எனில் கந்தன், பிரதீப்பை விட எவ்வளவு தொலைவு கூடுதலாகப் பயணம் செய்கிறார்?

தீர்வு:


கந்தன் பிரதீப்பை விட 1 கி.மீ 850 மீ அதிகமாகப் பயணம் செய்கிறார்.


எடுத்துக்காட்டு 10: ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 100 கிராம் காய்கறிகள் தேவைப்படுகிறது. 90 குழந்தைகள் உள்ள பள்ளிக்கு எத்தனை கிலோகிராம் காய்கறிகள் தேவைப்படும்?

தீர்வு:

பள்ளியில் உள்ள மொத்தக் குழந்தைகள் = 90

ஒவ்வொரு குழந்தைக்கும் தேவைப்படும் காய்கறிகள் = 100 கிராம்

ஒரு நாளைக்கு 90 குழந்தைகளுக்கு தேவையான மொத்தக் காய்கறிகளின் அளவு = 90 × 100 கிராம்

 = 9000 கிராம் = 9 கி.கி.


எடுத்துக்காட்டு 11: ஒரு மூட்டையில் 81 கி.கி சர்க்கரை உள்ளது. கடைக்காரர் இதனை 750 கி எடையில் சிறிய பைகளில் நிரப்புகிறார் எனில், 81 கிலோ கிராம் சர்க்கரையை எத்தனை சிறிய பைகளில் நிரப்பலாம்?

தீர்வு:

ஒரு மூட்டையில் உள்ள சர்க்கரையின் அளவு = 81 கி.கி.

சிறிய பைகளில் நிரப்பப்பட்ட சர்க்கரையின் அளவு = 750 கி.

தேவைப்படும் சிறிய பைகளின் எண்ணிக்கை = 81 கி.கி ÷ 750 கி



= (81 × 1000) கி ÷ 750 கி

= 81000 கி ÷ 750 கி

= 108


சிந்திக்க

1. ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ஒரு தென்னை மரத்திற்கு 5 கி.கி தொழு உரம் தேவைப்படுகிறது. இதே போன்று 50 தென்னை மரங்களுக்கு 1 1/2 ஆண்டுகளுக்குத் தேவைப்படும் தொழு உரத்தின் அளவைக் காண்க.

1 ½ ஆண்டு : 3 முறை 6 மாதங்கள்

50 தென்னை மரங்களுக்கு 1 1/2 ஆண்டுகளுக்குத் தேவைப்படும் தொழு உரத்தின் அளவு = 3 × 50 × 5 கி.கி = 450 கி.கி

2. சரியா? தவறா? எனக் கண்டறிந்து காரணம் கூறுக.

4 மீ + 3 செ.மீ = 7 மீ தவறு. 3 செமீ 3 மீட்டருக்கு சமம் இல்லை

3. கீழ்க்கண்டவற்றைக் கூட்ட முடியுமா?

) 6 லி  + 7 கி.கி   முடியாது

) 3 மீ + 5 லி  முடியாது

) 400 மி.லி + 300 கி முடியாது

Tags : Measurements | Term 2 Chapter 2 | 6th Maths அளவைகள் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 2 Unit 2 : Measurements : Fundamental Operations on Quantities with Different Units Measurements | Term 2 Chapter 2 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள் : வெவ்வேறு அலகுகளையுடைய அளவுகளின் அடிப்படைச் செயல்கள் - அளவைகள் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள்