கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | அளவைகள் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.2 | 6th Maths : Term 2 Unit 2 : Measurements

   Posted On :  22.11.2023 02:31 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள்

பயிற்சி 2.2

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள் : பயிற்சி 2.2 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.2


1. கீழ்க்கண்ட நேரத்தை இரு முறைகளிலும் கூறுக


விடை :

i) 10:15 மணி, கால் மணி கடந்து 10 மணி 

ii) 6:45 மணி, 7 மணிக்கு கால் மணி 

iii) 4:10 மணி, 10 நிமிடங்கள் கடந்து 4 மணி 

iv) 3:30 மணி, அரை மணி கடந்து 3 மணி

v) 9:40 மணி, 10 மணிக்கு 20 நிமிடங்கள் 


2. பொருத்துக:

(i) 09.55      – . 2 மணி கடந்து 20 நிமிடங்கள் 

(ii) 11.50     – . 4 மணி கடந்து 15 நிமிடங்கள்

(iii) 04.15   – . 8 மணிக்கு 15 நிமிடங்கள்

(iv) 07.45    – . 10 மணிக்கு 5 நிமிடங்கள்

(v) 02.20     – . 12 மணிக்கு 10 நிமிடங்கள்

விடை :

(i) 09.55      – . 10 மணிக்கு 5 நிமிடங்கள்

(ii) 11.50     – . 12 மணிக்கு 10 நிமிடங்கள்

(iii) 04.15   – . 4 மணி கடந்து 15 நிமிடங்கள்

(iv) 07.45    – . 8 மணிக்கு 15 நிமிடங்கள்

(v) 02.20     – . 2 மணி கடந்து 20 நிமிடங்கள்


3. கீழ்க்கண்டவற்றை மாற்றுக

(i) 20 நிமிடங்களை வினாடிக்கு.

விடை

1 நிமிடம் = 60 வினாடிகள் 

20 நிமிடம் = 20 × 60 வினாடிகள்

= 1200 வினாடிகள் 

(ii) 5 மணி 35 நிமிடங்கள் 40 வினாடிகளை முழுவதுமாக வினாடிக்கு.

விடை :

1 மணி = 60 நிமிடம் 

1 நிமிடம் = 60 நொடி 

1 மணி = 3600 வினாடிகள் 

5 மணி = 5 × 3600 வினாடிகள்

= 18000 வினாடிகள் 

35 நிமிடம் = 35 × 60 வினாடிகள்

= 2100 வினாடிகள் 

5 மணி 35 நிமிடங்கள் 40 வினாடிகள்

= (18000 + 2100 + 40) வினாடிகள்

= 20140 வினாடிகள் 

(iii) 3  1/2 மணியினை நிமிடத்திற்கு.

விடை

1 மணி = 60 நிமிடம் 

3 ½  மணி = 3 மணி + 30 நிமிடம்

= (3 × 60 + 30) நிமிடம் 

= (180 + 30) நிமிடம் 

= 210 நிமிடம்

(iv) 580 நிமிடங்களை மணிக்கு.

விடை

1 மணி = 60 நிமிடம்

580 நிமிடம் 

= 580/60  மணி

= 290/30 மணி

= 29/3 மணி

= 9(2/3) மணி

= 9 மணி 40 நிமிடங்கள்

(v) 25200 வினாடிகளை மணிக்கு.

விடை

25200 வினாடிகள் = 25200/3600 மணி

= 252/36

252/36 = 126/18 மணி

= 63/9 மணி

= 7 மணி


4. ஒரு விவசாயி தன்னுடைய மின்சார மோட்டாருக்காகத் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் மின்சாரத்தைப் பயன்படுத்திய நேரம் முறையே 7 மணி 20 நிமிடம் 35 வினாடி மற்றும் 3 மணி 44 நிமிட 50 வினாடி எனில் அவர் மின்சாரத்தைப் பயன்படுத்திய மொத்த நேரத்தைக் கணக்கிடுக

விடை

இரு நாட்களிலும் மின்சாரத்தைப் பயன்படுத்திய மொத்த நேரம்

= 7 மணி 20 நிமிடங்கள் 35 வினாடிகள் + 3 மணி 44 நிமிடங்கள் 50 வினாடிகள்

 = (7+3) மணி (20+44) நிமிடங்கள் (35+50) வினாடிகள் 

= 10 மணி 64 நிமிடங்கள் 85 வினாடிகள் 

= 11 மணி 5 நிமிடங்கள் 25 வினாடிகள்


5. 12 மணி 18 நிமிடங்கள் 40 வினாடிகளில் இருந்து 10 மணி 20 நிமிடங்கள் 35 வினாடிகளைக் கழிக்க.

விடை

12 மணி 18 நிமிடங்கள் 40 வினாடிகள்

= ([12 × 3600] + [18 × 60] + 40) வினாடிகள் 

= 43200 + 1080 + 40 வினாடிகள்

= 44320 வினாடிகள் 

10 மணி 20 நிமிடங்கள் 35 வினாடிகள்

= (10 × 3600) + (20 × 60) + 35 வினாடிகள் 

= 36000 + 1200 + 35 வினாடிகள்

= 37235 வினாடிகள் 

வித்தியாசம்


7085 வினாடிகள் = (1 × 3600) + 3480 + 5 வினாடிகள்

= 1 மணி 58 நிமிடங்கள் 5 வினாடிகள்


6. கீழ்க்கண்டவற்றை 12 மணி நேர அமைப்புக்கு மாற்றுக

(i) 02 : 00 மணி

(ii) 08:45 மணி

(iii) 21:10 மணி

(iv) 11:20 மணி

(v) 00 :00 மணி

விடை:

 i) 2 மு.. ii) 08.45 மு.. iii) 9.10 பி. iv) 11.20 மு.. v) 12 மு../12:00 நள்ளிரவு


7. கீழ்க்கண்டவற்றை 24 மணி நேர அமைப்புக்கு மாற்றுக

(i) 3:15 மு. 

(ii) 12 : 35 பி. 

(iii) 12:00 நண்பகல் 

(iv) 12:00 நள்ளிரவு

விடை

i) 03.15 மணி 

ii) 12.35 மணி 

iii) 12.00 மணி

 iv) 24.00 மணி

v) 00.00 மணி / 24.00 மணி


8. கீழ்க்கண்ட நேரங்களுக்கு இடைப்பட்ட கால இடைவெளியைக் காண்க

(i) 5.30 மு.. முதல் 12.40 பி. வரை

(ii) 1.30 பி. முதல் 10.25 பி. வரை

(iii) 20 மணி முதல் 4 மணி வரை 

(iv) 17 மணி முதல் 5.15 மணி வரை

விடை

i) 5.30 மு.. முதல் 12.40 பி.. வரை

= (5.30 மு.. முதல் 12 பி..) + ( 12 பி.. முதல் 12.40 பி.. )

= 6 மணி 30 நிமிடங்கள் + 40 நிமிடங்கள் 

= 6 மணி 70 நிமிடங்கள்

= 7 மணி 10 நிமிடங்கள்

 ii) 1.30 பி.. முதல் 10.25 பி.. வரை

= (1.30 பி.. முதல் 10.25 பி..) 

= 8 மணி 55 நிமிடங்கள்

iii) 20 மணி முதல் 4 மணி வரை

= (20.00 மணி முதல் 24.00 மணி ) + (24.00 மணி முதல் 4.00 மணி )

= 4 மணி + 4 மணி == 8 மணி 

iv) 17 மணி முதல் 5.15 மணி வரை

= (17.00 மணி முதல் 05.00 மணி) + 15 நிமிடங்கள் 

= 12 மணி + 15 நிமிடங்கள் 

= 12 மணி 15 நிமிடங்கள்


9. சென்னை எழும்பூரிலிருந்து மதுரை வரைச் செல்லும் வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி (எண் 12635)–இன் புறப்படும் நேரம் மற்றும் வந்து சேரும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட தகவல்களைப் படித்துப் பதிலளிக்கவும்.


(i) வைகை அதி விரைவு வண்டி எத்தனை மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து சேருகிறது ?

(ii) சென்னை மற்றும் மதுரைக்கு இடையில் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன?

(ii) விழுப்புரம் நிலையத்தில் எவ்வளவு நேரம் நிற்கிறது ?

(iv) சோழவந்தானுக்கு வந்து சேரும் நேரம் என்ன ?

(v) சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வந்து சேர ஆகும் மொத்தப் பயண நேரத்தைக் காண்க

விடை

i) 13.40 மணி–21.20 மணி 

ii) 8 நிறுத்தங்கள் 

iii) 5 நிமிடங்கள்

iv) 20.34 மணி 

v) 7 மணி 40 நிமிடங்கள்


10. மாணிக்கம் 20.02.2017 அன்று சதுரங்க வகுப்பில் சேர்ந்தார். தேர்வின் காரணமாக 20 நாட்களுக்குப் பிறகு பயிற்சி வகுப்புக்குச் செல்லவில்லை. மீண்டும் அவர் 10.07.2017 முதல் 31.03.2018 வரை சதுரங்கப் பயிற்சி வகுப்புக்குச் சென்றார். எத்தனை நாள்கள் அவர் பயிற்சி வகுப்பிற்குச் சென்றார் எனக் கணக்கிடுக.

விடை

சேர்ந்த நாள் முதல் = 20 நாட்கள்

10.07.2017 முதல் 31.03.2018 வரை

ஜூலை – 22 

ஆகஸ்ட் – 31 

செப்டம்பர் – 30 

அக்டோபர் – 31 

நவம்பர் – 30 

டிசம்பர் – 31 

ஜனவரி – 31 

பிப்ரவரி – 28

மார்ச் – 31

= 265 


பயிற்சி வகுப்பிற்குச் சென்ற மொத்த நாட்கள்

= 265 + 20 = 285 நாட்கள்


11. முற்பகல் 5 மணிக்கு சரியான நேரத்தில் வைக்கப்பட்ட ஒரு கடிகாரமானது, மணிக்கு 3 நிமிடங்கள் வீதம் வேகமாக இயங்கினால் பிற்பகல் 7 மணிக்கு அக்கடிகாரம் காட்டும் நேரத்தைக் காண்க.

விடை

1 மணி நேரத்தில் கடிகாரம் வேகமாக இயங்கும் நேரம் = 3 நிமிடங்கள்

மு.. 5 மணி முதல் பி.. 7 மணி வரை உள்ள கால இடைவெளி = 14 மணி 

14 மணி நேரத்தில் கடிகாரம் வேகமாக இயங்கும் நேரம் = 14 × 3 நிமிடங்கள் = 42 நிமிடங்கள் 

பி.. 7 மணிக்கு கடிகாரம் காட்டும் நேரம 7 மணி 42 நிமிடங்கள்.


12. 2020 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசு தினத்திற்கும், கல்வி வளர்ச்சி நாளுக்கும் இடையில் உள்ள நாள்களைக் கணக்கிடுக.

விடை

2020 என்பது லீப் ஆண்டு ஆகும்

குடியரசு நாள் = 26.01.2020 

கல்வி வளர்ச்சி நாள் = 15.07.2020

ஜனவரி = 5 

பிப்ரவரி = 29

மார்ச் = 31

ஏப்ரல் = 30

மே = 31 

ஜூன் = 30 

ஜூலை = 14

= 170 நாட்கள் 



13. 2018ஆம் ஆண்டு சனவரி மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமை எனில் அதே ஆண்டு சூலை 20ஆம் தேதி என்ன கிழமை?

விடை :

ஜனவரி = 21 

பிப்ரவரி = 28

மார்ச் = 31 

ஏப்ரல் = 30

மே =31 

ஜூன் = 30 

ஜூலை = 19

= 190 நாட்கள் 


190 நாட்கள் = 27 வாரங்கள் + 1 நாள் 

தேவையான கிழமை வியாழக் கிழமைக்கு அடுத்த நாள். எனவே, 20 ஜூலை 2018 வெள்ளிக்கிழமை ஆகும்.


14. (i) 480 நாள்களை ஆண்டுகளாக மாற்றுக.

(ii) 38 மாதங்களை ஆண்டுகளாக மாற்றுக.

விடை

i) 480 நாட்கள் = 480 / 365 வருடம்

= 1 வருடம் 115 நாட்கள்

= 1 வருடம் 3 மாதம் 25 நாட்கள்

 ii) 38 மாதங்கள் = 38/12  வருடங்கள்

= 3 வருடங்கள் 2 மாதங்கள் 


15. உன்னுடைய வயதை 01.06.2018 அன்றுள்ளபடி கணக்கிடுக.

விடை :

என்னுடைய பிறந்த தேதி  = 20.11.1999 நாள் அமைப்புக்கு மாற்றுக

. yyyy/mm/dd 


என்னுடைய வயது 18 வருடம் 6 மாதம் 11 நாட்கள்



கொள்குறி வகை வினாக்கள்


16. 2 நாள்கள் = ___________மணி

) 38

) 48

) 28

) 40

[விடை : ) 48]


17. 3 வாரங்கள் =__________________ நாள்கள்

) 21

) 7

) 14

) 28

[விடை : ) 21]


18. அடுத்தடுத்த இரண்டு லீப் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட சாதாரண ஆண்டுகளின் எண்ணிக்கை

) 4 ஆண்டுகள் 

) 2 ஆண்டுகள் 

) 1 ஆண்டு 

) 3 ஆண்டுகள்

[விடை : ) 3 ஆண்டுகள்]


19. 22 : 35 மணியில் இருந்து 5 மணி நேரம் கடந்த பிறகு காட்டும் நேரம் ______________

) 2 : 30 மணி

) 3: 35 மணி

) 4 : 35 மணி 

)  5:35  மணி 

[விடை : ) 3: 35 மணி]


20. 2 ½ ஆண்டுகள் என்பது ______________ மாதங்கள்

) 25

) 30

) 24

)  5

[விடை : ) 30]


Tags : Questions with Answers, Solution | Measurements | Term 2 Chapter 2 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | அளவைகள் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 2 Unit 2 : Measurements : Exercise 2.2 Questions with Answers, Solution | Measurements | Term 2 Chapter 2 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள் : பயிற்சி 2.2 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | அளவைகள் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள்