அளவைகள் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு - கால அளவைகள் | 6th Maths : Term 2 Unit 2 : Measurements

   Posted On :  22.11.2023 02:39 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள்

கால அளவைகள்

பழங்காலத்தில் இருந்தே காலத்தை அளவிடும் முறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

கால அளவைகள்

ஆசிரியர் கீழ்க்கண்ட வினாக்களை மாணவர்களிடம் எழுப்பி விடையைப் பெறுதல்:

• 100 மீ தொலைவு ஓட எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வாய்?

• 1 கி.மீ தொலைவு நடக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வாய்?

• 1 குவளை அரிசி வேக வைக்க எவ்வளவு நேரம் ஆகும்?

நிலக்கடலை விளைவிக்க ஆகும் காலம் எவ்வளவு?

இந்த வினாக்கள் அன்றாட வாழ்க்கையில் நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தப் பயன்படும். கால அளவைகளின் வளர்ச்சியை நாம் இங்கு விவாதிப்போம்.

பழங்காலத்தில் இருந்தே காலத்தை அளவிடும் முறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொடக்கத்தில், மணற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட குச்சியின் நிழல் மூலம் நேரக் கணக்கீடு செய்தார்கள். பிறகு, கிடைமட்ட மற்றும் செங்குத்து வட்டுகளைக் சூரியனின் வட்டுகளாகப் பயன்படுத்திக் சூரியனின் தோற்றம் மற்றும் மறைவுக்கு இடைப்பட்ட காலத்தைக் கணக்கிட்டார்கள். அது பகல் நேரம் ஆகும். இரவு நேரத்தை முடிபோட்ட கயிறுகளை எரிய விட்டுக் கணக்கிட்டார்கள். நெருப்பு ஒரு முடிச்சில் இருந்து மற்றொரு முடிச்சிற்கு எரிந்து செல்ல எடுத்துக் கொள்ளும் நேரத்தைத் தோராயமாக, இரவின் ஒரு பாகமாகக் கணக்கிட்டார்கள். பிறகு வந்த நாட்களில், ஒரு நாளினை 24 சம பாகங்களாக்கி (மணி) அதில் 12 மணி நேரத்தைப் பகல் பொழுதாகவும், 12 மணி நேரத்தை இரவுப் பொழுதாகவும் பிரித்தார்கள்.

பூமி, சூரியனை ஒரு முழுச் சுற்றுச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு சூரிய ஆண்டு ஆகும். இது 12 சமப் பாகங்களாகப் பிரிக்கப்பட்டு அவை சூரிய மாதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இரண்டு முழு நிலவுக்கு இடைப்பட்ட காலத்தை நிலவு மாதம் எனவும் மற்றும் 12 நிலவு (முழு நிலவு) மாதங்களைச் சேர்த்து ஒரு நிலவு ஆண்டு எனவும் குறிப்பிடப்படுகிறது. எனினும் நாம் சூரிய ஆண்டு மற்றும் மாதத்தைப் பயன்படுத்துகிறோம்.

உலகின் பல்வேறு பகுதிகளில், நேரத்தை அளவிட நீர்க் கடிகாரம், மெழுகுக் கடிகாரம், கயிறுக் கடிகாரம், சூரிய நிழல் கடிகாரம், மணல் கடிகாரம் போன்ற வெவ்வேறு வகையான கடிகாரங்களை உருவாக்கிப் பயன்படுத்தினார்கள். அந்தக் கடிகாரங்களைப் பார்த்து இருக்கிறிர்களா? கீழே உள்ள படத்தில் நாம் காணலாம்.


காலத்தை அளக்கும் கடிகாரங்களைப் பற்றிய படிப்பிற்கு 'ஹாராலஜி' என்று பெயர். இக்காலத்தில் நாம் ஊசல் கடிகாரம், எண்சார் கடிகாரம், குவார்ட்ஸ் கடிகாரம், அணுக் கடிகாரம் போன்றவற்றைப் பயன்படுத்தி நேரத்தைத் துல்லியமாகக் காண்கிறோம்.


உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் மக்கள் மக்கள் வானவியல் அறிவியலில் சிறந்த வல்லுநர்களாக இருந்துள்ளனர். தொல்காப்பியம் என்ற நூலானது பொழுது (காலம்) பற்றி விளக்குகிறது. அதில் ஒரு நாளை 6 சம பிரிவுகளாகப் பிரித்து அவற்றைச் 'சிறுபொழுது' என்றும், ஓர் ஆண்டை 6 சம பிரிவுகளாகப் பிரித்து அவற்றைப் 'பெரும்பொழுது' என்றும் அழைத்தனர்.

1 நாழிகை = 24 நிமிடங்கள்; 1 மணி = 2.5 நாழிகை = 1 ஓரை;

1 நாள் = 24 மணி நேரம் = 60 நாழிகை;

தமிழர்கள் இரவுப் பொழுதினைக் கணக்கிட 'குறுநீர்க் கன்னல்' என்ற கருவியைப் பயன் படுத்தினர்

நேரத்தைக் கணக்கிட்டோர் 'பொழுது அளந்து அறியும் பொய்யா மக்கள்' எனப்பட்டனர்.

காலத்தின் அலகு:

தற்காலங்களில் நேரத்தைத் துல்லியமாக நாம் அளவிடுகிறோம். காலத்தின் அலகுகள் வினாடி, நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், ஆண்டு போன்றைவயாகும். இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையன.

மீள்பார்வை:

1. கீழ்க்காணும் கடிகாரங்களைப் பார்த்து நேரத்தைக் குறிக்க.



1. நேரத்தைப் படித்தல்

இரண்டு வழிகளில் நேரத்தைப் படிக்கப் பயிற்சி செய்வோம்.


'கடந்து' என்ற சொல்லைப் பயன்படுத்தி நேரத்தை அறிவதில் பயிற்சி பெறுவோம்.


கடக்கப் போகும் நேரத்தைக் கூற : 'க்கு'ப் பயன்படுத்துதல்



இவற்றை முயல்க

கீழ்க்கண்ட நேரத்தைப் பொருத்தமான வழிகளில் கூறுக.

) 9:20 

) 4:50 

) 5:15 

) 6:45 

) 11:30


2. நேர அலகினை மாற்றுதல்


செயற்கைக்கோள் ஏவுதல், ஓட்டப் பந்தயம், தொடர்வண்டி நிலையம் போன்ற பல சூழ்நிலைகளில் நேரத்தை வினாடிக்குத் துல்லியமாக கணிக்க வேண்டியது மிகத் தேவை. எனவே, இந்தக் கால நேர அலகு மாற்றத்தைத் தெரிந்துக் கொள்ள வேண்டியது மிகத் தேவையாகும்.

நேர மாற்றம் தொடர்பான அட்டவணையை நினைவில் கொள்வோம்.


எடுத்துக்காட்டு 12: ஒரு விவசாயி நிலத்தை 3 மணி 35 நிமிடங்களில் உழுகிறார். எனில், அவர் உழுத நேரத்தை முழுவதுமாக நிமிட அலகில் மாற்றுக.

தீர்வு:

விவசாயி நிலத்தை உழுவதற்கு ஆன நேரம் = 3 மணி 35 நிமிடங்கள்

= 3 × 60 நிமிடங்கள் + 35 நிமிடங்கள்

= 180 நிமிடங்கள் + 35 நிமிடங்கள் = 215 நிமிடங்கள்


எடுத்துக்காட்டு 13: ஒரு கைத்தறி நெசவாளர் இரண்டு பட்டுப்புடவைகளை நெய்வதற்கு 6 மணி 20 நிமிடங்கள் 30 வினாடிகள் மற்றும் 5 மணி 50 நிமிடங்கள் 45 வினாடிகள் எடுத்துக் கொள்கிறார் எனில் அந்த இரண்டு பட்டுப்புடவைகளை உருவாக்க எடுத்துக் கொண்ட மொத்த நேரம் எவ்வளவு?

தீர்வு:



எடுத்துக்காட்டு 14: ஒரு செயற்கைக்கோள் 7 மணி 16 நிமிடங்கள் 20 வினாடிகளில் தன்னுடைய சுற்று வட்டப் பாதையை அடைகிறது. இதனை வினாடிகளில் கணக்கிடுக.

தீர்வு :

செயற்கைக்கோள் தன்னுடைய சுற்று வட்டப் பாதையை அடைய எடுத்துக்கொண்ட நேரம்

= (7 மணி) + (16 நிமிடங்கள்) + (20 வினாடிகள்)

= (7 × 60 ×  60) வினாடிகள் + (16 × 60) வினாடிகள் + 20 வினாடிகள்

= 25200 வினாடிகள் + 960 வினாடிகள் + 20 வினாடிகள்

= 26,180 வினாடிகள்

செயற்கைக்கோள் எடுத்துக் கொண்ட நேரம் 26,180 வினாடிகள்


எடுத்துக்காட்டு 15: இரண்டு மிதி வண்டியாளர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்தைக் கடக்க முறையே 5 மணி 35 நிமிடங்கள் 10 வினாடிகள் மற்றும் 8 மணி நேரம் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் எடுத்துக் கொண்ட நேரங்களின் வேறுபாடு காண்க?

தீர்வு :


இவற்றை முயல்க

கீழ்க்கண்டவற்றை உகந்த அலகுகளாக மாற்றுக:

i) 4 மணி          = 240 நிமிடங்கள்

ii) 240 நிமிடங்கள்  = 4 மணி

iii) 30 நிமிடங்கள் = 1800 வினாடிகள் 

iv) 3600 வினாடிகள் = 1 மணி

v) 2 மணி   = 7200 வினாடிகள்


3. 12 மணி நேர அமைப்பு

12 மணி நேர அமைப்புக் கடிகாரத்தில் முற்பகல் (மு.) மற்றும் பிற்பகல் (பி.) எனக் குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் ஒரு முழு நாளில் உள்ள மொத்த நேரத்தைப் பகல் மற்றும் இரவு ஆகப் பிரிக்கிறோம். இந்தக் கடிகாரத்தில் சரியாக இரவு 12 மணியை நள்ளிரவு என்றும் சரியாகப் பகல் 12 மணியை நண்பகல் என்றும் அழைக்கிறோம்.

முற்பகல் (மு.–a.m.) என்பது நள்ளிரவு (midnight) 12 மணிக்குப் பிறகும் நண்பகல் 12 மணிக்கு முன்பு வரையும் ஆகும்.

பிற்பகல் (பி.–p.m.) என்பது நண்பகல் (noon) 12 மணிக்குப் பிறகும் நள்ளிரவு 12 மணிக்கு முன்பு வரையும் ஆகும்.


எடுத்துக்காட்டு:

(i) காலை 5 மணியை 5 மு. எனக் குறிக்கிறோம்.

(ii) மாலை 5 மணியை 5 பி. எனக் குறிக்கிறோம்

(ii) 3.20 மு.இல் இடம் பெறும் புள்ளியானது வழக்கமான தசமப்புள்ளியைக் குறிக்காது.


4. தொடர்வண்டி நேரம் அல்லது 24 மணி நேர அமைப்பு 


பொதுவாக, நாம் 12 மணி நேரக் கடிகாரத்தைப் பயன்படுத்துகிறோம். ஆனால், காலை, மாலை குழப்பத்தைத் தவிர்க்கும் வகையில் தொடர்வண்டி, நிலையம், பாதுகாப்புத் துறை, தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றில் 24 மணி நேரக் கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது. தொடர்வண்டி நிலையத்தில் நீங்கள் இருக்கும் போதும், அறிவிப்புகளைக் கேட்கும்போதும் மற்றும் தொடர்வண்டி கால அட்டவணையைப் படிக்கும்போதும் அதில் மு.. மற்றும் பி. என்ற அமைப்பு இருக்காது. ஏனெனில் அவர்கள் 24 மணி நேரத்தைத் தொடர்ந்து பின்பற்றுகிறார்கள். எனவே, அவர்கள் முற்பகல், பிற்பகல் என்று கூறத் தேவையில்லை. தொடர்வண்டி நேரம் பொதுவாக 4 இலக்கத்தில் குறிக்கப்படுகிறது. இதில் முதல் இரண்டு இலக்கங்கள் மணிகளையும் கடைசி இரண்டு இலக்கங்கள் நிமிடங்களையும் குறிக்கும்.

எடுத்துக்காட்டு:


(i) 5 பி. என்பதை 17:00 மணி எனக் குறிக்கலாம்

(ii) முற்பகல் 7 மணியை 07 : 00 மணி எனக் குறிக்கலாம்

(iii) பிற்பகல் 1 மணியை 13: 00 மணி (12 + 1 மணி) எனக் குறிக்கலாம்

அதாவது, பிற்பகல் 12 மணிக்குப் பிறகு தொடரும் நேரத்தை 24 மணி வரை கணக்கிடுவார்கள்.

(iv) நள்ளிரவு 12 என்பதை 00:00 மணி அல்லது 24:00 என எழுதலாம்.

(v) நண்பகல் 12 என்பதை 12 மணி என எழுதலாம்.


5. நேர அமைப்பு மாற்றம்


கொடுக்கப்பட்டுள்ள கடிகாரத்தை உற்று நோக்குக. கீழ்க்கண்ட கருத்துகளை நினைவுபடுத்துக.

ஒரு குறிப்பிட்ட நேர அமைப்பினை மற்றொரு நேர அமைப்புக்கு மாற்றும் பொழுது நினைவில் கொள்ள வேண்டிய கருத்துகள் பின்வருமாறு

• 12 மணி நேர அமைப்பை 24 மணி நேர அமைப்பாக மாற்றும்போது, நேரமானது நள்ளிரவு 12.00 மணி முதல் 01.00 மு. வரை இருப்பின் 12 மணியை 00:00 என மாற்றவும். 01.00 பி. வரை நேர அமைப்பில் மாற்றமில்லை, பிற்பகல் 1.00 மணியிலிருந்து தொடர்ந்து வரும் மணிகளுடன் 12:00 மணியைக் கூட்ட வேண்டும்.

• 24 மணி நேர அமைப்பை 12 மணி நேர அமைப்பாக மாற்றும்போது, நேரமானது 00.00 மணி முதல் 01:00 மணி வரை இருப்பின் 00:00 இக்குப் பதிலாக 12 மணியாக மாற்றவும். 13.00 மணிக்குள் நேர அமைப்பில் மாற்றமில்லை. 13.00 மணியிலிருந்து தொடர்ந்து வரும் மணிகளை 12:00 மணியால் கழிக்கவும்.

ஒரு நேர அமைப்பிலிருந்து மற்றோர் அமைப்பிற்கு மாற்றுகையில், இரண்டு நேர அமைப்பிலும் நிமிடத்தில் மாற்றம் இருக்காது.

12 மணி நேர அமைப்புக்கு மாற்றுதல்:


24 மணி நேர அமைப்புக்கு (தொடர்வண்டி நேரம்) மாற்றுதல்:


இவற்றை முயல்க

உகந்த நேர அமைப்பிற்கு மாற்றுக.

10:40 மு. = 10:40 மணி

11 மு. = 11 மணி

1:15 மு. = 1:15 மணி

5 மு. = 5 மணி

16:20 மணி = 4:20 மு. / பி.

00:40 மணி = 00:40 மு. / பி.

1 பி. = 13:00 மணி

11.15 பி. = 23:15 மணி 

3 பி. = 15 மணி

12 நள்ளிரவு = 0மணி

12:25 மணி = 12:25 மு. / பி.

4:10 மணி = 4:10 மு. / பி.


தீர்வு:

வழிமுறை 1

6 மு. மணியை தொடர்வண்டி நேரமாக மாற்ற = 06:00 மணி

4 பி.. மணியை தொடர்வண்டி நேரமாக மாற்ற = (4 + 12) மணி = 16:00 மணி

6 மு.. மணிக்கும் 4 பி.. மணிக்கும் இடைப்பட்ட நேர இடைவெளி

= 16 மணிக்கும் 6 மணிக்கும் உள்ள வேறுபாடு

= 16:00 மணி – 6:00 மணி = 10 மணி

வழிமுறை 2


= 6 மணி + 4 மணி = 10 மணி


6. இரண்டு நேரத்திற்கு இடைப்பட்ட கால இடைவெளியைக் காணல்

எடுத்துக்காட்டு 16: 6 மு.. மற்றும் 4 பி.இக்கு இடைப்பட்ட கால இடைவெளியைக் காண்க

எடுத்துக்காட்டு 17: சென்னைதிருச்சி விரைவு வண்டியின் வந்து சேரும் நேரமும், புறப்படும் நேரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



தீர்வு:

1. இந்தத் தொடர்வண்டி எத்தனை மணிக்குச் சென்னை எழும்பூரில் புறப்பட்டு எத்தனை மணிக்குத் திருச்சி வந்தடைகிறது?

 இந்தத் தொடர்வண்டி எழும்பூரில் 20:30 மணிக்குப் புறப்பட்டுத் திருச்சியை 4:30 மணிக்கு வந்தடைகிறது.

2. விழுப்புரத்தில் எவ்வளவு நேரம் நிற்கிறது ?

 விழுப்புரத்தில் 10 நிமிட நேரம் நிற்கிறது (23:25 – 23:15 = 10 நிமிடங்கள்)

3. சென்னையில் இருந்து திருச்சி வரை எத்தனை நிறுத்தங்கள் உள்ளன?

 3 நிறுத்தங்கள்: 1. செங்கல்பட்டு: 2. விழுப்புரம் சந்திப்பு: 3.விருதாச்சலம் சந்திப்பு

4. சென்னையில் இருந்து திருச்சிக்குச் செல்லும் இத்தொடர் வண்டியின் பயண நேரத்தைக் கணக்கிடுக.

(குறிப்பு: பயண நேரம் நள்ளிரவைக் கடந்து சென்றால், பயணம் தொடங்கிய நேரத்தில் இருந்து நள்ளிரவு வரையும், பிறகு நள்ளிரவு முதல் வந்து சேரும் நேரம் வரையும் நேர இடைவெளி காண வேண்டும்)



எடுத்துக்காட்டு 18: முற்பகல் 7 மணிக்கு சரியான நேரத்தில் வைக்கப்பட்ட ஒரு கடிகாரமானது, மணிக்கு 2 நிமிடங்கள் வீதம் தாமதமாக இயங்கினால் பிற்பகல் 6 மணிக்கு அக்கடிகாரம் காட்டும் நேரத்தைக் காண்க.


தீர்வு:

படி 1: 1 மணி நேரத்தில் கடிகாரம் தாமதமாக இயங்கும் நேரம் = 2 நிமிடங்கள்

படி 2: 11 மணி நேரத்தில் கடிகாரம் தாமதமாக இயங்கும் நேரம் = 11 × 2 = 22 நிமிடங்கள்

எனவே பிற்பகல் 6 மணிக்குச் சரியான நேரத்தை விட 22 நிமிடங்கள் தாமதமாக நேரத்தைக் காட்டும். அதாவது பிற்பகல் 6 மணிக்குக் கடிகாரம் காட்டும் நேரம் பிற்பகல் 5 மணி 38 நிமிடங்கள்


7. ஆண்டு

பூமி, சூரியனை ஒரு சுற்றுச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் ஓர் ஆண்டு ஆகும். ஓர் ஆண்டானது 12 மாதங்கள் அல்லது 365 நாள்களைப் பெற்றிருக்கும். ஒவ்வொரு மாதமும் வாரங்களாகப் பகுக்கப்படுகின்றன. ஒரு மாதமானது, 4 வாரங்கள் மற்றும் சில நாள்களைக் கொண்டுள்ளது. ஒரு வாரம் என்பது 7 நாள்களைக் கொண்டது. ஒரு மாதத்தில் 30 நாள்கள் அல்லது 31 நாள்கள் இருக்கும். பிப்ரவரி மாதம் மட்டும் 28 அல்லது 29 நாள்களைப் பெற்று இருக்கும்.

லீப் ஆண்டு (நெட்டாண்டு)


பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றி வருகிறது என்று நமக்குத் தெரியும். பூமி, சூரியனை ஒரு முழுச் சுற்றுச் சுற்றி வர 365 நாள்கள் மற்றும் 6 மணி எடுத்துக் கொள்ளும். நாம் 365 நாள்களை 1 ஆண்டாக எடுத்துக் கொள்கிறோம். ஒவ்வோர் ஆண்டிலும் மீதம் 6 மணி நேரத்தைச் சரி செய்ய, ஒவ்வொரு 4 ஆண்டிற்கு ஒரு முறை ஒரு நாளைச் சேர்த்துக் கொள்கிறோம் (4ஆண்டுகள் × 6 மணி = 24 மணி 1 நாள்). ஒவ்வொரு 4ஆவது ஆண்டும் 365 நாள்கள் + 1 நாள் = 366 நாள்களைப் பெற்றிருக்கும்

இந்த 1 நாள் ஒவ்வொரு 4ஆவது ஆண்டில் வரும் பிப்ரவரி மாதத்தில் சேர்க்கப்படும். எனவே 366 நாள்கள் கொண்ட ஆண்டை லீப் ஆண்டு என்கிறோம். லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் 29 நாள்கள் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் நீங்கள் பிறந்த நாள் கொண்டாடுவீர்கள். ஆனால் பிப்ரவரி 29ஆம் நாள் பிறந்த ஒருவரால் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பிறந்த நாள் கொண்டாட முடியும்.

லீப் ஆண்டினை எவ்வாறு கண்டுபிடிப்பது?

I. பொதுவாகக் கொடுக்கப்பட்ட ஆண்டு 4 ஆல் மீதியின்றி வகுபட்டால் அது லீப் ஆண்டு ஆகும் 


எடுத்துக்காட்டு:

(i) 2016–ஆம் ஆண்டு லீப் ஆண்டு ஏனெனில் 2016 ஆனது 4 ஆல் மீதியின்றி வகுபடும்.

(ii) 2018–ஆம் ஆண்டு லீப் ஆண்டு இல்லை ஏனெனில் 2018 ஆனது 4 ஆல் வகுக்கப்பட்டால் மீதியைத் தரும்.

II. நூற்றாண்டுகளில்

நூறின் மடங்குகளாக உள்ள ஆண்டுகள் நூற்றாண்டுகள் ஆகும். 1100, 1200, 1300,......... 1900, 2000, 2100, ...... ஆகியவை நூற்றாண்டுகள் ஆகும். 400 ஆல் வகுபடும் நூற்றாண்டுகள் லீப் ஆண்டுகள் ஆகும்.

சிந்திக்க: நூற்றாண்டுகளை நாம் ஏன் 400 ஆல் வகுக்க வேண்டும்?

எடுத்துக்காட்டு:

(i) 1200 ஆம் ஆண்டு 400 ஆல் வகுபடும், எனவே 1200 ஆம் ஆண்டு லீப் ஆண்டு ஆகும்.

(ii) 1700 ஆம் ஆண்டு 400 ஆல் வகுபடாது, எனவே 1700 வது ஆண்டு லீப் ஆண்டு அல்ல.

எடுத்துக்காட்டு 19: 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி புதன்கிழமை எனில் 2018ஆம் ஆண்டு சூன் மாதம் 8ஆம் தேதி என்ன கிழமை?

தீர்வு:



170 நாள்கள் ÷ 7 (ஏன்?)

170 நாள்கள் = 24 வாரங்கள் + 2 நாள்கள்

தேவையான கிழமை புதன்கிழமைக்கு 2வது நாள். எனவே, சூன் மாதம் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை.

எடுத்துக்காட்டு 20: மலரின் பிறந்த நாள் 20.11.1999 ஆகும். 05.10.2018 அன்று உள்ளபடி அவளுடைய வயதைக் கணக்கிடுக.

தீர்வு:


மலரின் வயது : 18 ஆண்டுகள் 10 மாதங்கள் 15 நாள்கள்


இவற்றை முயல்க

1. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆண்டுகள் சாதாரண ஆண்டா? அல்லது லீப் ஆண்டா எனச் சரிபார்க்க.

1994, 1985, 2000, 2007, 2010, 2100 விடை: லீப் ஆண்டு: 2000, 2100

2. ஏப்ரல் 1 முதல் சூன் 30 வரை எத்தனை நாள்கள் உள்ளன? விடை: ஏப்ரல் 1 முதல் சூன் 30 வரை 91 நாட்கள் உள்ளன


செயல்பாடு

1. பிப்ரவரி 29 இல் பிறந்த முக்கியப் பிரபலங்களின் பெயர்களைச் சேகரிக்கவும்.

2. இலண்டனிலுள்ள பிக்பென் கடிகாரம் குறித்த சுவையான தகவல்களைச் சேகரிக்கவும்.



உங்களுக்குத் தெரியுமா?

ஒரு குறிப்பிட்ட ஆண்டு நிகழ்விற்கான பெரு விழாக் கொண்டாட்டங்கள்


வெள்ளி விழா – 25 வது ஆண்டு

மாணிக்க விழா – 40 வது ஆண்டு

பொன் விழா – 50 வது ஆண்டு

வைர விழா – 60 வது ஆண்டு

மணி விழா – 65 வது ஆண்டு

பிளாட்டின விழா – 70 வது ஆண்டு


● 10 ஆண்டுகள் = 1 பத்தாண்டு

● 100 ஆண்டுகள் = 1 நூற்றாண்டு 

● 1000 ஆண்டுகள் = 1 புத்தாயிரம்

● 21ஆம் நூற்றாண்டு = 2001 – 2100 

நாம் இந்த நூற்றாண்டில் வாழ்கிறோம்.

● 3வது புத்தாயிரம் = 2001 – 3000 ஆண்டுகள் 

நாம் இந்தப் புத்தாயிரத்தில் வாழ்கிறோம்.


Tags : Measurements | Term 2 Chapter 2 | 6th Maths அளவைகள் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 2 Unit 2 : Measurements : Measures of Time Measurements | Term 2 Chapter 2 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள் : கால அளவைகள் - அளவைகள் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள்