இந்திய அரசியலமைப்பு - அலுவலக மொழிகள் | 10th Social Science : Civics : Chapter 1 : Indian Constitution
அலுவலக மொழிகள்
அரசியலமைப்பு
சட்டப் பகுதி XVIIஇல் 343 லிருந்து 351 வரையுள்ள
சட்டப்பிரிவுகள் அலுவலக மொழிகள் பற்றி விவரிக்கின்றன.
தொடக்கத்தில் 14 மொழிகள் அரசியலமைப்பின்
8வது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. தற்போது
22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
செயல்பாடு
அரசியலமைப்பின்
எட்டாவது அட்டவணையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மொழிகளை பட்டியலிடுக.
உங்களுக்குத்
தெரியுமா?
2004ஆம் ஆண்டு இந்திய அரசு செம்மொழிகள் எனும் புதிய
வகைப்பாட்டினை ஏற்படுத்த தீர்மானித்தது. அதன்படி 6 மொழிகள்
செம்மொழி தகுதியை பெற்றுள்ளன.
அவை, தமிழ் (2004), சமஸ்கிருதம்
(2005), தெலுங்கு (2008), கன்னடம்(2008),
மலையாளம் (2013) மற்றும் ஒடியா(2014).