இந்திய அரசியலமைப்பு | குடிமையியல் | சமூக அறிவியல் - குறுகிய விடை தருக. | 10th Social Science : Civics : Chapter 1 : Indian Constitution
IV. குறுகிய விடை தருக.
1. அரசியலமைப்பு என்றால் என்ன?
• ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படைக் கொள்கைகளைச் சார்ந்து
அமைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படைச் சட்டமே அரசியலமைப்பு என்பதாகும்.
• அது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அச்சாணி ஆகும்.
2. குடியுரிமை என்பதன் பொருள் என்ன?
• சிட்டிசன் எனும் சொல் சிவில் எனும் இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.
• இதன் பொருள் ஒரு ‘நகர
அரசில் வசிப்பவர்' என்பதாகும்.
• இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது.
3. இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை
பட்டியலிடுக.
• சமத்துவ உரிமை
• சுதந்திர உரிமை
• சுரண்டலுக்கெதிரான உரிமை
• சமயச் சார்பு உரிமை
• கல்வி, கலச்சார உரிமை
• அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
4. நீதிப்பேராணை (Writ) என்றால் என்ன?
• நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால்
வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும்.
• சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்யும் நீதிமன்றத்தால் வெளியிடப்படும்
ஆணையாகும்.
5. இந்தியாவின் செம்மொழிகள் எவை?
• தமிழ் (2004)
• மலையாளம் (2013)
• தெலுங்கு (2008)
• கன்னடம் (2008)
• சமஸ்கிருதம் (2005)
• ஒடியா (2014)
6. தேசிய அவசரநிலை என்றால் என்ன?
• போர், வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு,
அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சி அல்லது உடனடி ஆபத்து அல்லது அச்சுறுத்தல்
காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், குடியரசுத் தலைவர், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு
352-ன் கீழ் அவசரநிலையை பிறப்பிப்பது தேசிய அவசர நிலை எனப்படும்.
• போர் அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பின் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்படும்
பொழுது அது ‘வெளிப்புற அவசரநிலை' எனப்படுகிறது.
• ஆயுதமேந்திய கிளர்ச்சிக் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும்பொழுது
அது 'உள்நாட்டு அவசர நிலை' எனப்படும்.
7. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை
மூன்று தலைப்புகளில் பட்டியலிடுக.
• சட்டமன்ற உறவுகள்
• நிர்வாக உறவுகள்
• நிதி உறவுகள்