கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | அளவைகள் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.3 | 6th Maths : Term 2 Unit 2 : Measurements

   Posted On :  22.11.2023 02:36 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள்

பயிற்சி 2.3

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள் : பயிற்சி 2.3 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.3


பல்வகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள்


1. 7 மீ 25 செ.மீ மற்றும் 8 மீ 13 செ.மீ நீளமுள்ள இரண்டு குழாய்கள் இணைக்கப்பட்டு அதிலிருந்து 60 செ.மீ நீளமுள்ள சிறிய துண்டு வெட்டி எடுக்கப்படுகிறது எனில் மீதியுள்ள குழாயின் நீளம் எவ்வளவு?

விடை :


வெட்டி எடுக்கப்பட்ட நீளம் = 60 செ.மீ

மீதமுள்ள நீளம் = 14 மீ 78 செ.மீ.


2. சரவணன் என்பவர் 5 கி.மீ தொலைவுள்ள சாலையின் ஒரு புறத்தில் 2 மீ 50 செ.மீ இடைவெளியில் மரக்கன்றுகளை நடுகிறார். அவரிடம் 2560 மரக்கன்றுகள் இருந்தால் எத்தனை மரக் கன்றுகளை நட்டிருப்பார்? மீதமுள்ள மரக்கன்றுகள் எத்தனை?

விடை :

இரண்டு மரக்கன்றுகளுக்கு இடையே உள்ள இடைவெளி = 2 மீ 50 செ.மீ.

= 250 செ.மீ

சாலையின் மொத்த நீளம் = 5000 மீ

= 500000 செ.மீ

நடப்பட்ட மரக்கன்றுகள் = 500000 / 250

= 2000 மரக்கன்றுகள் 

மீதமுள்ள மரக்கன்றுகள் = 2560 – 2000

= 560


3. மொத்த அளவைக் குறிக்கும் வகையில் தேவையான வட்டங்களில் இடுக.



4. பிப்ரவரி 2020 இக்கான மாத அட்டவணையை உருவாக்குக (குறிப்பு : 2020ஆம் ஆண்டு சனவரி முதல் நாள் புதன் கிழமை)

பிப்ரவரி 2020 லீப் ஆண்டு ஆகும்.



5. கீழ்க்கண்ட செயல்களை 1 நிமிடத்திற்கு உற்று நோக்கித் தகவல்களைச் சேகரிக்க.

i. மூச்சுகளின் எண்ணிக்கை

ii. இதயத் துடிப்புகளின் எண்ணிக்கை

iii. கண்சிமிட்டும் எண்ணிக்கை

iv. நடக்கும் தொலைவு

v. ஓடும் தொலைவு

vi. தோப்புக்கரணங்களின் எண்ணிக்கை

vii. கைதட்டுகளின் எண்ணிக்கை

viii. எழுதும் வரிகளின் எண்ணிக்கை

ix. படிக்கும் வரிகளின் எண்ணிக்கை

x. கூறும் தமிழ் வினைச் சொற்களின் எண்ணிக்கை



மேற்சிந்தனைக் கணக்குகள்


6. ஓர் அணில் தானியங்கள் உள்ள இடத்தை விரைவாக அடைய விரும்புகிறது. அது செல்ல வேண்டிய குறைந்த தொலைவுள்ள பாதையைக் கண்டுபிடிக்க உதவுங்கள். (அளவுகோலைப் பயன்படுத்திக் கோட்டுத் துண்டுகளை அளக்கவும்)


விடை

அணில் செல்ல வேண்டிய குறைந்த தொலைவுள்ள பாதை AGFKE வழி


7. ஓர் அறையின் கதவு 1 மீ அகலம் மற்றும் 2 மீ 50 செ.மீ உயரம் உடையது. 2 மீ மற்றும் 20 செ.மீ நீளம் மற்றும் 90 செ.மீ அகலம் உள்ள கட்டிலை அறைக்குள் எடுத்துச் செல்ல முடியுமா ?

விடை :

கதவு :

(அகலம்) = 1 மீ = 100 செ.மீ 

உயரம் (நீளம்) = 2 மீ 50 செ.மீ

= 250 செ.மீ 

கதவின் பரப்பளவு = 1 × b .அலகுகள்

= 250 × 100 செ.மீ2

= 25000 செ.மீ2 

கட்டில்

நீளம் = 2 மீ 20 செ.மீ

= 220 செ.மீ 

அகலம் = 90 செ.மீ 

கட்டிலின் பரப்பளவு = 1 × b .அலகுகள் 

= 220 × 90 செ.மீ2  

= 19800 செ.மீ2

எனவே, கட்டிலை அறைக்குள் எடுத்துச் செல்ல முடியும்.


8. ஓர் அஞ்சல் அலுவலகம் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5.45 மணி வரை இயங்குகிறது. மதியம் 1 மணி நேரம் உணவு இடைவேளை ஆகும். அஞ்சல் அலுவலகம் வாரத்தில் 6 நாட்கள் இயங்கினால், ஒரு வாரத்தின் மொத்த வேலை நேரத்தைக் கணக்கிடுக.

விடை

அஞ்சலகம் ஒரு நாளில் இயங்கக்கூடிய நேரம்

= 6 மணி 45 நிமிடங்கள் 

= (6×60 நிமிடம்) + 45 நிமிடம்

= (360 + 45) நிமிடம் = 405 நிமிடம் 

ஒரு வாரத்தின் மொத்த வேலை நேரம்

= 6 × 405 நிமிடங்கள் 

= 2430 நிமிடங்கள் 

= 2430/60 மணி

= 810/20 மணி

= 40(1/2) மணி 

= 40 மணி 30 நிமிடங்கள்


9. சீதா(பூங்கோதை) முற்பகல் 5.20 மணிக்குத் துயில் எழுந்து 35 நிமிடங்கள் தன்னைத் தயார் செய்து கொண்டு, 15 நிமிடத்தில் தொடர் வண்டி நிலையத்தை அடைந்தாள். தொடர் வண்டி சரியாக முற்பகல் 6 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது எனில் சீதா(பூங்கோதை) அந்தத் தொடர் வண்டியில் பயணம் செய்திருப்பாரா?

விடை :

சீதா துயில் எழுந்த நேரம் = மு. 5.20 

தன்னைத் தயார் செய்து கொள்ள எடுத்துக் கொண்ட நேரம் = 35 நிமிடங்கள் 

தொடர் வண்டி நிலையத்தை அடைய எடுத்துக் கொண்ட நேரம் = 15 நிமிடங்கள் 

தொடர் வண்டி நிலையத்தை அடைந்த நேரம் = 5.20 மு. + 50 நிமிடங்க ள்

= 6.10 மு. 

ஆனால் தொடர் வண்டி சரியாக மு. 6.00 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது

எனவே, சீதா அந்த தொடர் வண்டியில் பயணம் செய்யமாட்டாள்.


10. முதல் நாள் 6 மணி நேரத்திற்கு ஒரு முறையும், இரண்டு மற்றும் மூன்றாம் நாளில் 8 மணி நேரத்திற்கு ஒரு முறையும் மருந்து எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர் வைரவனுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். அவர் முதல் நாள் முற்பகல் 9.30 மணிக்கு முதல் வேளைக்கான மாத்திரை எடுத்துக் கொண்டால், அவர் எடுத்துக் கொள்ளும் மாத்திரைக்கான கால அட்டவணையை தொடர் வண்டி நேர முறையில் தயார் செய்க.

விடை :


மு. 10 மணி முதல் பி. 5.45 மணி வரை உள்ள கால இடைவெளி 7 மணி 45 நிமிடங்கள் உணவு இடைவெளி = 1மணி நேரம்


Tags : Questions with Answers, Solution | Measurements | Term 2 Chapter 2 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | அளவைகள் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 2 Unit 2 : Measurements : Exercise 2.3 Questions with Answers, Solution | Measurements | Term 2 Chapter 2 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள் : பயிற்சி 2.3 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | அளவைகள் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள்